Published:Updated:

தனுஷ் ஏன் அடிக்கடி எண்ணம் போல் வாழ்க்கை என்கிறார்?! எல்லோரும் இன்புற்றிருக்க! #MondayMotivation

தனுஷ்
தனுஷ்

“நீ எதுவாக வேண்டுமென நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய்” என்பதே லா ஆஃப் டாமினன்ட் தாட்.

உங்களுக்கு DTRTD என்றால் என்னவெனத் தெரியுமா? Dominant Thoughts Rule The Day என்பதன் சுருக்கமே DTRTD. அதாவது நம்ம ஊர் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் எண்ணம் போல வாழ்க்கை! தனுஷ் அடிக்கடி இந்த வார்த்தையை சொல்லிக்கேட்டிருக்கலாம்.

ஒரு நாளின் தொடக்கத்தில் காதில் விழுந்த பாடல் அந்த நாள் முழுக்க மனதின் மூலையில் ரீங்காரம் மிடுவது போல ஒரு நாளின் தொடக்கத்தை எவ்விதமான எண்ணங்களுடன் தொடங்குகிறோமோ அதை ஒட்டியேதான் அந்நாள் அமையும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய வார்த்தை 'டாமினன்ட்'. அதாவது நம்மை ஆளும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்கள். DTRTD பற்றிச் சொல்லும் நிபுணர்கள் கூடவே சொல்லும் மற்றொரு வார்த்தை LAW OF DOMINANT THOUGHT.

#MondayMotivation
#MondayMotivation

"சிவில் லா (Civil Law), கிரிமினல் லா (Criminal Law) பற்றித் தெரியும். இதென்ன புதிதாக இன்னொரு லா?” என்கிறீர்களா?!

“நீ எதுவாக வேண்டுமென நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகிறாய்” என்பதே லா ஆஃப் டாமினன்ட் தாட்.

எந்த விதமான எண்ணங்கள் உங்களின் சிந்தனையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனவோ அந்த நாளை நிர்ணயிக்கும் சக்தியாக அச்சிந்தனைகளும் எண்ணங்களுமே அமையும் என்பதே LAW OF DOMINANT THOUGHT.

இதைச் சொல்லியதும் நம்மில் பலரும், “நான் எல்லாம் ஒரு நாளை நேர்மறையான எண்ணங்களால்தான் ஆரம்பிப்பேன் தெரியுமா? ஆனாலும் எந்த நாளும் நான் எதிர்பார்த்தது போல பாசிட்டிவாக அமையறதில்லை” எனச் சொல்லலாம்.

ஒரு நாளின் ஒரு வேளையில் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்துவிட்டு மீதி வேளைகளில் நன்றாக சாப்பிடும் ஒருவர், ''டயட் கன்ட்ரோலில் இருக்கேன். ஆனாலும் வெயிட் குறையலை'' எனச் சொல்வதைப் போன்றதுதான் ஒரு நாளின் சில நொடிகளை நேர்மறை எண்ணங்களால் நிரப்பி பெரும்பான்மையான மணி நேரங்களை எதிர்மறையான எண்ணங்களுக்கு தத்து கொடுத்தது விட்டு அந்த நாள் எதிர்பார்த்தது போல பாசிட்டிவாக அமையவில்லை எனச் சொல்வதும்!

இதை எவ்விதம் தவிர்க்கலாம்/கையாளலாம்?

#MondayMotivation
#MondayMotivation
  • நாளின் தொடக்கத்தில் எம் மாதிரியான எண்ணங்கள் உங்களை ஆக்கிரமிக்கின்றன என கவனியுங்கள். அதை அந்த நாளுக்கான உங்களின் To do list என நீங்கள் நினைத்திருக்கும் பட்டியலுடன் ஒப்பிடுங்கள்.

  • உங்களின் எண்ணங்கள், “இன்று செய்து முடிக்க வேண்டியவை” என நீங்கள் பட்டியலிட்டு வைத்திருக்கும் விஷயங்களுடன் ஒத்துப் போகிறதா என்று பாருங்கள்.

  • ஒத்துப் போகின்ற பட்சத்தில் உங்கள் சிந்தனையை ஆளும் அதிகாரத்தை அந்த எண்ணங்களுக்கு கொடுப்பதில் தவறொன்றுமில்லை.

  • இல்லை எனும் பட்சத்தில் அம்மாதிரியான எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பதும் நீங்கள் செய்து முடிக்க வேண்டியனவற்றிற்கு துணை நிற்கக் கூடிய நேர்மறை சிந்தனைகளை நோக்கி உங்களின் எண்ண ஓட்டங்களை மடை மாற்றிவிடுவதும் அவசியம்.

ஏனெனில் முன்னது, “போகாத ஊருக்கு வழி தேடும் கதை”. பின்னதோ... நீங்கள் எங்கு போக விழைந்தீர்களோ அங்கு உங்களை அழைத்துச் செல்லும்.

நினைவிருக்கட்டும்... எண்ணம் போல வாழ்க்கை. நம் எண்ணமேதான் வாழ்க்கை!

அடுத்த கட்டுரைக்கு