Published:Updated:

குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களில் மறைந்திருக்கும் ஆபத்து... இனி இவற்றையெல்லாம் கவனியுங்கள்!

குழந்தைகள்
News
குழந்தைகள்

நம் முன்னோர்கள் நமக்குப் பழக்கப்படுத்திய மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் ஆரோக்கியமானவை. ஆனால், இப்போது மர விளையாட்டுப் பொருள்களிலும் குழந்தைகளைக் கவர்வதற்காக பெயின்ட் பயன்படுத்துகிறார்கள்.

குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களில் மறைந்திருக்கும் ஆபத்து... இனி இவற்றையெல்லாம் கவனியுங்கள்!

நம் முன்னோர்கள் நமக்குப் பழக்கப்படுத்திய மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் ஆரோக்கியமானவை. ஆனால், இப்போது மர விளையாட்டுப் பொருள்களிலும் குழந்தைகளைக் கவர்வதற்காக பெயின்ட் பயன்படுத்துகிறார்கள்.

Published:Updated:
குழந்தைகள்
News
குழந்தைகள்

`ரசாயனம் கலந்த விளையாட்டுப் பொருள்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம்' என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். ரசாயனம் கலந்த விளையாட்டுப் பொருள்கள் என்ன மாதிரியான பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும், குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜ் பகிரும் தகவல்கள்...  

விளையாட்டுப் பொருள்கள்
விளையாட்டுப் பொருள்கள்

``அமைச்சர் கூறிய கருத்து நூறு சதவிகிதம் உண்மை. பல ஆண்டுகளாக மருத்துவர்கள் அந்தக் கருத்தைப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இப்போது அமைச்சர் அதை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தியிருக்கிறார். குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மூளை வளர்ச்சி, யோசிக்கும் தன்மை போன்றவை சம்பந்தப்பட்டவை. மருந்து, மாத்திரைகள் வாங்குவதைவிட அதிக கவனத்துடன் விளையாட்டுப் பொருள்களை வாங்க வேண்டும்.

பல வண்ணங்களில் பார்க்க அழகாக இருக்கிறது என்று பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்களை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள். சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்களில் லெட் என்ற வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்கள் வாங்கும்போது `லெட் ஃப்ரீ' என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகப் பார்த்து வாங்குவது நல்லது.

விளையாட்டு
விளையாட்டு
pixabay

உணவுப்பொருளுக்கு அக்மார்க், தங்கத்துக்கு ஹால்மார்க் தரச்சான்றுகள் கொடுக்கப்படுவது போன்று விளையாட்டுப் பொருள்களுக்கு பி.ஐ.எஸ் தரச்சான்று கொடுக்கப்படுகிறது. உணவுப் பொருள்களில் காலாவதி தேதியைக் கவனிப்பது போன்று விளையாட்டுப் பொருள்களை வாங்கும் முன் பி.ஐ.எஸ் தரச்சான்று இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

நம் முன்னோர்கள் நமக்குப் பழக்கப்படுத்திய மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் ஆரோக்கியமானவை. ஆனால், இப்போது மர விளையாட்டுப் பொருள்களிலும் குழந்தைகளைக் கவர்வதற்காக பெயின்ட் பயன்படுத்து கிறார்கள். அப்படி பெயின்ட் அடித்த பொருள்களை குழந்தைகள் வாயில் வைக்கும்போது பெயின்ட் உரிந்து வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பு அதிகம். அதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நிச்சயம் வரும். எனவே, பெயின்ட் செய்யப்பட்ட பொருள்களை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, இயற்கை நிற மரவிளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுங்கள்.

பனையோலை கைவினைப் பொருள்
பனையோலை கைவினைப் பொருள்

சிறிய பட்டன்கள், ஜிப், சிறிய வகை செல்கள், போன்றவை இருக்கும் விளையாட்டுப் பொருள்கள் இன்னும் ஆபத்தானவை. அவற்றை குழந்தைகள் விழுங்கினால் சில நேரங்களில் அறுவைசிகிச்சை வரை செல்லும் அபாயம் இருப்பதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே போன்று கூர்மையான முனைகள் உள்ள விளையாட்டுப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சாஃப்ட் டாய்ஸ் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதில் நிரப்பப்பட்டு இருக்கும் பஞ்சு நிச்சயம் சுவாசப் பிரச்னைக்கு வழிவகுக்கும். மேலும் அந்த பொம்மைகள் எளிதில் அழுக்கு அடையும் தன்மை உடையவை. அவற்றை குழந்தைகள் வாயில் வைப்பார்கள் அல்லது பயன்படுத்திவிட்டு கைகளைக் கழுவாமல் உணவுப் பொருள்களில் கை வைப்பார்கள் இதனால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், வாந்தி, பேதி போன்றவை வர வாய்ப்புகள் அதிகம். 

குழந்தைகள்
குழந்தைகள்

நம் முன்னோர்கள் நமக்குப் பழக்கப்படுத்திய பல்லாங்குழி, தாயம், தலையாட்டி பொம்மை, மர ராட்டினம் போன்றவை மூளைக்கு வேலை கொடுக்கக்கூடியவை. அவற்றை குழந்தைகளின் வயதுக்கேற்ப அறிமுகம் செய்யுங்கள்.

குழந்தைகளை உடலளவில் ஆரோக்கியமாக்கும் விளையாட்டுகளைப் பழக்கப்படுத்துங்கள். குழந்தைகளின் வயதுக்கேற்ற மைண்ட் கேம்ஸ் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை அவர்கள் பாதுகாப்பாக விளையாட உதவலாம்.

குழந்தைகள் அழுகிறார்கள், அடம் பிடிக்கிறார்கள், சாப்பிட மறுக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் கைகளில் மொபைல் போன்களைக் கொடுக்காதீர்கள். அது, அவர்களின் சிந்தனையையும், உடல் ஆரோக்கியத்தையும் நிச்சயம் கெடுக்கும். மீன், நட்சத்திரம், நிலா, வானம், ஆறு எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு நேரில் காண்பியுங்கள்.

போன்
போன்

அழுதால், அடம் பிடித்தால் கேட்ட பொருள் கிடைக்கும் என்று குழந்தைகளுக்குத் தெரியாது. அடம் பிடிக்கும்போது அவர்கள் கேட்டதைக் கொடுத்து நாம்தான் அதையும் பழக்குகிறோம். எனவே, எல்லா நேரங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துச் செயல்படுவது நல்லது" என்கிறார் மருத்துவர் பழனிராஜ்.