Published:Updated:

கால்படாத மைதானங்கள்..! - கொரோனாவும் குழந்தைகளின் உலகமும் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

``போர் அடிக்குது ....'' இந்த இரட்டை சொல் கேளா குடும்பங்கள் இங்கு இருக்க முடியாது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மே மாதம் முடிந்து, ஜூனை அடையும்நாள்கள் கரைந்த படி நகர்கின்றது. இத்தனை நாள் சோம்பியே சுழன்ற கடிகாரம் படபடத்து இயங்க ஆயத்தமாய் நிற்கிறது.

புதிய பள்ளியும், சரசரத்த புது சீருடையும், வாசனை கமழும் புத்தகமுமாய் நகர காத்திருக்கிறது அவர்களின் வகுப்பறை நாள்கள்.

கோடை விடுமுறையின் ஊர் சுற்றலும், பாட்டி வீட்டின் கதைகளும் பேசியபடி, துவங்கும் பள்ளியின் முதல் வாரங்கள் .

Representational Image
Representational Image

பல் விழுந்த கதைகளுக்கும், கரம் கோத்த நடைகளுக்குமாய் காத்துக்கிடக்கிறது கால்படா மைதானங்கள். மார்ச் தொடங்கி மே வரை நமக்கு கோடை நாள்கள்தான் எனினும், இந்த ஆண்டின் விடுமுறையோ குழந்தைகளின் எல்லா குதூகலத்தையும் வீடு என்னும் அடைப்புக் குறியினுள் அடைத்துவிட்டிருந்தது.

கொரோனாவின் தாக்கம் பொருளாதாரத்தை தகர்த்தது. மனித இயல்பை முடக்கியது. பெண்களின் அழுத்தத்தை இரு மடங்காக்கியது என பல தர்க்கங்கள், விவாதங்களாகவும், புலம்பல்களாகவும் விரக்தியாவும் நாம் கேட்டும், பார்த்தும் கடந்திருக்கிறோம்.

ஆனால், ஒருவரின் உலகத்தை மட்டும் நாம் உணரவே முயலவில்லை இந்த நுண் கிருமியின் தொற்றுதலில்.

குழந்தைகள் ...

ஆம். கொரோனா, குழந்தைகளின் உள்ளங்களை, அவர்களின் ஓட்டங்களை, வெளி காற்றோடிய சூழல்களை, நட்புகளை, தெரு விளையாட்டுகளை சிதைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பாதுகாப்பு என்ற பெயரில் நாம் அவர்களை ஒரு தனிமை உலகத்தில், புரிதலற்ற வெளியில், எதிர் கேள்வி அற்ற நிலைக்கு அவர்களை நகர்த்தி இருக்கிறோம் என்பதே உண்மை. போர் அடிக்குது....... இந்த இரட்டை சொல் கேளா குடும்பங்கள் இங்கு எதுமில்லை.

Representational Image
Representational Image

குழந்தைகளின் உலகத்தில் பெற்றோராகிய நாம் பெரியவர்கள். அவர்களின் உலகத்தில் அவர்களோடு தொடர்ந்து பயணிக்க நம்மால் இயல்வதில்லை. பள்ளி நாள்களுக்கான ஏக்கங்கள் அதிகரித்தபடி இருக்கிறது அவர்களின் ஆழ்மனதில். பகிர்ந்து உண்ண வேண்டிய தின்பண்டங்களும், இன்னும் வாங்கப்படாத வாட்டர் பாட்டில்களும் அவர்களின் கனவுகளில் நச்சரிக்கத் தொடங்கிவிட்டன. தினமும் பழகிக் கொள்கிறார்கள். இருப்பினும் முகக் கவசத்துக்குள் திணறியபடி அடைகிறது அவர்களின் ஆரவாரங்கள். அருகமர விடாத நண்பனின் தூரத்துப் பார்வையை நெருங்கிவிடத் துடிக்கிறது கள்ளக் குழந்தை மனது.

கவனிக்க வேண்டிய பாடங்கள், அடிக்கடி கை கழுவலில் கரைந்து போக இருக்கின்றன. Zoom app-ம் , online வருகைப் பதிவுகளும் தொடர்ந்து விடுமோ எனும் பதற்றம் பரவிக் கிடக்கிறது மனதெங்கும்.

மீண்டும் வருவேன் எனச் சொல்லிவிட்டு வந்த வகுப்பறைகளின் கரும் பலகைகள் காத்து நிற்கிறது. தன் வெள்ளை வண்ணத்தில் குழந்தைகளின் அறியாமை இருள் அழிக்க, வாட்ச்மேன் தாத்தாவும், வேனின் பாட்டியும் மருகுகின்றனர் மஞ்சள் வாகனத்தின் மலர்ந்த ரோஜாக்களுக்காய் ...

Representational Image
Representational Image

தார்சாலை ஓரத்தின் ஹாரன் ஒலிகளுக்காய் ஏங்கி தவிக்கிறது நம் வீட்டின் இரு பிள்ளைகாதுகள்.

புரியும் வயது அவர்களுக்கில்லை. கொரோனாவையும் குழந்தைகளையும் என்ன செய்ய என்றே தெரியவும் இல்லை!

-மருத்துவர். சித்ரா சுப்பையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு