Published:Updated:

பறக்கும் மந்திர சக்தி கொண்ட யுனிகார்ன்கள் பற்றி தெரியுமா?! - புத்தம்புது காலை! #6AMClub

Unicorn

இவற்றின் பறக்கும் சக்தியைக் குறிக்கவே, ஹோண்டா நிறுவனம், தான் தயாரித்த பைக்கை 'யுனிகார்ன்' என பெயரிட்டுள்ளது.

பறக்கும் மந்திர சக்தி கொண்ட யுனிகார்ன்கள் பற்றி தெரியுமா?! - புத்தம்புது காலை! #6AMClub

இவற்றின் பறக்கும் சக்தியைக் குறிக்கவே, ஹோண்டா நிறுவனம், தான் தயாரித்த பைக்கை 'யுனிகார்ன்' என பெயரிட்டுள்ளது.

Published:Updated:
Unicorn

காளிதேவியை அன்னப்பறவை மீது உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படித்தான் ஆர்ட்டெமிஸ் என்ற கிரேக்க பெண்கடவுளுடன் யுனிகார்ன் காணப்படுகிறது.

ஆம்... எப்போதும் கையில் வில், அம்புடன் காணப்படும் போர்க்கடவுளான ஆர்டெமிஸுடன், அமைதியை விரும்பும் யுனிகார்ன் என்ற கிரேக்கர்களின் கற்பனை, ஆச்சரியமானது தானே?

அது என்ன யுனிகார்ன்?

நெற்றியில் ஒற்றைக் கொம்பும், நிறைந்த முடியுடன் கூடிய வாலும், பறக்க இரண்டு இறக்கைகளுடன் கூடிய வெள்ளைக் குதிரையின் உருவம்தான் யுனிகார்ன்.

unicorn | யுனிகார்ன்
unicorn | யுனிகார்ன்

பெரும்பாலும் கிரேக்க ரோமானியக் கதைகளில் யுனிகார்ன் காணப்பட்டாலும், மந்திர சக்தி நிறைந்த இந்தக் குதிரைகள் இந்தியாவில் தான் காணப்பட்டன என்றும், அவை பேரதிர்ஷ்டத்தை வழங்கும் ஆற்றல் கொண்டவை என்றும் சிந்துசமவெளி நாகரிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே இந்த யுனிகார்ன்கள் வாழ்ந்து வந்தனவா என்ற கேள்விக்கு நம்மிடையே பதிலில்லை. ஆனாலும், 13-ம் நூற்றாண்டுகளில் ஆசியாவில் பயணம் செய்த மார்கோ-போலோ யுனிகார்னை பார்த்தது பற்றிய குறிப்புகளை எழுதி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி காண்டாமிருகமாக இருக்கக்கூடும் என்றும், ஒற்றைக் கொம்பு மருத்துவகுணம் கொண்டது என்று எப்படி காண்டாமிருகம் வேட்டையாடப்பட்டதோ, அதேபோல யுனிகார்னும் வேட்டையாடியே அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், யுனிகார்ன் பற்றிய நம்பிக்கைகள், கதைகள், பாடல்கள், படங்கள் என வெவ்வேறு வடிவங்களில் உலகமெங்கும் பரவிக் கிடக்கிறது. க்விலின்ஸ் (Qilins) என யுனிகார்னை குறிப்பிடும் சீனர்கள், இதனை பல கொம்புகள் உள்ள பச்சை நிற டிராகன் வடிவத்தில் சித்தரிப்பதுடன், அவை பெருந்தலைவர்களின் பிறப்பு அல்லது இறப்பைக் குறித்ததாகவும் கூறுகின்றனர்.

இதேபோல ஆப்ரிக்க, தென் அமெரிக்க, ஸ்காட்லாந்து வரலாறுகளிலும் யுனிகார்ன்கள் பற்றிய தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

unicorn | யுனிகார்ன்
unicorn | யுனிகார்ன்

ஆர்டிக் கடலில் இருந்து வெளிவரும் யுனிகார்ன்களுக்கு மட்டும் தந்தங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வலிமையையும், மறுபக்கம் கன்னித்தன்மையையும் பிரதிபலித்த இந்த மந்திரக் குதிரைகள், வெள்ளை நிறத்தில் இருக்கும்போது அதிர்ஷ்டத்தை குறித்தன என்றும், கருமை நிறம் என்றால் துரதிர்ஷ்டம் என்றும் நம்பப்பட்டது. புனித வேதாகமத்தில் கூட யுனிகார்ன் பற்றிய குறிப்பு உள்ளதாகவும், அது ஆட்டின் வடிவத்தில் இருப்பதாகவும், பைபிளில் மட்டும் இவற்றைப் பற்றி ஒன்பது குறிப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி இடைக்காலத்தில், இந்த தூய்மையான யுனிகார்ன்கள் இறைவழிபாட்டுடன் இணைய, இவற்றின் கொம்பு பட்ட நீர், அனைத்தையும் புனிதமாக்கும் என்றும், அடர்ந்த காடுகளிலும், உயர்ந்த மலைகளிலும் வசிக்கும் இந்த யுனிகார்ன்களுக்கு வானவில்லை தோற்றுவிக்கும் சக்தி இருந்ததாகவும் நம்பப்பட்டது. உண்மையிலேயே இவை வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லாதபோதும், காலங்காலமாக கதைகளாய் நம்முடன் பயணித்துக் கொண்டே தான் இருக்கின்றன.. பைபிளில் ஆரம்பித்து நாம் சமீபத்தில் படித்த ஹாரி பாட்டரின், Harry Potter and the Philosophical Stone கதையிலும், உலகெங்கும் குழந்தைகளின் கார்ட்டூன் படங்களிலும் வந்த வண்ணமே தான் இருக்கின்றன, அமைதியான, வலிமையான மந்திரக் குதிரைகள்!

Unicorn bike
Unicorn bike

இவற்றின் பறக்கும் சக்தியைக் குறிக்கவே, ஹோண்டா நிறுவனம், தான் தயாரித்த ஒரு பைக்கை 'யுனிகார்ன்' என பெயரிட்டுள்ளது. ஏன் திடீரென்று இன்று யுனிகார்ன் என்று யோசிக்கின்றீர்களா? இன்றுதான் பறக்கும் குதிரைகளின் தினம். யுனிகார்ன்கள் தினமான இன்றைய தினத்தன்று, குழந்தைகளுடன் நாமும் சற்று மகிழ்ந்திருப்போம். ஏனென்றால் யுனிகார்ன்ஸ் மேஜிக்கை நம்பாதவர்களால் எந்தவொரு மேஜிக்கையும் நம்ப முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism