Published:Updated:

தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத ஜோர்டான்... வாழ்வை வெல்ல வைக்கும் ஐந்து வலிமையான பாடங்கள்!

மைக்கேல் ஜோர்டான்
News
மைக்கேல் ஜோர்டான்

"மீண்டும் மீண்டும் தோல்வி கண்ட போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நின்றேன். அதன் காரணமாகவே இந்த வெற்றி!" - மைக்கேல் ஜோர்டான்

உலகப் புகழ் பெற்ற கூடைப் பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள சில பாடங்கள் உண்டு.

முன்னேற விரும்பும் களத்துக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது மைக்கேல் ஜோர்டானின் உயரம் 5 அடி 11 அங்குலம். என்றாலும் கூடைப்பந்து அணியில் பங்குபெற அந்த உயரம் போதாது என்று கருதப்பட்டது. போனால் போகிறது என்று அந்த அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அடுத்த ஒரு வருடத்துக்குள் கடுமையான முயற்சிகள் காரணமாக தன் உயரத்தை 4 அங்குலங்கள் கூட்டிக்கொண்டார்.

Michael Jordan in 2013
Michael Jordan in 2013
Bryan Horowitz, CC BY-SA 2.0, via Wikimedia Commons

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தோல்வி கண்டு துவள வேண்டாம்

“நான் இதுவரை 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஷாட்களைத் தவற விட்டிருக்கிறேன். நான் பங்குகொண்ட போட்டிகளில் 300ல் தோற்றிருக்கிறேன். போட்டி இறுதியில் வெல்வதற்கான ஷாட்டை என் அணியினர் என்னை நம்பி ஒப்படைத்த போது 26 முறை அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றவில்லை. மீண்டும் மீண்டும் தோல்வி கண்ட போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நின்றேன். அதன் காரணமாகவே இந்த வெற்றி” என்று மைக்கேல் ஜோர்டான் கூறியிருக்கிறார்.

மாற்றம் தேவைப்படும்போது தயங்காமல் மாற வேண்டும்

1993 அக்டோபர் 6 அன்று தொழில்முறை கூடைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மைக்கேல் ஜோர்டான் அறிவித்தது பலருக்கும் பலத்த அதிர்ச்சியை அளித்தது. அடுத்தடுத்து மூன்று சாம்பியன்ஷிப் போட்டிகளில் அப்போது அவர் வெற்றி பெற்றிருந்த நிலையில் இப்படி ஓர் அறிவிப்பு. ஆனால் மைக்கேல் ஜோர்டான் தன் சிந்தனையைத் தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். 'மாறுதல் வேண்டும் என்று நினைத்தேன். ஒரு செயலைத் தொடர்ந்து செய்வது களைப்பை தந்தது. பேஸ்பால் விளையாட்டில் கவனம் செலுத்த நினைத்தேன். இழந்து கொண்டிருந்த என் தந்தையை கவனிக்க எண்ணினேன். இன்றுவரை என் முடிவை நினைத்து நான் வருத்தப்படவில்லை’.

மைக்கேல் ஜோர்டான்
மைக்கேல் ஜோர்டான்
wiki

பிறர் துயர் துடைப்பதில் நமது பங்களிப்பு அவசியம்

செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து தனது அடுத்த ஆண்டு ஊதியத்தை முழுவதுமாக இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் துயர் நீக்கும் பணிகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்தார் மைக்கேல் ஜோர்டான். இந்தத் தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ஒரு லட்சம் டாலர் நன்கொடை வழங்கினார்.

சூப்பர்மேன்களும் மனிதர்கள்தான்

சிறிதும் பயம் இல்லாதவர் என்ற பிம்பத்தை தனது விளையாட்டின் மூலம் ஏற்படுத்தியவர் மைக்கேல் ஜோர்டான். ஆனால் அவர் தனது சில பலவீனங்களை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்கியதில்லை. நீரில் செல்வது என்றாலே அவருக்கு பயம் உண்டு. காரணம் கடலில் மூழ்கிய ஒருவரை சிறுவயதில் காண நேர்ந்ததுதான். தவிர அவரே ஒருமுறை நீரில் மூழ்கிப் பின் ஒருவ​ழியாக மீட்கப்பட்டிருக்கிறார். சிறிய படகுகளில் செல்லும் போதும், கடலில் செல்லும் போதும் எப்போதுமே தனக்கு ஒரு வித அமைதியின்மை இருக்கும் என்பதை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதே நேரம் இந்தப் பயம் தனது வாழ்வின் குறிக்கோளுக்கு தடைக்கல்லாக இருக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.