Published:Updated:

மதுர மக்கள்: "அப்போ எங்களால பயனடைஞ்சவங்க, இப்போ தன்னார்வலர்களா வர்றாங்க!"- படிக்கட்டுகள் அமைப்பு

மதுர மக்கள்: படிக்கட்டுகள் அமைப்பு
News
மதுர மக்கள்: படிக்கட்டுகள் அமைப்பு

"சின்ன சின்ன பொருளுதவிகள் தேவைப்பட்டுச்சு. அதுக்காக நண்பர்கள் கிட்ட சொன்னப்ப அவுங்களால் முடிஞ்சத குடுத்தாங்க. அப்போதான் இதை முறைப்படுத்தி செய்ய அமைப்பாக மாறணும் சொன்னாங்க. அதுதான் படிக்கட்டுகளாக உருமாறுச்சு."

Published:Updated:

மதுர மக்கள்: "அப்போ எங்களால பயனடைஞ்சவங்க, இப்போ தன்னார்வலர்களா வர்றாங்க!"- படிக்கட்டுகள் அமைப்பு

"சின்ன சின்ன பொருளுதவிகள் தேவைப்பட்டுச்சு. அதுக்காக நண்பர்கள் கிட்ட சொன்னப்ப அவுங்களால் முடிஞ்சத குடுத்தாங்க. அப்போதான் இதை முறைப்படுத்தி செய்ய அமைப்பாக மாறணும் சொன்னாங்க. அதுதான் படிக்கட்டுகளாக உருமாறுச்சு."

மதுர மக்கள்: படிக்கட்டுகள் அமைப்பு
News
மதுர மக்கள்: படிக்கட்டுகள் அமைப்பு

"'பெயரில் என்ன இருக்கிறது, பெயரில்தான் எல்லாம் இருக்கிறது' - இது கல்யாண்ஜி அவர்களோட வரிகள். படிக்கட்டுகள்னு இந்த அமைப்பு ஆரம்பிச்சப்போ நாங்க எல்லாரும் கல்லூரி மாணவர்கள். எல்லார்கிட்டயும் சும்மா காசு வாங்கிட்டு அது பண்றோம், இது பண்றோம்னு சொல்லிட முடியாது. எதையும் முறைப்படுத்தணும், அதுக்கு ஒரு அமைப்பு வேணும், அப்படின்னு சொன்னப்போ ஃபேஸ்புக்ல நம்மளோட நோக்கத்தைச் சொல்லி ஒரு பெயர் பரிந்துரைக்கச் சொல்லிக்கேட்டிருந்தோம். அப்படி ஒரு ஃபேஸ்புக் நண்பர் போட்ட படிக்கட்டுகள் அப்படிங்கிற கமென்ட் நம்ம பார்க்குற வேலைக்குப் பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு. அதையே பெயரா வச்சுட்டோம். திரும்பிப்பார்த்தா பத்து வருஷமாச்சு! பெயர் நல்லா இருக்குல்ல?!" தம்ஸ் அப் காட்டி சிரிக்கிறார் கிஷோர் குமார். ஐடி நிறுவன இளைஞர், படிக்கட்டுகள் அமைப்பின் நிறுவனர்.

கிஷோர் குமார்
கிஷோர் குமார்
படிக்கட்டுகள் அமைப்பு மதுரை மற்றும் சென்னையை மையமாக கொண்டு இயங்கும் அமைப்பு. 2015 பெரு வெள்ள நிவாரண நடவடிக்கை, கொரோனா கால நிவாரணம், பொருளாதார சூழல் காரணமாகக் கல்வியை தொடர முடியாத மாணவர்களின் கல்வி கனவைச் சிதைக்காமல் கொண்டு செல்வது எனப் பெரும் பணிகள் செய்திருக்கின்றனர், செய்து வருகின்றனர்.

எப்படி ஆரம்பிச்சது இந்தப் பயணம்?

"நாங்க 2012 பேட்ஜ் மாணவர்கள். கல்லூரி கடைசி ஆண்டுல ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்காக போகவேண்டிய சூழல் இருந்தது. அப்போ 97 - 98 பேட்ஜ் மாணவர்களுடைய சந்திப்பு நடந்துச்சு. அதுல அவுங்க சொன்னது இன்னும் என் மனசுல இருக்குது. எப்படியும் நாம எல்லாம் காலேஜ் முடிச்சு திரும்ப வருஷத்துக்கு ஒரு தடவ சந்திக்கத்தான் போறோம். அது பெரிய பெரிய ஹோட்டல்கள், தேவையில்லாத செலவுகள்னு இல்லாம ஆதரவற்றா இல்லங்கள்ல நேரத்தைச் செலவு பண்ணலாம்னு பேசிக்கிட்டாங்க. அந்தச் சம்பவம்தான் எங்களுக்கான உந்துதல். அதை அப்படியே என்னோட நண்பர்கள் கிட்ட கலந்து பேசினோம். எல்லாரும் சரின்னு ஒத்துக்கிட்டாங்க."

இருந்தாலும் இது ரொம்ப சீக்கிரமே ஆரம்பிச்சிருச்சுல்ல..?

"ஹாஹா ஆமா, அப்போ நாங்க எல்லாம் படிச்சுட்டு இருந்த பசங்க. எங்களுக்கு எங்க செலவுக்கே காசு பணம் எதுவும் இருக்காது. அதனால பணம் இல்லாத வேலைகளா தேர்ந்தெடுத்தோம். பார்வை திறன் இல்லாத மாணவர்களுக்குத் தேர்வு எழுதிக்கொடுப்பது, படிக்கிற சூழல் அமையாத மாணவர்களுக்குச் சிறப்பு கவனம் எடுத்து சொல்லிக்குடுப்பது என எங்களை அவுங்க கூட இணைச்சுக்கிட்டோம். அப்படி ஆரம்பிச்ச பயணத்துக்குச் சின்ன சின்ன பொருளுதவிகள் தேவைப்பட்டுச்சு. அதுக்காக நண்பர்கள் கிட்ட சொன்னப்ப அவுங்களால் முடிஞ்சத குடுத்தாங்க. அப்போதான் இதை முறைப்படுத்தி செய்ய அமைப்பாக மாறணும் சொன்னாங்க. அதுதான் படிக்கட்டுகளாக உருமாறுச்சு.

இன்னனும் சொல்லணும்னா என்னோட காலேஜ்ல எனக்கு பாடம் எடுத்த பேராசிரியர் மலைச்சாமி சார் கிட்ட இந்த விஷயத்த சொன்னப்போ ரொம்ப ஆர்வமா தன்னை இணைச்சுக்கிட்டார். கூடவே அவரோட வீட்டுல உள்ள ஒரு பகுதியை படிக்கட்டுகளுக்கு அலுவலகமாகவும் மாத்திக்க அனுமதி குடுத்தார். ஒரு ஆசிரியர், மாணவர் என்கிற உணர்வு தாண்டி, இப்போ மலைச்சாமி சார்தான் இந்த அமைப்போட முக்கியமான பொறுப்பில் இருக்கிறவர்."

எவ்வளவு தன்னார்வலர்கள் இருக்காங்க?

"மதுரைல இருக்கற எல்லா காலேஜ்ல இருந்தும் 2012 பேட்ஜ் மாணவர்கள் சிலர், அவர்களின் நண்பர்கள், நண்பனோட நண்பர்கள்னு 45 பேரோட ஆரம்பிச்சோம். இப்போ 200 தன்னார்வலர்கள் இருக்காங்க. மதுரை, சென்னைனு இரண்டு பகுதிகளா வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்.

அதுபோக படிக்கட்டுகள் மூலமா பயனடைஞ்ச மாணவர்களே திரும்பவும் தன்னார்வலர்களா தங்களை இணைச்சு வேலை பார்க்கிறாங்க. இதெல்லாத்துக்கும் காரணம், நாங்க எதுவுமே எந்தப் பிரதிபலனுமே எதிர்பார்க்காம வேலை பார்த்ததுதான். மனசுக்கு ஒரு நிறைவா இருக்கு, பயனடைறவங்களோட வாழ்த்துலயும் ஒரு மனநிறைவும் சந்தோசமும் நிறைஞ்சு இருக்கு. அதுதான் எங்களை இன்னும் இன்னும் இயங்க வச்சுக்கிட்டு இருக்கு."