Published:Updated:

``நான் பஞ்சாப்; அவர் குஜராத்; எங்களை இணைத்தது காதல்!" - சர்க்கஸ் தம்பதியின் காதல் கதை

சூரஜ் - பூனம் தம்பதி

``முதல் சந்திப்பிலேயே இருவரும் மொபைல் நம்பரைப் பரிமாறிக்கிட்டோம். இவர் காதலை வெளிப்படுத்தியபோது, எனக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு. ஆனா, அதை இவரிடம் வெளிக்காட்டிக்கலை." 

``நான் பஞ்சாப்; அவர் குஜராத்; எங்களை இணைத்தது காதல்!" - சர்க்கஸ் தம்பதியின் காதல் கதை

``முதல் சந்திப்பிலேயே இருவரும் மொபைல் நம்பரைப் பரிமாறிக்கிட்டோம். இவர் காதலை வெளிப்படுத்தியபோது, எனக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு. ஆனா, அதை இவரிடம் வெளிக்காட்டிக்கலை." 

Published:Updated:
சூரஜ் - பூனம் தம்பதி

சூரஜ் குஜராத்தைச் சேர்ந்தவர். பூனம் பஞ்சாப் மாநிலத்தவர். மாநில எல்லைகளைக் கடந்து, இவர்களை இணைத்தது காதல்! அதற்கு இணைப்புப் பாலமாக அமைந்தது சர்க்கஸ் நிகழ்ச்சி. இந்தியாவின் பல மாநிலத்தவர்களும் அன்பு மற்றும் ஒற்றுமையுடன் பணிசெய்து மக்களை மகிழ்விப்பவது சர்க்கஸ் எனும் கொண்டாட்டம் மூலமாகத்தான். அதில் பணியாற்றும் கலைஞர்களுக்குள் சோகம், வலி, மகிழ்ச்சி, காதல் எனப் பல சுவாரஸ்யங்கள் மறைந்திருக்கும். அந்த வகையில் சூரஜ் - பூனம் காதல் கதை சற்றே வித்தியாசமானது.

சூரஜ் - பூனம் தம்பதி
சூரஜ் - பூனம் தம்பதி

சர்க்கஸ் கலைஞர் சூரஜ்ஜை காதல் திருமணம் செய்துகொண்ட பூனமும் தற்போது சர்க்கஸ் வேலையில்தான் இருக்கிறார். சென்னையில் நடைபெற்றுவரும் `கிரேட் பாம்பே சர்க்கஸ்' நிகழ்ச்சியில் பணியாற்றிவரும் இவர்களைச் சந்தித்துப் பேசினேன். அன்பு மற்றும் புரிதல் இவர்களைப் பிணைப்புடன் வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஏழ்மையான குடும்பம். பெற்றோர் வேலை செய்துவந்த சர்க்கஸ் கம்பெனியிலதான் நான் பிறந்தேன். விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்தே நான், என் அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் சர்க்கஸ் வேலையிலதான் இருக்கிறோம். அதனால, நாங்க மூவரும் ஸ்கூல் போனதில்லை. படிப்பறிவும் கிடையாது. சர்க்கஸ் மட்டுமே உலகமா இருந்த என் வாழ்க்கையின் புது வசந்தம் மனைவி பூனம்" என்கிற சூரஜ்ஜின் முகத்தில் வெட்கம் பிரகாசிக்கிறது. 

சூரஜ் - பூனம் தம்பதி
சூரஜ் - பூனம் தம்பதி

``ஒருமுறை பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா நகர்ல சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தினோம். அந்த ஊரைச் சேர்ந்த பூனம், சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்க்க அடிக்கடி வந்தாங்க. யதேச்சையா பேச ஆரம்பிச்சு, இருவரும் நண்பர்களானோம். பூனம், என் வாழ்க்கைத் துணையா வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். என் காதலைச் சொன்னேன். பூனமுக்கும் என்மேல காதல் இருந்துச்சு. ஆனா..." என்று சிரிக்கும் சூரஜ்ஜை இடைமறித்துப் பேசுகிறார், பூனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஸ்கூல் படிப்பைக்கூட முழுசா முடிக்காத நான், எங்க ஊர்ல ஜிம்னாஸ்டிக் கலைஞரா இருந்தேன். சர்க்கஸ் சாகசங்கள் மீது எனக்கு அலாதியான ஆர்வம் உண்டு. அத்துடன் இவரைப் பார்க்கவே அடிக்கடி சர்க்கஸ் நிகழ்ச்சிக்குப் போனேன். 

சூரஜ் - பூனம் தம்பதி
சூரஜ் - பூனம் தம்பதி

இவரின் யதார்த்த குணம் என்னைக் கவர்ந்துச்சு. எங்க முதல் சந்திப்பிலேயே இருவரும் மொபைல் நம்பரைப் பரிமாறிக்கிட்டோம். இவர் காதலை வெளிப்படுத்தியபோது, எனக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு ஆனா, அதை இவரிடம் வெளிக்காட்டிக்கலை.

`என் வீட்டில் சம்மதம் வாங்கிட்டுச் சொல்றேன்'னு மட்டும்தான் இவரிடம் சொன்னேன். அவர் வீட்டில் சம்மதம் கிடைச்சாலும், என் வீட்டில் சம்மதம் கிடைக்கலை. தொடர்ந்து மூணு வருஷம் போராடினோம். இடைப்பட்ட காலங்கள்ல சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக இவர் பல ஊர்களுக்கு மாறுதலாகிட்டே இருந்தார். 

சூரஜ் - பூனம் தம்பதி
சூரஜ் - பூனம் தம்பதி

அதனால நாங்க சந்திச்சுக்கிறது குறைந்தாலும், போன்ல தொடர்ந்து பேசுவோம். இவரும் என் வீட்டுக்கு வந்து பலமுறை பேசினார். எங்க காதலில் நாங்க உறுதியா இருந்தோம். அதன் பலனாக என் வீட்டிலும் சம்மதம் கிடைச்சுது" என்று கணவரைப் பார்த்து சிரிக்கிறார், பூனம்.

2010-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், பூனம் விருப்பப்படி அவருக்கு சர்க்கஸ் சாகசங்களைப் பயிற்றுவித்திருக்கிறார், சூரஜ். பின்னர், இருவரும் இணைந்து சர்க்கஸ் கலைஞர்களாகக் கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிவருகின்றனர். இவர்களின் மகனுக்கு ஐந்து வயது!

சூரஜ் - பூனம் தம்பதி
சூரஜ் - பூனம் தம்பதி

``பறவைகள் சாகசம், பந்துகள் சாகசம், சைக்கிள் சாகசம் உட்பட தரையில் செய்யக்கூடிய சாகசங்கள் பலவற்றையும் நான் செய்வேன். நான் செய்வதைத் தாண்டி, கூடுதலான சில சாகசங்களையும் என் கணவர் செய்வார். ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை செய்வது ரொம்பவே சந்தோஷம். இது சவாலான வேலை! எங்களுக்குப் பலமுறை காயங்கள் ஏற்பட்டிருக்கு. அதுக்கெல்லாம் நாங்க வருத்தப்பட மாட்டோம்" என்கிறார், பூனம்.

``எங்க பையனை குஜராத்திலுள்ள என் அம்மா பார்த்துக்கறாங்க. `நான் மட்டும் சர்க்கஸ் வேலையில் இருக்கேன். நீ கஷ்டப்பட வேண்டாம். ஊர்ல குழந்தையைப் பார்த்துக்கிட்டு வீட்டுலயே இரு'ன்னு பூனம்கிட்ட பலமுறை சொல்லியிருக்கேன். ஆனா, `உங்க கூடவே இருக்கேன். எனக்கு எந்தச் சிரமமும் இல்லை'ன்னு சொல்றாங்க. உடலில் ஒரே நேரத்துல 25 வளையங்களை மாட்டிக்கிட்டு, பூனம் அநாயாசமாகச் சாகசம் செய்வாங்க" என்று கூறும் சூரஜ்ஜும், பூனமும் புன்னகையுடன் விடைபெற்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism