Published:Updated:

உடைத்துப் பேசுவோம்: "உடலளவில் ஆணாக இருந்துட்டு மாதவிடாயை எதிர்கொள்வது மிகப்பெரிய வலி!"- சக்ரவர்த்தி

உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி

"உடலளவில் ஆணாக இருந்துட்டு மாத, மாதம் மாதவிடாயை எதிர்கொள்றதுங்கிறது மிகப்பெரிய வலி. ஆண் உறுப்பு வழியாக பிரீயட்ஸ் வர ஆரம்பிச்சப்பதான் எனக்கு கர்ப்பப்பை இருக்குங்கிற விஷயமே தெரிய வந்துச்சு." - சக்ரவர்த்தி

உடைத்துப் பேசுவோம்: "உடலளவில் ஆணாக இருந்துட்டு மாதவிடாயை எதிர்கொள்வது மிகப்பெரிய வலி!"- சக்ரவர்த்தி

"உடலளவில் ஆணாக இருந்துட்டு மாத, மாதம் மாதவிடாயை எதிர்கொள்றதுங்கிறது மிகப்பெரிய வலி. ஆண் உறுப்பு வழியாக பிரீயட்ஸ் வர ஆரம்பிச்சப்பதான் எனக்கு கர்ப்பப்பை இருக்குங்கிற விஷயமே தெரிய வந்துச்சு." - சக்ரவர்த்தி

Published:Updated:
உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி
"உடலளவில் ஆணாக இருந்துட்டு மாத, மாதம் மாதவிடாயை எதிர்கொள்றதுங்கிறது மிகப்பெரிய வலி. ஆண் உறுப்பு வழியாக பிரீயட்ஸ் வர ஆரம்பிச்சப்ப தான் எனக்கு கர்ப்பப்பை இருக்குங்கிற விஷயமே தெரிய வந்துச்சு. உடலளவில் ஆணாகவும், மரபணுவில் பெண்ணாகவும் போராட்டத்துடன்தான் என் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருந்தேன்!" என்றவாறு பேசத் தொடங்கினார் சக்கரவர்த்தி. ஆங்கர், ஆக்டர் எனப் பன்முகம் கொண்டவர். ஆனந்த விகடன் உடைத்துப் பேசுவோம் பகுதிக்காக அவரைச் சந்தித்தோம்.
உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி
உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி

"எல்லாரையும் போல சராசரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருந்தேன். என் பத்தரை வயதில் ஆண் உறுப்பு வழியாக மாதவிடாயும், பதினொன்றரை வயதில் விந்தணுவும் வெளியேறிச்சு. அப்ப பரிசோதனை செய்து பார்த்தப்பதான் நான் ஒரு இன்டர்செக்ஸ் (Intersex) பர்சன் என்பது தெரிஞ்சது. என் உடம்புக்குள்ள கர்ப்பப்பை இருக்குங்கிற விஷயமும் புரிஞ்சது. எப்ப என் உடலில் இந்தப் பிரச்னை இருக்குன்னு தெரிஞ்சதோ அப்ப இருந்தே என் அம்மா எனக்கு பக்கபலமா இருந்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதார்த்தமா ஸ்கூல் படிக்கும்போது என் பிரச்னையை என் நண்பன்கிட்ட சொன்னேன். அவன் அதை எல்லார்கிட்டேயும் சொல்லி பெரிய பிரச்னை ஆகிடுச்சு. அப்ப எங்க ஸ்கூல் பிரின்சிபல்கிட்ட அம்மா என் பிரச்னையை எடுத்துச் சொல்லியும் அவங்க என்னை ஏத்துக்கல. டிசி கொடுத்து அனுப்பிட்டாங்க. அந்தச் சமயத்தில் நான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள் ஏராளம். அம்மா சொல்லி சொல்லி அப்பாவும் என்னை புரிஞ்சுகிட்டாங்க. ஆனாலும் சொந்தங்கள் யாரும் என்னை ஏத்துக்கல.

உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி
உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி

எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட், துணை, நலம் விரும்பி எல்லாமே என் அம்மாதான். அவங்க சொல்லிக் கொடுத்து வளர்ந்துதான் நானா முயற்சி பண்ணி மீடியாவுக்குள் வந்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராகவும், சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் வலம் வந்துருக்கேன். வெளியில் நான் யாருன்னு என்னை அடையாளப்படுத்தும் போது நான் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை பாலியல் ரீதியான பிரச்னைகள்தான்! அதனாலேயே என் அடையாளத்தை மறைச்சு வாழ்ந்துட்டு இருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாதவிடாய் சமயத்தில் பேட் வைக்கிறதில் இருந்து பல சிக்கல்கள் இருக்கும். அன்னைக்கு ஷூட்டிங்கிற்கு போனா கஷ்டமான ஏதாவது விஷயங்கள் பண்ண வேண்டியிருக்கும். வயிறு வலி, முதுகு வலின்னு எல்லாத்தையும் நானும் சந்திக்க வேண்டியிருக்கும். மாதவிடாய் சமயத்தில் பேட் வைக்கிறதனால பங்கல் இன்பெக்‌ஷன் ஆகிடும். அதற்கு மருந்து போட்டு அதை சரி செய்றதுக்குள்ள அடுத்த மாதவிடாய் சுழற்சி காலம் வந்திடும். இதெல்லாம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டமா இருந்துச்சு.

உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி
உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி

13 வயதில் இருந்தே யூரின் பிரச்னை, அதனால யூரின் இன்பெக்‌ஷன், பங்கல் இன்பெக்‌ஷன் இதெல்லாம் மாதவிடாய் பிரச்னைனாலதான் ஏற்படுதுன்னு சொல்லி, இந்தப் பிரச்னை சரி பண்ண ஆபரேஷன் பண்ணி கர்ப்பப்பையை எடுத்துட்டேன். ஆனா, அதை எடுத்ததனால பல பிரச்னைகளை இன்னைக்கு வரைக்கும் எதிர் கொண்டுட்டு வர்றேன். என்னால நார்மலா யூரின் போக முடியாது. நானா டிரை பண்ணி போனாதான் உண்டு.

ஆபரேஷன் செய்யும் போது ஏற்பட்ட அதிர்வினால் இந்த சிறுநீரகப் பிரச்னை வந்துடுச்சு. அதே மாதிரி, அதீத கால்வலியும் உண்டு. நான் நிம்மதியா தூங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிடுச்சு. இப்பதான் என் சிறுநீரகப் பிரச்னைக்கு ஒரு ஆபரேஷன் பண்ணலாம்னு சொல்லியிருக்காங்க. அதற்கு ஒன்றரை லட்சம் வரைக்கும் செலவாகும்னும் சொல்லி இருக்காங்க. அந்தப் பணத்துக்காக யாராவது உதவி செய்தா நல்லா இருக்கும்.

உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி
உடைத்துப் பேசுவோம்: சக்ரவர்த்தி

இன்டர்செக்ஸில் நிறைய பிரிவுகள் இருக்கு. என்னுடையது 46XXMALE கிரோமோசோன். நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திட்டேன். அதுக்கு பிறகு பாலியல் ரீதியா பலர் என்னைத் துன்புறுத்தினாங்க. அதுமட்டுமில்லாமல் நாங்க குடியிருந்த வீட்டில் இருந்து எங்களைக் காலி பண்ணச் சொல்லிட்டாங்க. இப்ப எனக்கு இருக்கிற ஒரே ஒரு ஆறுதல் என் அம்மாவும், அப்பாவும்தான்!

நிச்சயம் நான் பெரிய ஆளா வந்திடணும் என்பது என் அம்மாவுடைய கனவு. அதை நோக்கி இப்ப பயணிக்க ஆரம்பிச்சிருக்கேன். நான் சின்ன வயசில் இருக்கும்போதே உன்னால யாரையும் காதலிக்கவும் முடியாது, திருமணம் செய்து கொள்ளவும் முடியாதுங்கிற நிதர்சனத்தை என் அம்மா எனக்கு புரிய வச்சிட்டாங்க" என்றவர், அவர் குறித்தும், அவர் சந்தித்த கஷ்டங்கள் குறித்தும் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism