Published:Updated:

ஃபேப்ரிக் நகைகளை இனி நீங்களே செய்யலாம்... வழிகாட்டும் அவள் விகடனின் பயிற்சி வகுப்பு

ஃபேப்ரிக் ஜுவல்லரியை சில மணி நேரத்திலேயே நம் உடையின் துணியிலேயே தயாரித்துக்கொள்ளலாம்.

விலையுயர்ந்த ஆடைகள் அணிந்தாலும் அந்த ஆடைக்கு முழு அழகைக் கொடுப்பது ஆபரணங்கள்தாம்.

ஜுவல்லரி
ஜுவல்லரி

தங்க நகைகள் அணிந்துகொள்ள ஆசைப்படும் பெண்கள்கூட, காட்டன், டிசைனர் புடவைகள் மற்றும் வெஸ்டர்ன் ஆடைகள் அணியும்போது ஃபேன்சி நகைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஃபேன்சி நகைகள் அணியும்போது டிரெண்டில் அப்டேட்டா இருப்பதாகக் காட்டிக்கொள்ளலாம். டெரகோட்டா நகைகள், சில்க் த்ரெட் நகைகள், ஆக்ஸிடைஸ்டு மற்றும் ஜெர்மன் சில்வர் நகைகள் வரிசையில் தற்போது களமிறங்குகிறது ஃபேப்ரிக் ஜுவல்லரி.

த்ரெட் ஜுவல்லரி
த்ரெட் ஜுவல்லரி

டிரெடிஷனல், டிரெண்டி, வெஸ்டர்ன் என எல்லா வகையான ஆடைகளுக்கும் பொருந்தும் ஃபேப்ரிக் நகைகளுக்குக் கல்லூரி மாணவிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. எடை குறைவானவை, பராமரிக்க எளிதானவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடைகளுக்குப் பொருத்தமான கலரில், டிசைனில் நகைகள் தேடி கடைகடையாக ஏறி இறங்கியிருப்போம். நாம் நினைக்கும் கலரில் நாம் எதிர்பார்க்கும் டிசைன் இருக்காது. ஏதோ ஒரு குறையுடனே அந்த நகைகளை ஆடைகளுடன் மேட்ச் செய்திருப்போம். ஆனால், ஃபேப்ரிக் நகைகளை சில மணி நேரத்திலேயே நம்முடைய ஆடையின் துணியிலேயே தயாரித்துக்கொள்ளலாம்.

ஜுவல்லரி மேக்கிங்
ஜுவல்லரி மேக்கிங்

செலவு குறைவு என்பதுடன் மேட்ச்சிங்காகவும் இருக்கும். குறைந்த செலவில் அதிக லாபம் தரும் இதை பிசினஸாகவும் செய்யலாம்.

ஃபேப்ரிக் நகைகள் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வரும் டிசைனர் ஶ்ரீபுவை தொடர்பு கொண்டோம். ''எங்க அம்மா டெய்லர். அவங்க தைக்கிற ப்ளவுஸ் துணி, சுடிதார் மெட்டீரியலில் வீணாகும் துணிகளில் என்னுடைய பயன்பாட்டுக்காக முதலில் ஜுவல்லரி செய்ய ஆரம்பிச்சேன்.

ஜுவல்லரி
ஜுவல்லரி

டிரெஸ்ஸுக்கு மேட்ச்சிங்கா, புதுப்புது டிசைனில் நான் நகைகள் போட்டுட்டுப் போகும்போது, என் ஃபிரெண்ட்ஸ், சொந்த்காரங்கனு சிலர் அவங்களுக்கும் செய்து தரும்படி கேட்டாங்க. அப்படி ஆரம்பிச்ச பிசினஸ்தான். காலேஜ் முடிச்ச பிறகு, இன்ஸ்டாகிராம் மூலம் பிசினஸ் செய்ய ஆரம்பிச்சேன்.

மக்கள்கிட்ட இப்போ நல்ல வரவேற்பு இருக்கு. ஒரு நகை செய்ய அதன் டிசைனைப் பொறுத்து அரை நாள்வரை செலவாகும். 100 ரூபாய் செலவு செய்து நகை செய்தால், அதை 300 ரூபாய்க்கும் அதிகமாக விலை வெச்சு விற்க முடியும். சில நுணுக்கங்களை மட்டும் கத்துக்கிட்டு நகை செய்ய ஆரம்பித்தால், மாசம் 30,000 வரை வீட்டிலிருந்தே சம்பாதிக்க முடியும்" என்றார்

Vikatan

இது போன்று குறைந்த முதலீட்டில் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலான இல்லத்தரசிகளின் கனவாக இருக்கும். பிசினஸுடன் சேர்த்து தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக இப்போது இருக்கும் டிரெண்டுக்கு தகுந்தாற் போன்று ஆபரணங்கள் செய்துகொள்வது என்றால் கூடுதல் மகிழ்ச்சிதானே. குறைந்த செலவில் உங்கள் வீட்டில் இருக்கும் துணியைப் பயன்படுத்தி மேட்ச்சிங் நகைகள் செய்ய வழிகாட்டுகிறது அவள் விகடன் வழங்கும் 'ஃபேப்ரிக் ஜுவல்லரி மேக்கிங்' என்ற நேரலைப் பயிற்சி. இந்தப் பயிற்சியை வழங்க இருக்கிறார் ஜுவல்லரி டிசைனர் ஶ்ரீபு. செப்டம்பர் 13-ம் தேதி மாலை 3.30 மணி முதல் 5 மணிவரை. பயிற்சிக் கட்டணம் ரூ. 200. அதைச் செலுத்தி, பதிவுசெய்து பயிற்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்! https://bit.ly/2YmMMCD

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு