Published:Updated:

80’ஸ் கிட்ஸ், 90’ஸ் கிட்ஸ்.. காதல் கலாட்டா! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational image
Representational image

புத்தாண்டு தினம், மே தினம் ஆகியவற்றைப் போன்று காதலர் தினமும் பிரபலமடைந்துவிட்டது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

புது காலண்டரில் தீபாவளி எந்த கிழமை வருகிறது என்று பார்த்தால் அவன் மனிதன்.. காதலர் தினம் எந்த கிழமை வருகிறது என்று பார்த்தால் பெரிய மனிதன். ஒவ்வொரு தலைமுறை ஆண்களும் எப்படிக் கொண்டாடியிருப்பார்கள் என்று சின்ன கற்பனை...

Representational image
Representational image

80'கிட்ஸ்:

இதயம் முரளி போன்று கண்ணாலேயே பார்த்து, ஒரு வழியாக காதலைச் சொல்ல கோயிலுக்கு வரச் சொல்லுவார்கள். டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் லோயர் முடித்த கையோடு லவ் லெட்டர் கொடுத்துவிட்டு காத்திருப்பார்கள். கோயிலில் கொடுத்த விபூதியைக்கூட கோபால் பல்பொடி மாதிரி அப்படியே வாயில் போட்டு.. மென்னு முழுங்கி ஒருவழியாக காதலைச் சொல்லுவாங்க.

பாட்டு புக் வாங்கி சைக்கிளில் கிராஸ் செய்யும்போது பாடுவார்கள்.

டி.ராஜேந்தர் பாடலை கோயில் திருவிழாவில் போட்டு சிக்னல் செய்வார்கள். பஸ் மற்றும் ரயில்களில் இடம் பிடித்துக் கொடுத்து பெண்ணின் மனதில் இடம் பிடிப்பார்கள். காலர் பட்டன் போட்டுக் கொள்வது, நெற்றியில் பொட்டு, பெல்பாட்டம் போட்டுக்கொண்டு சைக்கிளில் வருவதை கெத்தாக நினைப்பார்கள்.

Representational image
Representational image

பத்தாம் கிளாஸ் பையன் பரீச்சையில பெயிலாகிற சூழ்நிலை வந்தால் கடைசிப்பக்கத்தில `பாஸ் போடலைனா பால்டாயிலைக் குடிச்சிருவேன் - என்பது போல், ``நீ என் காதலை நிராகரிச்சா செத்துருவேன்’- என்று சொல்லி எப்படிச் சாக வேண்டுமென்று ஆப்ஷனெல்லாம் குடுப்பாங்க. ஒரு வழியா ஓகே சொன்னா ஒரு முழம் மல்லிப்பூ வாங்கி தலையில் வைத்து இரண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்னு டூயட் பாடுவது போல் கற்பனை செய்ய ஆரம்பிப்பாங்க. உண்மையில் அன்றைய 80ஸ் காதல் திருமணம் செய்தவங்க அந்தக்காலத்து SSLC மாதிரி இன்னும் பிரமிப்பாகவே பார்க்க வைப்பாங்க. இவர்கள் அந்தக் காலத்து தில்லுதுரைகள்.

90'ஸ் கிட்ஸ்

80ஸ் கிட்ஸைவிட பரிணாம வளர்ச்சியில் மேம்பட்டவர்கள். காதல் வந்ததும் டக் இன் செய்யாமல் டாய்லெட்கூட போகமாட்டார்கள். ரொம்ப டீசன்ட்டாக இருப்பார்கள். பார்க், சினிமா என்று போனால்கூட ட்ரிங் & ட்ரைவ் செய்பவர்கள் ட்ராஃபிக் போலீஸ் பார்த்தால் பம்முகிற மாதிரி இவர்களின் ஆக்டிவிட்டி இருக்கும். பப்ளிக்குக்கு அவ்வளவு பயப்படுவார்கள்.

Representational image
Representational image

பள்ளிப்பருவத்தில் பெண்களுக்கு சிக்னல் கொடுக்க கண் அடிப்பது, வாசல் தெளிக்கும் பெண்ணிடம் பேப்பரை வீசி எறிந்துவிட்டுப் போவது, PGDCA படிக்க வந்தபெண்ணின் நோட்டில் தன் மொக்கை கவிதையை எழுதி வைப்பது என இவர்களின் ரொமான்டிக் லுக்கெல்லாம் காங்கேயன் கவுண்டமணி ரேஞ்சுக்கு இருக்கும்.

சொல்லத்தெரியாதவன் கண்ட பகல் கனவு போன்று அந்தப் பெண்ணே வந்து காதலைச் சொல்லுவார் என்று காலமெல்லாம் காத்திருப்பார்கள். தபூ சங்கர் கவிதையைப் பட்டி டிங்கரிங் செய்து,

`என்னவள் வந்தாள், என்னவள் பிறப்பு பூமித்தாய் செய்த சிறப்பு’ - என்று

எதுகை மோனையோடு எழுதி எதிரிக்கும் டஃப் கொடுப்பார்கள்.

சைக்கிளில் கைவிட்டு ஓட்டுவது, அந்த மக்கேடுகளில் அப்பெண்ணின் பெயரை சிம்பளாக எழுதுவது, பிடித்த பாடலின் ரிங் டோனை நோக்கியா 1100-வுக்கு அனுப்புவது, மெசேஜுக்கு காசு பிடித்தாலும் ஸ்பெஷல் ரீசார்ஜ் செய்து அனுப்புவது, லேன்ட்லைன் போனுக்கு கால் செய்ய ஒரு ரூபாய் பூத்திலிருந்து பேசுவது, முக்கியமான நேரத்தில் ஒரு ரூபாய் போடாமல் 'டொய்ன் டொய்ன்' என்று கத்த மீண்டும் ஒரு ரூபாய் போட்டு பேசுவது, கடிதம் எழுதி அனுப்புவது, லவ் ப்ரபோஸ் செய்துவிட்டு ஓடிவிடுவது என எண்ணற்ற சாகசம் செய்து காதல் திருமணம் செய்துவிடுவார்கள். ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்பது அன்றைய 90's கிட்ஸ்களின் தேர்தல் வாக்குறுதி போல மாறாதது.

Representational image
Representational image

#2k கிட்ஸ்

லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன் போன்று இவர்கள் மிகவும் அப்டேட் ஆனவர்கள். ரஃப் &டஃப் ஆக இருந்தால்தான் பெண்ணுகளுக்குப் பிடிக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி நீண்ட முடி அல்லது நீண்டதாடி, பபுள்கம் மென்றுகொண்டே, மூக்கை புடைப்பாக வைத்துக்கொண்டு பெண்களைக் கடப்பார்கள். டேட்டிங், வாட்ஸ் அப் சேட்டிங், டிக் டாக் வீடியோஸ், என காதலை வளர்ப்பார்கள்.

வீட்டில் ஓகே சொல்லி குடும்பத்துக்குப் பிடித்திருந்தால் உடனே கோயிலில் கல்யாணம், ஈவ்னிங் ரிசப்சன் என்று டாப் கியர் போட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

#காதலர் தினத்தில்

இன்று வரை பிரியாமல் இருப்போரைப் பார்க்கும்போதுதான் காதலர்கள் மீது மரியாதை வருகிறது. கருத்து வேறுபாட்டினால் பிரிந்தால் அது காதலே இல்லை.

``காதல் நோயைக் குணப்படுத்த, நீ மணம் புரிந்து கொள்...

பின் என்றுமே நீ காதலிக்க விரும்பமாட்டாய்.!’’ என்பார் ஓஷோ.

Representational image
Representational image

மணமுடித்தவுடன் மறக்காமல் அப்போதும் மனைவியை விரும்பினால்தான் அன்பு என்றும் நீடிக்கும். வார்த்தைகளில் அன்பு இருப்பதைக் காட்டிலும், செயல்களில் அன்பு இருத்தல் நலம். இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்..!

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு