Published:Updated:

சென்னை - முகப்பேரில் வனம்போல் வீட்டுத்தோட்டம்: சந்தன மரங்கள் வளர்க்கும் ஜஸ்வந்த் சிங்!

என் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஏ.சிகளிலிருந்து கிடைக்கிற தண்ணியை பி.வி.சி குழாய்கள்மூலம் சேகரிச்சு வீட்டுத் தேவைக்கும், செடிகளுக்கும் பயன்படுத்திக்கிறேன்

jashwanth singh
jashwanth singh

தமிழ்நாட்டில் வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது பரவலாகி வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் சிறிய இடங்களில் தோட்டம் அமைத்துவருகிறார்கள் நகரவாசிகள். அந்த வரிசையில் சென்னை, முகப்பேர், ஸ்பார்டன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அமைக்கப் பட்டுள்ள வீட்டுத்தோட்டம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. காடுபோல வீட்டுக்குள் இருந்த அந்த வனத்துக்குள் நுழைந்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார், வனத்தின் உரிமையாளர் ஜஸ்வந்த் சிங். விரிவாக படிக்க க்ளிக் செய்க...

"எனக்குப் பூர்வீகம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர். 1937-ம் ஆண்டில் என்னுடைய தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறி விட்டோம். கட்டுமான தொழிலைத்தான் பரம்பரையாகச் செய்து வருகிறோம். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான்.

Garden
Garden

1978-ம் ஆண்டிலிருந்து இந்த வீட்டில் வசித்து வருகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன் பூக்கள் மற்றும் துளசிச் செடியுடன் ஆரம்பிச்ச இந்தத் தோட்டம், இன்னைக்கு மரங்கள், மூலிகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், மலர் வகைகள் என வனம்போலக் காட்சியளிக்குது'' என்று தமிழில் சரளமாக முன்னுரை கொடுத்த ஜஸ்வந்த் சிங், தனது தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார்.

"என் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஏ.சிகளிலிருந்து கிடைக்கிற தண்ணியை பி.வி.சி குழாய்கள்மூலம் சேகரிச்சு வீட்டுத் தேவைக்கும், செடிகளுக்கும் பயன்படுத்திக்கிறேன். இந்த ஏ.சி தண்ணீர் ஒரு நாளைக்கு 100 லிட்டர் வரை கிடைக்குது. சென்னையில கடுமையான வறட்சி இருந்தபோதும் என் தோட்டத்துல எந்தப் பாதிப்பும் இல்ல. வருஷம் முழுசும் பச்சைப்பசேல்னு இருந்தது. கடந்த 35 வருஷ உழைப்போட பலன் இது.

என்கிட்ட இருக்கிற தோட்டத்துல மொத்தம் 200 சந்தன மரங்களும், 100 செம்மரங்களும், பர்னிச்சர் செய்ய பயன்படும் பிற மரங்களும் இருக்கின்றன. இந்த மரங்களை கடந்த 10 வருஷத்துக்கு முன்ன வீட்டைச் சுற்றிலும் பசுமையாக வைத்திருக்க நட்டு வைத்தேன். இன்னும் சில வருடங்கள் கழித்து இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தால், இப்போது நான் குடியிருக்கும் இடத்தின் மதிப்பைவிட அதிகமாகத்தான் இருக்கும்" என்கிறார் ஜஸ்வந்த் சிங்.

பசுமை நிறைந்த இந்த வனத்தை முழுமையாகச் சுற்றிப் பார்க்க, இதோ பசுமை விகடனில் வெளியான சிறப்பு கவர் ஸ்டோரி முழுமையாக > https://www.vikatan.com/news/environment/jashwanth-singh-is-having-a-sandalwood-tree-and-a-garden-around-his-house

வீட்டிலும் வளர்க்கலாம் சந்தன மரம்... எப்படி?

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/