Published:Updated:

"கட்டட வேலையில கம்மி சம்பளம். திரும்ப இதே தொழிலுக்கு வந்துட்டோம்!"- மதுரை பூம் பூம் மாட்டுக்காரர்கள்

மதுர மக்கள்: பூம் பூம் மாட்டுக்காரர்கள்
News
மதுர மக்கள்: பூம் பூம் மாட்டுக்காரர்கள்

மதுர மக்கள்: "இப்போதான் எங்க சமூகத்துல இருந்து புள்ளைக பள்ளிக்கூடம் படிக்கன்னு கிளம்புச்சுங்க. அதையும் இந்த கொரோனா கெடுத்துடுச்சு. எல்லாத்துக்கும் காலம்தான் பதில் சொல்லணும்!" - பூம் பூம் மாட்டுக்காரர்கள்

Published:Updated:

"கட்டட வேலையில கம்மி சம்பளம். திரும்ப இதே தொழிலுக்கு வந்துட்டோம்!"- மதுரை பூம் பூம் மாட்டுக்காரர்கள்

மதுர மக்கள்: "இப்போதான் எங்க சமூகத்துல இருந்து புள்ளைக பள்ளிக்கூடம் படிக்கன்னு கிளம்புச்சுங்க. அதையும் இந்த கொரோனா கெடுத்துடுச்சு. எல்லாத்துக்கும் காலம்தான் பதில் சொல்லணும்!" - பூம் பூம் மாட்டுக்காரர்கள்

மதுர மக்கள்: பூம் பூம் மாட்டுக்காரர்கள்
News
மதுர மக்கள்: பூம் பூம் மாட்டுக்காரர்கள்
"எங்களோட பொழப்பே ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து போறதுதான். இந்த கொரோனா வந்ததுல இருந்து ரெண்டு வருசமா எங்கயும் நகர முடியல. எங்களுக்கு எதுன்னாகூட, மூணு வேளையில ரெண்டு வேளை கொறச்சுக்கூட சாப்பிட முடியும். ஆனா எங்கள நம்பி இருக்கற நாப்பது, அம்பது பசு மாட்டுக்கு என்னத்த பதில் சொல்றது! அங்க அங்க இருக்கற தொண்டு நிறுவனங்கள் மூலமாதான் கொஞ்சம் நிவாரணம் கிடைச்சது."
காளியப்பன்
எதிர்பார்ப்புகளுடன் பேசத் தொடங்குகிறார் காளியப்பன். மதுரை பூம் பூம் மாட்டுக்காரர்கள் மக்களின் பிரதிநிதி. மதுரை சக்கி மங்கலம் பகுதியில்தான் பூம் பூம் மாட்டுக்காரர்கள் குடும்பமாக வசித்துவருகின்றனர்.
பூம் பூம் மாட்டுக்காரர்கள்
பூம் பூம் மாட்டுக்காரர்கள்

பூம் பூம் மாடுகளை எப்படி வளர்க்குறீங்க?

"பெரும்பாலும் எல்லா மாடுகளையும் எங்களுக்கோ அல்லது கோயிலுக்கோ காணிக்கையா குடுப்பாங்க. அப்படி காணிக்கையா வர்ற மாடுகளை எங்க நிலைமைய சொல்லி நாங்க வளர்க்க வாங்கிப்போம். வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ மாட்டுக்குச் சொந்தக்காரங்க கிட்ட மாட்ட கூட்டிப் போயி காமிச்சுட்டு வருவோம். அழகர் கோயில், சங்கரன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்னு எங்க இருந்தாலும் மாட்டுக்குச் சொந்தக்காரங்களைத் தேடிப்போயி ஆசீர்வாதம் பண்ணிட்டு வருவோம். மாடுகளை ஜோடிக்கிறதுக்கு முன்னாடிகூட அடம் பண்ணும். ஆனா, நீங்க இந்தப் போர்வைய எடுத்துப் போர்த்துனீங்கன்னா பச்சக்குழந்த மாதிரி கூடவே வந்துரும். யாருக்கும் எந்தச் சேதாரமும் ஏற்படுத்தாது!

கன்றா இருக்கும்போதே கூட்டி வந்துருவோம். எதிர்த்தாப்பள இருக்கிற ஆட்களை எப்படி ஆசீர்வாதம் பண்ணணும்னு வாழைப்பழத்த குடுத்துப் பழக்குவோம். இப்படித்தான் பூம் பூம் மாடுகள் பழக்கப்படுத்தப்படுது. தலையாட்டச் சொன்னா, தலை ஆட்டும். முத்தம் குடுக்கச் சொன்னா முத்தம் குடுக்கும். இந்த பூம் பூம் மாடுகளைப் பார்த்துக்கற ஆட்களைத் தெய்வத்தைப் பார்க்குற மாதிரிதான் பார்ப்பாங்க."

பூம் பூம் மாட்டுக்காரர்கள்
பூம் பூம் மாட்டுக்காரர்கள்

எப்படி இருக்கும் உங்க பயணம்?

"காலையில நாலு மணிக்கு மாட்ட ஜோடிச்சுட்டுக் கிளம்புவோம். ஒரு அஞ்சு அல்லது ஆறு கிலோமீட்டருக்கு நடந்து போவோம். ஏழு மணியாகிறவரைக்கும் ஒரு ரெண்டு மணி நேரம் சுத்துவோம். கையில அஞ்சு பத்துன்னு குடுப்பாங்க. பத்து மணிக்கு மேல ஆளு யாரும் இருக்க மாட்டாங்க. எங்கயாச்சும் படுத்துக் கிடந்துட்டு மாட்டுக்குத் தீவனம் குடுத்துட்டு, திரும்ப நடக்க ஆரம்பிப்போம். ஆறு ஏழு மணிக்கு மேல திரும்பவும் ஆளுங்க இருக்க மாட்டாங்க. அப்படியே அடுத்தடுத்த ஊருன்னு கிளம்பிப் போவோம். இப்படி ஒரு ஆறுமாசம் சுத்துவோம். மீதி ஆறுமாசம் திரும்ப வீட்டுக்கு வந்து குடும்பத்தைப் பார்த்துட்டுத் திரும்பக் கிளம்பிருவோம். ஒரு மாசத்துக்கு முந்நூறு கிலோமீட்டர் வரைக்கும் நடந்தே போவோம். மாசம் ஒரு ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும். அதுல மாட்டுக்குத் தீனின்னு ரெண்டாயிரம் வரைக்கும் காலியாயிடும். இப்படித்தான் எங்க பொழப்பு ஓடுது."

லாக்டௌன் வாழ்க்கை எப்படி இருக்கு?

பூம் பூம் மாட்டுக்காரர்கள்
பூம் பூம் மாட்டுக்காரர்கள்

"வேலை வெட்டின்னு எதுவும் இல்ல. எங்கயும் நகரவும் முடியாம இருந்தப்போ ஒரு சிலர் அரிசி பருப்புன்னு கொண்டு வந்து குடுத்தாங்க. அப்பவும் `எங்களுக்கு வேணாம், மாடுகளுக்கு எதுனா உதவி செய்யுங்க’ன்னு கேட்டோம். இந்த வேலைய விட்டுட்டு வேற வேலைக்குப் போகலாம்னு கட்டட வேலைக்குக் கூட்டிப்போனாங்க. பதினாலு மணி நேர வேலை இருக்கும். ஆனா, சம்பளமும் குறைவாதான் இருக்கும். அதுக்கு நம்ம வேலையே பரவாலன்னு தோணுச்சு. இப்போதான் எங்க சமூகத்துல இருந்து புள்ளைக பள்ளிக்கூடம் படிக்கன்னு கிளம்புச்சுங்க. அதையும் இந்த கொரோனா கெடுத்துடுச்சு. எல்லாத்துக்கும் காலம்தான் பதில் சொல்லணும்!"