Published:Updated:

சுற்றமும் புத்தகமும் சூழ...

இஜாஸ் ஹக்கிம்
பிரீமியம் ஸ்டோரி
இஜாஸ் ஹக்கிம்

100 புத்தகங்களை சீராகக் கொடுத்து அஜ்னாவை மணம்முடித்திருக்கிறார் இஜாஸ்!

சுற்றமும் புத்தகமும் சூழ...

100 புத்தகங்களை சீராகக் கொடுத்து அஜ்னாவை மணம்முடித்திருக்கிறார் இஜாஸ்!

Published:Updated:
இஜாஸ் ஹக்கிம்
பிரீமியம் ஸ்டோரி
இஜாஸ் ஹக்கிம்

மீபத்தில் சமூக வலைதளங்களில் ரசித்துப் பகிரப்பட்ட காதல் அது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜ்னா நசீம், தன் நிச்சயதார்த்தத்தின் போது மணமகன் இஜாஸ் ஹக்கிமிடம், சீர் வரிசைக்குத் தனக்குப் புத்தகங்கள் வேண்டும் எனக் கேட்க, 100 புத்தகங்களை சீராகக் கொடுத்து அஜ்னாவை மணம்முடித்திருக்கிறார் இஜாஸ்!

இஜாஸ் ஹக்கிம் - அஜ்னா நசீம்
இஜாஸ் ஹக்கிம் - அஜ்னா நசீம்

கடவுளின் தேசமான கேரளாவின் கொல்லத்தில் நடந்தது சிவில் இன்ஜினீயர் இஜாஸ், பி.எட் மாணவி அஜ்னாவின் திருமணம். இஸ்லாமிய வழக்கப்படி மணப்பெண்ணுக்கு `மெஹர்’ என்னும் வரதட்சிணையை மணமகன் கொடுப்பது வழக்கம். பொதுவாக நகை, பணம், பரிசுப்பொருள்கள் என ‘மெஹர்’ கொடுக்கப்படும். ஆனால், அஜ்னா நசீம் ஒரு புத்தகப் பிரியை என்பதால், தனக்கு வரதட்சிணையாகப் புத்தகங்களைக் கொடுக்கும்படி இஜாஸிடம் கேட்டிருக்கிறார். அவர் ஆசைப்படியும் ஆசைக்கு மேலாகவும் 100 புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அஜ்னாவைக் கரம்பிடித்திருக்கிறார் இஜாஸ். இந்த அழகான செய்தியை, தனது முகநூல் பக்கத்தில் படங்களுடன் இஜாஸ் பதிவுசெய்ய, அது வைரல் ஆனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இஜாஸிடம் பேசினேன். “நான் திருவனந்தபுரம் அருகில் உள்ள மதவூர் கிராமப் பஞ்சாயத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறேன். என் மனைவி வேதியியல் படிப்பில் முதுகலைப்பட்டத்தை முடித்துவிட்டு பி.எட் படித்துவருகிறார். திருமணம் செய்ய வீட்டில் முடிவெடுத்த பின்னர், நானும் அவரும் தொலைபேசியில் பேசிவந்தோம். அப்போதுதான், அவருக்குப் புத்தகங்கள்மீது எவ்வளவு காதல் என்பதைத் தெரிந்துகொண்டேன். எங்கள் நிச்சயதார்த்தம் நடந்தபோது, புத்தகங்களை வரதட்சிணையாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார் அஜ்னா. உறவினர்கள், சமூகத்தினர் எனப் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றாலும், நானும் என் பெற்றோரும் அவர் கேட்டபடியே சீர் கொடுக்க முடிவெடுத்தோம். அஜ்னா விரும்பும் எழுத்தாளர்கள், புத்தகங்களின் பெயர்களைக் கேட்டு அவற்றை ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்க்க ஆரம்பித்தேன். கலாட் ஹுசைனி(Khaled Hosseini), ஹாருகி முரகாமி(Haruki Murukami), மிச்சேல் ஒபாமா உள்ளிட்டவர்களின் புத்தகங்கள், மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர் களின் கவிதை, கதைப் புத்தகங்கள், ஆங்கிலப் புத்தகங்கள் என வாங்கினேன்.

இஜாஸ் ஹக்கிம் - அஜ்னா நசீம்
இஜாஸ் ஹக்கிம் - அஜ்னா நசீம்

அஜ்னா 80 புத்தகங்கள் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டிருந்தார். திருமணத்துக்கு முதல் நாள், என்னிடம் 96 புத்தகங்கள் இருந்தன. பகவத்கீதை, பைபிள், குரான் ஆகியவற்றுடன் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தையும் சேர்த்து, 100 புத்தகங்களாகக் கொடுத்தேன். என் மனைவி வாசிப்பில் கொண்டுள்ள நேசமும் ஆர்வமும் எனக்குப் பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அஜ்னா, ``எனக்கு சிறு வயதிலிருந்தே வாசிப்பின் மீது ஆர்வம் உண்டு. பெற்றோரிடம் புத்தகங்களை வாங்கித்தரும்படி அடிக்கடி கேட்பேன். அந்தப் பழக்கமே என்னை என் கணவரிடமும் புத்தகங்களைக் கேட்கவைத்தது. நான் வரதட்சிணையாகப் புத்தகங்களைக் கேட்ட விவரம் வெளியே தெரியவந்ததும் பெரியவர்கள் பலரும் அதை விமர்சித்தார்கள். ஆனாலும், என் கணவரும் அவர் பெற்றோரும், என் ஆசையை நிறைவேற்றி வைத்தனர். இதில் எனக்கு மகிழ்ச்சியான இன்னொரு விஷயமும் இருக்கிறது. என் கணவருக்கும் புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான் அவரால் எனக்காக இப்படித் தேடித் தேடி புத்தகங்களைச் சேர்க்க முடிந்திருக்கிறது.

திருமணம் முடிந்ததும் ஹனிமூனுக்கு எங்கு செல்வது என்ற யோசனையில் இருந்தோம். அப்போதுதான், கோழிக்கோடு நகரில் கேரள இலக்கியத் திருவிழா நடக்கும் விவரம் தெரியவந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த விழாவுக்குச் சென்று வந்தோம். திருமணத்துக்குப் பின் எங்கள் பெட்ரூம் லைப்ரரிபோல் புத்தகங்களால் நிறைந்துவிட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் புத்தகங்களுக்காக ஒரு தொகையை ஒதுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். போகப் போக, எங்கள் வீடே நூலகமாகிவிடும் என நினைக்கிறேன்” என்கிறார் ஆசையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism