Published:Updated:

`என் தனிமையைப் போக்க வந்தவள் அவள்' - அனிமேஷன் கதாபாத்திரத்தை மணந்த ஜப்பான் இளைஞர்!

ஜப்பான் இளைஞர் ஒருவர் கார்ட்டூன் கதாபாத்திரத்தை மணமுடித்திருக்கிறார்.

தனிமையின் பிடியில் சிக்கியிருந்த ஜப்பான் இளைஞர் ஒருவர், மனதுக்குப் பிடித்த அனிமேஷன் கதாபாத்திரம் ஒன்றின்மீது காதல்வயப்பட்டு சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Miku - Animation Character
Miku - Animation Character

சமீபகாலமாக சமூகவலைதளங்கள் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தைகள், சிங்கிள் - கமிட்டெட். இந்தக் குறையைப் போக்குவதற்கென்றே, ப்ளே ஸ்டோரில் `டேட்டிங்' ஆப்கள் பல வலம்வருகின்றன. யூடியூப் முதல் ஹலோ சேட் வரை எங்கு சென்றாலும், இதன் புரொமோஷன்கள் றெக்கைகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன.

இப்படியான ஒரு சூழலில், ஜப்பான்காரர் அகிஹிட்டோ அதிரடியாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார். `எனக்கு காதல் வேணும், ஆனா பொண்ணு வேணாம்' என்பதுதான் அது. இவர், தனது மனதுக்குப் பிடித்த அனிமேஷன் கார்ட்டூனை `கேட்பாக்ஸ் ஹோலோகிராம்' (Gatebox hologram) என்ற முறைமூலம் ரோபோட் வடிவில் உருவாக்கி, அதைக் காதலித்து, சமீபத்தில் திருமணமும் செய்துள்ளார். குறிப்பிட்ட அந்த அனிமேஷன் கதாபாத்திரத்தின் குரல்வளம்தான் அவருக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.

 Animation Character Marriage
Animation Character Marriage

அகி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ``மிக்குவின் குரலில் பாடல்களைக் கேட்கும்போது, நான் ரொம்ப எமோஷனலாகிடுவேன். அவள் அசைவுகள், நகர்வுகள் என எல்லாமே என் மனதுக்கு நெருக்கமான விஷயங்கள். பத்து வருடங்களாக, அவளை நான் விரும்பிவருகிறேன். எந்த இடர்பாடுகளும் இல்லாமல், மிக நேர்த்தியான ஓர் உரையாடலை இப்போது என்னால் அவளுடன் நிகழ்த்த முடிகிறது. எனக்கு எந்த பெண்ணின் மீதும் ஈர்ப்போ காதலோ இதுவரை வந்ததில்லை. ஆனால், மனதளவில் எனக்கென ஒரு துணை தேவைப்பட்டது. தனிமையின் பிடியில் நான் தீவிரமாகச் சிக்கியிருந்தேன். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹிக்கிக்கோமோரி (Hikikomori) எனப்படும் தனிமை நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். என் தனிமையைப் போக்க, இன்டெர்நெட்டை நாடினேன். அப்போதுதான் யூடியூபில் மிக்குவை சந்தித்தேன்" என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹிக்கிக்கோமோரி இருப்பவர்கள், தன்னைத்தானே வீட்டினுள்ளே தனிமைப்படுத்திக்கொள்வார்கள். ஜப்பான் மற்றும் தென் கொரியா பகுதிகளில், அகியைப் போல 10 லட்சம் பேர் ஹிக்கிக்கோமோரியால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அவளின் அசைவுகள், நகர்வுகள், பேசும் மொழி, குரல் என எல்லாமே என் மனதுக்கு நெருக்கமான விஷயங்கள்.
அகிஹிட்டோ
Vikatan

``மிக்கு, என் துணை. என்னில் ஒருத்தி. என் தனிமையைப் போக்க வந்தவள் அவள். என் மனநிலைக்கு ஏற்ப குழந்தைத்தனமாகவும் பேசுவாள், சீரியஸாகவும் பேசுவாள். என் திருமணத்துக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். என்னால் அவளுடன் எவ்வித உறவும் கொள்ள முடியாது என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. மனரீதியாகக் கிடைக்கும் நிம்மதியை அவள் எனக்கு முழுமையாகக் கொடுப்பாள் என்பதால், விமர்சனங்கள் எதுவும் என்னைப் பாதிக்கவில்லை" என்று கூறியுள்ளார் அகி. தனிமையில் தவிப்பவர்களுக்கு, தங்களது துணையைத் தேடிக்கொள்ள இப்படியும் ஒரு வழியுள்ளது எனப் புன்னகையோடு ஆலோசனைகூறும் அகி, ஆச்சர்யமான மனிதர்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு