Published:Updated:

`25 வருஷமாச்சு... சத்தியத்தைக் காப்பாத்துறோம்!' - சிலிர்க்கும் பழம்பூண்டி பழங்குடி பூசாரி

பழம்பூண்டி கிராம மக்கள்
News
பழம்பூண்டி கிராம மக்கள்

``ஊரின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் இவர்கள், பொது சமூகத்துடன் சேர்ந்து வாழ வழி வகுக்க வேண்டும்.’’

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பழம்பூண்டி என்னும் பழங்குடியின கிராமம். 10 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், யாருக்குமே மது அருந்தும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ கிடையாது. இங்கு வசிக்கும் இளைஞர்கள், கட்டுக்கோப்புடன் வசிக்க, முத்து என்பவரே காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

முத்து
முத்து

``நான் இந்த ஊர் கோயில் பூசாரி. எனக்கு ஒரு 25 வயசு இருக்கும்போது என் மேல எங்க குலசாமி கண்ணியம்மா வந்துச்சாம். இங்க இருக்கிற யாரும் போதை சம்பந்தமான எந்தப் பொருளையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாதுனு உத்தரவு போட்டுச்சாம். சாமியாடிய என்கிட்ட, எங்க கிராமத்து ஆளுங்க, 'இனிமே குடிக்கவே மாட்டோம்'னு எல்லாரும் சத்தியம் பண்ணிக் கொடுத்தாங்க. இது நடந்து 20 வருஷம் ஆகிருச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்போ எனக்கு 45 வயசு ஆகுது. யாருக்கும் குடிப்பழக்கம் கிடையாது. எங்க தலைமுறை பிள்ளைகளும் குடியைத் தொடமாட்டாங்க. எங்க பிள்ளைங்க கொஞ்சம் பெரியவனானதும் என்கிட்ட வந்து, சாமி முன்னிலைல சத்தியம் பண்ணிக் கொடுத்திருவாங்க. குடிச்சா அந்த வீட்டுக்கே கேடு, உடலுக்கும் கேடு-ன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்.

பழம்பூண்டி கிராம மக்கள்
பழம்பூண்டி கிராம மக்கள்

கன்னியம்மா எங்களுக்கு சாப்பாட்டுக்கு எந்தக் குறையும் வைக்கல. தினமும் மரம் வெட்டுற வேலை, கட்டட வேலை-ன்னு போறோம். அதிகபட்சமா ஒரு நாளைக்கு 350 ரூபா கிடைக்கும். குடிப்பழக்கம் இருந்தா அதுக்கே பாதி செலவு பண்ணணும். அப்படி ஏதுவும் இல்லாததால, காய்கறி வாங்கி சமைச்சு சாப்பிடுறோம். ஆனா, எங்கள சுத்தி நிறைய பிரச்னைகள் இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்க ஊர்ல மின்சாரமோ குடிநீர் வசதியோ கிடையாது. ஆத்துத் தண்ணியில்தான் குளிக்கிறோம். அதையேதான் குடிக்கிறோம். வெயில் காலம் வந்தா ஆறும் வத்திபோய்டும். என்ன பண்ணப் போறோம்னு தெரியல. காசு கொடுத்து தண்ணி வாங்குற அளவுக்கு கூலி கிடைக்காது. பாம்பு, பூரான் கடிச்சா விஷம் முறிக்கும் மூலிகைச் செடிகளை வளர்க்குறோம். ஆனா, எங்களுக்கே தண்ணியில்லாதபோது செடிகளுக்கு எப்படி ஊத்துறது.

பழம்பூண்டி கிராம மக்கள்
பழம்பூண்டி கிராம மக்கள்

இரவானதும் பாம்பு, பூரான்னு எல்லா விஷ பூச்சியும் எங்க குடிசைக்கு வரும். பழகிப்போச்சு. நாங்க செல்போன் வெச்சிருக்கோம். ஊருக்குள்ள தெரிஞ்சவங்க வீட்ல கொடுத்து சார்ஜ் போட்டுக்குவோம். கொஞ்ச நாள் முன்னாடிதான் ராஜேஷ் சார் உதவியோட எங்க ஊர்ல சோலார் விளக்கு போட்டாங்க. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ் எதுவுமே எங்களுக்குக் கிடையாது. எப்படியாச்சு வாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம் ‘’ என்று முடித்தார் விரக்தியுடன்.

இதுகுறித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஆலோசகரான ராஜேஷ் பேசுகையில்,`` பழம்பூண்டியில் வசிக்கும் பழங்குடி குடியிருப்பில், எவருக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், வழக்கம்போல் இங்கேயும் மின்சாரமில்லை, வீட்டுமனைப் பட்டா இல்லை, ஆதார் இல்லை, ரேஷன்கார்டு இல்லை, சாதிச்சான்று இல்லை. ஆக மொத்தம் மனிதர்களாகப் பிறந்து வாழ்வதற்கு ஆதாரம் எதுவுமில்லை.

பழம்பூண்டி கிராம மக்கள்
பழம்பூண்டி கிராம மக்கள்

இவர்கள் படிக்காதவர்கள்தான். ஆனால், நாகரிகம் தெரிந்தவர்கள். சமீபத்திய செய்தித்தாள் ஒன்றில், பழங்குடியின மக்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி மாணவி நீது பார்வதியின் கருத்து வெளியாகியிருந்தது. `பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் குடியைக் காரணமாகச் சொல்கிற உலகம் இது. நாம் நாகரிக முதிர்ச்சியற்றவராக நினைக்கும் பழங்குடிகளோ, முழு போதையில் இருந்தாலும் பெண்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள்’ என்று அதில், நீது குறிப்பிட்டிருந்தார்.

பழம்பூண்டி கிராம மக்கள்
பழம்பூண்டி கிராம மக்கள்

இது 100% உண்மை. பழங்குடிகளின் பொழுதுபோக்கு மது மற்றும் இசையாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் பழங்குடி இளைஞர்கள் மது அருந்துவதே கிடையாது. அப்படி மது அருந்தினாலும் கன்னியம் தவற மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், பொது சமூகத்தில் கலந்தார்கள் என்றால், சமூகத்துக்கு நல்லது. ஊரின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் இவர்கள், பொது சமூகத்துடன் சேர்ந்து வாழ வழி வகுக்க வேண்டும்’’ என்றார்.