Published:Updated:

நிறைவேறாத ஆசைகள்! #MyVikatan

விகடன் வாசகர்

நடிகர் அஜித்தின் `அமர்க்களம்' படத்தில் வரும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் வருவதைப் போல மிகவும் சீரியஸான ஆசைகள் கிடையாது.

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நாம் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் சில நிறைவேறாத ஆசைகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன். நடிகர் அஜித்தின் `அமர்க்களம்' படத்தில் வரும் `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலில் வருவதைப்போல மிகவும் சீரியஸான ஆசைகள் கிடையாது. நம் அனைவரின் வாழ்விலும் ஒருமுறையாவது வந்து போகும் ஆசைதான் இவை.

Representational Image
Representational Image

பெற்றவர்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளை குழந்தைகள் மேல திணிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

எக்ஸாமில் பிட் அடிக்காமல், அரியர் வைக்காமல் அனைவருமே பாஸ் பண்ண வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் அனைத்தையும் லைப்ரரியாக மாற்ற வேண்டும்.

பாலியல் கொடுமை சம்பவம் இல்லாத நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும்.

ஸ்கூல் லீவ் என்று நியூஸில் கேட்டு சந்தோஷப்படாத குழந்தைகளைப் பார்க்க வேண்டும்.

உண்மையிலேயே அதிவேக இன்டர்நெட் சேவை தரும் செல்போன் நெட்வொர்க் எதுவென்று பார்க்க வேண்டும்.

Representational Image
Representational Image

அரசாங்க அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்காமல் சேவைகளைப் பெற வேண்டும்.

அட்வர்டைஸ்மென்ட் இல்லாத டிவி ப்ரோக்ராம் பார்க்க வேண்டும்.

இன்ஸ்பிரேஷன் என்று சொல்லாத, காப்பி அடிக்காத சினிமா பார்க்க வேண்டும்.

Representational Image
Representational Image

கேமரா மொபைல் இருந்தும் செல்ஃபி போட்டோ எடுக்காதவரைப் பார்க்க வேண்டும்.

குப்பைத்தொட்டியைச் சுத்தி குப்பை கிடக்காத ஏரியாவைப் பார்க்க வேண்டும்.

பக்கத்தில் போனாலே வாந்தியும் மயக்கமும் வராத பப்ளிக் பாத்ரூம் பயன்படுத்த வேண்டும்.

`நகருக்கு மிக அருகில்'னு பொய் சொல்லாத ரியல் எஸ்டேட் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும்.

-ருத்ரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/