Published:Updated:

சுத்தம் செய்யலாமா?

துணியை ஈரப்பதமாக இருக்கும் வண்ணம் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் லிக்விட்டில் நனைத்துக் கொள்ளலாம்.

பிரீமியம் ஸ்டோரி
இன்றைய தேதியில் மினிமம் இரண்டு எலெக்ட்ரானிக் சாதனமாவது இல்லாத வீடுகள் மிகவும் குறைவு. நாம் நிறைய நேரம் செலவழிப்பதும், எலக்ட்ரானிக் பொருள்களுடனேயே.
gadgets cleaning
gadgets cleaning

இந்த நிலையில் நாம் மற்றவர்களுடன் நேரடித் தொடர்பில் இல்லாமல் இருந்தாலும், எலெக்ட்ரானிக் பொருள்கள் மூலம் தொடர்பு ஏற்பட வாய்ப்பு உண்டுதானே. இது கொரோனாக்காலம். முன்னெச்சரிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருக்கவேண்டிய தருணம். எனவே, நாம் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது, இந்த இ-பொருள்களையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அடுத்த சிலவாரங்கள் எல்லோருமே வீட்டில் இருக்கப்போகிறோம். அதனால் எந்தெந்த எலக்ட்ரானிக் பொருள்களை சேதப்படுத்தாமல் எப்படிச் சுத்தம் செய்வது... சில சிம்பிள் டிப்ஸ்!

gadgets cleaning
gadgets cleaning

லேப்டாப்:

கடந்த சில வாரங்களாகவே டிரெண்டிங்கில் மோஸ்ட் வான்டடாக இருப்பவர், அண்ணன் லேப்டாப்தான். அதில்தான் வேலை, அதில்தான் பொழுதுபோக்கு என எல்லோருக்குமே பொழுது அதில்தான் கழிகிறது. அதைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருந்தால் எப்படி... லேப்டாப் அல்லது கணினியைச் சுத்தம் செய்யும்போது பவர் சோர்ஸை அன்பிளக் செய்துவிட்டுத்தான் சுத்தம் செய்ய வேண்டும். துடைப்பதற்கு டிஸ்ட்டில்ட் வாட்டர் பயன்படுத்தலாம் அல்லது கணினிக்கென்று பிரத்யேகக் கையேடு கொடுக்கப்பட்டிருக்கும், அந்தக் கையேட்டில் குறிப்பிட்டுள்ள கெமிக்கல் பயன்படுத்தலாம். கையில் கிடைக்கும் துணியை வைத்து சுத்தம் செய்யக் கூடாது. பருத்திபோன்ற மென்மையான துணிகொண்டு அழுத்தம் கொடுக்காமல் துடைக்க வேண்டும். நேரடியாகத் திரையிலோ அல்லது கணினியிலோ தண்ணீர் தெளிக்கக் கூடாது, துணியை முழுவதுமாக நீரில் முக்கி எடுத்து லாரி கழுவுவது போலவும் கழுவக்கூடாது. தண்ணீரின் அளவிலும், துடைக்கும்போது தருகிற அழுத்தத்திலும் கவனம் தேவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

gadgets cleaning
gadgets cleaning

ஸ்மார்ட் போன்:

கைகளைச் சுத்தமாகக் கழுவுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதே முக்கியத்துவத்தை நம் மொபைலை சுத்தமாக வைத்திருக்கவும் கொடுக்க வேண்டும். ‘வாட்டர் ரெஸிஸ்டன்ட்’ தானே என மொபைலிலும் நேரடியாகத் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்வது அறவே கூடாது. ஈரப்பதமான துணி கொண்டு மென்மையாகத் துடைக்க வேண்டும். துடைக்கும் போது மொபைல் ஸ்பீக்கர், சார்ஜிங் பாய்ன்ட், ஹெட்போன் ஜாக் முதலானவற்றில் தண்ணீர் சென்று சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவான கிளீனிங் லிக்விட் கொண்டும் மொபைலை சுத்தம் செய்யக்கூடாது. மொபைல்களுக்கென இருக்கும் பிரத்யேக கிளீனிங் லிக்விட் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும். ஐபோன் என்றால் 70 சதவிகிதம் ‘ஐஸோ ப்ரொப்பில் ஆல்கஹால்’ லிக்விட் கொண்டு சுத்தம் செய்யலாம் என அந்நிறுவனமே பரிந்துரைக்கிறது (ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்கள் அனைத்திற்கும் இது பொருந்தும்).

gadgets cleaning
gadgets cleaning

ரிமோட்:

டி.வியைவிட அதிக முக்கி யத்துவம் கொடுக்க வேண்டியது ரிமோட்களுக்குத்தான். அவைதான் வீட்டில் இருப்பவர்கள் அனைவரி டையேயும் இலகுவாகப் புகுந்து பயணப்படும் தன்மை உடையது. ரிமோட்டைத் துடைப்பதற்குச் சிறிய துணியை உபயோகிப்பது, நாம் சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும். சுத்தம் செய்யும் முன் பேட்டரிகளை வெளியே எடுத்து விடுவது சிறந்தது. பட்டன்களுக்கு இடையே இருக்கும் அழுக்கினைத் துணிகொண்டு சுத்தம் செய்ய முடியவில்லை எனில் டூத் பிக்கைப் பயன்படுத்தலாம். துணியை ஈரப்பதமாக இருக்கும் வண்ணம் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் லிக்விட்டில் நனைத்துக் கொள்ளலாம்.

gadgets cleaning
gadgets cleaning

டி.வி:

‘டி.விதானே, தண்ணி ஊத்தித் துடைச்சாப் போச்சு’ என அசட்டையாக இருத்தல் கூடவே கூடாது. இப்போது வரும் தொலைக்காட்சிகள் சிலவற்றில் டிஸ்ப்ளேயில் ஸ்பெஷல் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே அதனைச் சுத்தம் செய்யும்போதும் கவனம் தேவை. ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் அவர்களின் மாடலுக்கேற்ப சுத்தம் செய்யும் நடைமுறையைக் கையேட்டில் கொடுத்திருப்பார்கள். அதனைப் பின்பற்றிச் சுத்தம் செய்வதுதான் சிறந்தது. லேப்டாப்களுக்குப் பின்பற்றப்படும் நடைமுறையை டி.விக்கும் பின்பற்றலாம். சுத்தம் செய்யும் முன் அன்பிளக் செய்துவிடுதல் நலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு