Published:Updated:

உடைத்துப் பேசுவோம்:``கூட்டுப் பாலியல் வன்கொடுமை எங்களுக்கு நடந்துருக்கு!"- வலி பகிரும் இணையர்கள்

கார்த்திக் - கிருஷ்ணா

உண்மையான அன்பும், காதலும் யாருக்குனாலும் யார் மீதுனாலும் வரலாம்! நாங்க தைரியமா வெளியில் வந்து வாழுறோம். இங்குள்ள மக்கள் பலரும் எங்க பெட்ரூம்குள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கத்தான் விரும்புறாங்க!

உடைத்துப் பேசுவோம்:``கூட்டுப் பாலியல் வன்கொடுமை எங்களுக்கு நடந்துருக்கு!"- வலி பகிரும் இணையர்கள்

உண்மையான அன்பும், காதலும் யாருக்குனாலும் யார் மீதுனாலும் வரலாம்! நாங்க தைரியமா வெளியில் வந்து வாழுறோம். இங்குள்ள மக்கள் பலரும் எங்க பெட்ரூம்குள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கத்தான் விரும்புறாங்க!

Published:Updated:
கார்த்திக் - கிருஷ்ணா
ஆனந்த விகடன் `உடைத்துப் பேசுவோம்' பகுதிக்காக தன்பால் ஈர்ப்பாளர்கள் கார்த்திக் மற்றும் கிருஷ்ணாவைச் சந்தித்தோம். காதலித்து, திருமணம் செய்து கொண்டு இணையராக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தோம். புன்னகை மாறாமல் கரம் பற்றி இருவரும் பதில் அளித்தனர். அவர்களிடம் பேசியதிலிருந்து....
கார்த்திக் - கிருஷ்ணா
கார்த்திக் - கிருஷ்ணா

ஷூட்டிங் மேக்கப்மேன், ஆர்ட்டிஸ்ட் அசிஸ்டென்ட், ஆக்டர் என நான் எனக்கு பிடிச்ச வேலையை செய்துட்டு இருக்கேன் என்றவாறு கிருஷ்ணா பேசத் தொடங்கினார். நான் சகோதரன் அமைப்பில் வைத்துதான் கார்த்திக்கைச் சந்திச்சேன். ரெண்டு பேருமே மாஸ்க் போட்டிருந்ததால ஒருத்தரையொருத்தர் பார்த்துக்க முடியல. இருவரும் கண்களாலேயே பேசிக்கிட்டோம். எனக்கும் அவனை பிடிச்சிருந்தது. அவனுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. மறுநாள் போன் நம்பர் வாங்கி ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம். மூன்று மாசம் கழிச்சு அவனுடைய வீட்டில் ஒரு பிரச்னை வரவும் அவனை என்கூட கூட்டிட்டு வந்துட்டேன். நாங்க ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்கிட்டோம். எங்க திருமணத்தை ரிஜிஸ்டர் பண்றதுக்காக சட்ட ரீதியாகப் போராடிகிட்டு இருக்கோம். சீக்கிரமே அதையும் செய்திடுவோம் என்றதும் கார்த்திக் பேச ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் சகோதரன் அமைப்பில் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். லவ் இவங்க மேல் தான் வரணும்னு எந்த அவசியமும் இல்லை. யார் மீதுனாலும் காதல் வரலாம்! வாழப்போற வாழ்க்கை ஒருமுறைதான்! அதை ஏன் மத்தவங்களுக்காக வாழணும்? என்றதும் கிருஷ்ணா அவர் கரம் பற்றிப் பேச்சைத் தொடர்ந்தார்.

இங்க பையன், பொண்ணு தான் கல்யாணம் பண்ணிக்கணும்னா அவங்க அவங்களுடைய வாழ்க்கையை சரியா வாழுறாங்களா? அவங்க ரெண்டு பேருக்கிடையிலேயே சிலர் உண்மையா இல்லாம இருக்காங்களே! உண்மையான அன்பும், காதலும் யாருக்குனாலும் யார் மீதுனாலும் வரலாம்! நாங்க தைரியமா வெளியில் வந்து வாழுறோம். பலர் உள்ளுக்குள்ளேயே அடைஞ்சு வாழ்ந்துட்டு இருக்காங்க. இங்குள்ள மக்கள் பலரும் எங்க பெட்ரூம்குள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கத்தான் விரும்புறாங்க.

கார்த்திக் - கிருஷ்ணா
கார்த்திக் - கிருஷ்ணா

இன்னும் சிலர் நேரடியாகவே என்கிட்ட எப்படி செக்ஸ் வச்சிப்பீங்கன்னு கேட்பாங்க. அவங்களுக்கு செக்ஸ் தவிர எதுவுமே தெரியாது. அப்படி கேட்கிறவங்ககிட்ட அப்ப உங்க மனைவிகிட்ட அதை மட்டும்தான் எதிர்பார்க்குறீங்களான்னு கேட்பேன். அமைதியா போயிருவாங்க. இங்க எல்லாத்துக்கும் அடிப்படை காதலும், புரிதலும் தான்! அது எங்க ரெண்டு பேர்கிட்டேயும் நிறையவே இருக்கு என்றதும் கார்த்திக் பேசத் தொடங்கினார்.

எனக்கு அண்ணன், அக்கா எல்லாம் இருக்காங்க. ஆரம்பத்தில் நான் தன்பால் ஈர்ப்பாளர்னு சொன்னப்ப யாரும் ஏத்துக்கல. சகோதரன் அமைப்புதான் என்னை புரிஞ்சுகிட்டாங்க. இப்ப அவங்களைத்தான் என் குடும்பமா நினைக்கிறேன். என் அக்கா வீட்டுக்காரர் எல்லாம் என்னை ஏத்துக்கல. அதனால என் அக்காக்களும் என்கிட்ட பேசுறது இல்ல. அவங்களைச் சொல்லியும் தப்பில்ல. அவங்க சூழல் அப்படி! என்றதும் கிருஷ்ணா நிறுத்தி எங்க வீட்டில் என் அண்ணனும், அண்ணியும் ஏத்துக்கிட்டாங்க. ஆனா, சொந்தக்காரங்கதான் யாரும் புரிஞ்சுக்கல. நிச்சயம் ஒருநாள் எங்களை எல்லாரும் புரிஞ்சுப்பாங்கன்னு நம்புறேன் என்றவர்கள் அவர்களுக்கு நிகழ்ந்த வன்முறைகள் குறித்துப் பேசினார்கள்.

கிருஷ்ணா பேசும்போது, 'சின்ன வயசில கேலி, கிண்டல் எல்லாம் நடந்திருக்கு. நான் ஹாஸ்டலில் தங்கிதான் படிச்சேன். அப்ப அங்கிருக்கிற வாத்தியார் மூலமாகவே பாலியல் ரீதியான வன்முறைகளைச் சந்திச்சிருக்கேன். அதைப் பற்றி உடன் படிக்கிற பசங்ககிட்ட சொன்னப்ப அவங்ககூட மட்டும்தான் பண்ணுவியா என்னுடனும் பண்ணுன்னு மிரட்டி ரொம்ப காயப்படுத்தியிருக்காங்க. சில சமயம் மூச்சுக்கூடவிட முடியாம வலி தாங்க முடியாம கதறி அழக்கூட செய்திருக்கேன். ஆனா, என்னைவிட கார்த்திக்தான் அதிக கஷ்டத்தையும், வலியையும் அனுபவிச்சிருக்கான் என்றதும் கார்த்திக் பேசினார்.

கார்த்திக் - கிருஷ்ணா
கார்த்திக் - கிருஷ்ணா

பிடிக்கலைன்னாலும் வலுக்கட்டாயமா ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் பாலியல் ரீதியா துன்புறுத்தி இருக்காங்க. லவ் பண்றேன்னு சொல்லி நம்ப வச்சு தனியா கூட்டிட்டு போய் அவங்க நண்பர்கள் 4,5 பேரை கூப்பிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்காங்க. அப்படி பண்ண முடியாதுன்னு சொல்றப்ப கத்தியை கழுத்தில் வச்சு மிரட்டியெல்லாம் அவங்க ஆசையை நிறைவேற்றி இருக்காங்க. அப்படி பல விஷயங்களை எதிர் கொண்டிருக்கிறேன். என்னை மாதிரி பலர் இன்னமும் அதை சந்திச்சிட்டு இருக்காங்க என்றவர் உடைந்து அழவும் கிருஷ்ணா அவரை சமாதானம் செய்ய முயன்றார்.

எவ்வளவு காயங்களையும், வலிகளையும் கடந்து வந்திருந்தாலும் இன்று அவர்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்களுடைய வலியையும், காயங்களையும் குறித்து பல விஷயங்கள் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism