Published:Updated:

`மிஸ்டர் டெஃப் இந்தியா' பட்டம் வென்ற நெல்லை இளைஞர்! #MyVikatan

 ரமேஷ் ராஜதுரை
ரமேஷ் ராஜதுரை

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், மிஸ்டர் டெஃப் போட்டி குறித்து பேப்பரில் பார்த்து வீட்டுக்குத் தெரியாமல் அப்ளிகேஷன் போட்டுள்ளார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான காது கேளாதோருக்கான `மிஸ் மற்றும் மிஸ்டர் இந்தியா 2020' பட்டத்துக்கான போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ரமேஷ் ராஜதுரை பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

 ரமேஷ் ராஜதுரை
ரமேஷ் ராஜதுரை

24 வயதான ரமேஷ் ராஜதுரை நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம், பத்திநாதபுரத்தைச் சேர்ந்தவர். மாடலிங், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட இவர் கதிர் நடிப்பில் உருவான, `ஜடா' திரைப்படத்தில் காது கேட்காத ஒரு கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கிறார். படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த இவர், நிறைய ஃபேஷன் ஷோக்களில் `ராம்ப் வாக்' செய்திருக்கிறார்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், மிஸ்டர் டெஃப் போட்டி பற்றி பேப்பரில் பார்த்து வீட்டுக்குத் தெரியாமல் அப்ளிகேஷன் போட்டுள்ளார். போட்டிக்குத் தேர்வாகி இருப்பதாகவும் உடனே டெல்லி வரும்படியும் தகவல் வந்தவுடன் சென்னைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு டெல்லிக்குச் சென்றிருக்கிறார். டெல்லி வரை தனியாகச் செல்ல அவரது வீட்டில் அனுமதிக்கவில்லை.

 ரமேஷ் ராஜதுரை
ரமேஷ் ராஜதுரை

டெல்லி எம்.பி-யான மீனாட்சி லேகி முன்னிலையில் நடந்த இந்தப் போட்டியில், 65 பேர் கலந்துகொண்டனர். அகில இந்திய காது கேளாதோர் கலை மற்றும் கலாசார சங்கம் ஏற்பாடு செய்த இப்போட்டியில், எத்னிக், ஃபேஷன், திறமை மற்றும் கேள்வி, பதில் என நான்கு நிலைகளில் போட்டி நடத்தப்பட்டது.

ஏற்கெனவே, ஃபேஷன் துறையில் இருந்த அனுபவம், முதல் இரண்டு ரவுண்டுகளில் ரமேஷை ஜெயிக்க வைத்தது. அடுத்தடுத்த சுற்றுகளில் திறமைக்கும் புத்தி கூர்மை சார்ந்த சுற்றுகளிலும் ரமேஷ் அசத்தினார். இறுதிச் சுற்றில் நம் பாரம்பர்ய உடையான வேட்டி சட்டையில் மேடையில் தோன்றி, `மிஸ்டர் டெஃப் இந்தியா இன்டர்நேஷனல்' பட்டத்தை வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

-ஜேசு ஞானராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு