Published:Updated:

Morning Motivation: நடிகர் சூர்யாவுக்கு புதுப் பாடம்... கற்றுக்கொடுத்த பங்க்ச்சுவாலிட்டி!

சூர்யா ( Vikatan )

சிறிது நேரம் கழித்து மூன்றாவது அழைப்பு. அலறிய போனை ஓடிப்போய் எடுத்தார் சூர்யா. மறுமுனையில் உதவி இயக்குநர். ``உங்கப்பா கிளம்பிட்டாரா, இல்லையா... செட்ல எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க.’’ அவ்வளவுதான். சுர்ரென்று சூர்யாவுக்குக் கோபம் ஏறியது.

Morning Motivation: நடிகர் சூர்யாவுக்கு புதுப் பாடம்... கற்றுக்கொடுத்த பங்க்ச்சுவாலிட்டி!

சிறிது நேரம் கழித்து மூன்றாவது அழைப்பு. அலறிய போனை ஓடிப்போய் எடுத்தார் சூர்யா. மறுமுனையில் உதவி இயக்குநர். ``உங்கப்பா கிளம்பிட்டாரா, இல்லையா... செட்ல எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க.’’ அவ்வளவுதான். சுர்ரென்று சூர்யாவுக்குக் கோபம் ஏறியது.

Published:Updated:
சூர்யா ( Vikatan )

`ஒரு நிமிடம் தாமதமாகப் போவதைவிட, மூன்று மணி நேரத்துக்கு முன்னதாகப் போய் காத்திருப்பது சிறந்தது.’’ - வில்லியம் ஷேக்ஸ்பியர்.

`பங்ச்சுவாலிட்டி’ (Punctuality) எனப்படும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்காததாலேயே பல பிரச்னைகளை எதிர்கொண்டவர்கள் ஏராளம். அதைக் கடைப்பிடித்ததாலேயே பிரச்னைக்கு ஆளானவர்களும் உண்டு என்றால் ஆச்சர்யப்படுவோம்... இல்லையா? அதற்கு உதாரணம் நடிகர் சிவகுமாரும், அவருடைய மகன் சூர்யாவும். ஆனால், அதற்குக் காரணமோ வேறு. அந்த நிகழ்வுகூட ஒரு புதிய பாடத்தை சூர்யாவுக்குக் கற்றுக் கொடுத்ததாக அவரே சொல்லியிருக்கிறார்.

நடிகர் சிவகுமார் குடும்பம்
நடிகர் சிவகுமார் குடும்பம்

நடிகர் சூர்யா படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த காலம் அது. அவருடைய அப்பா சிவகுமார் பங்ச்சுவாலிட்டியை ஒரு தவம்போலக் கடைப்பிடிப்பவர். ஒன்பது மணிக்கு ஷூட்டிங் என்றால், அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே ஸ்பாட்டில் இருந்துவிடுவார். `ராஜராஜ சோழன்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரம்... நடிகர் திலகம் சிவாஜி ஒப்பனை செய்துகொண்டு, சர்வ அலங்காரங்களோடு காலை ஆறே முக்காலுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். அவருக்கு முன்னதாக ஆறே காலுக்கே வந்து காத்திருப்பார் சிவகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படிக்கு சூர்யா புத்தகம்
இப்படிக்கு சூர்யா புத்தகம்

`சிந்து பைரவி’ படப்பிடிப்பிலும் அப்படித்தான். அப்போதெல்லாம் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சிவகுமாரிடம், ``ஒரு நாளாவது உனக்கு முன்னால வந்து காட்டுறேன் பார்...’’ என்பாராம். அந்தப் படம் முடியும்வரை அந்தச் சவாலில் கே.பி-யால் ஜெயிக்க முடியவில்லை என்பதே நிஜம். அப்படி பங்க்ச்சுவாலிட்டியைக் கடைப்பிடிக்கும் சிவகுமாருக்கு அதிலும் ஒருநாள் பிரச்னை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலை 9:05 மணி. ஒரு போன் அழைப்பு. எடுத்துப் பேசினார் சூர்யாவின் அம்மா. மறுமுனையில் பேசியவர் ஓர் உதவி இயக்குநர். ``சார் இன்னும் ஸ்பாட்டுக்கு வரலை. வீட்டைவிட்டுக் கிளம்பிட்டாரா?’’

``பத்து மணிக்கு வந்தாப் போதும்னு உங்க அசோசியேட் டைரக்டர் நேத்து சொல்லியிருக்கார். இருந்தாலும் எட்டே முக்காலுக்கே அவர் கிளம்பிட்டாரே... இந்நேரம் ஸ்டூடியோகிட்ட வந்திருப்பார்...’’

இந்த போன் வந்து இரண்டு நிமிடங்கள்கூட ஆகியிருக்காது. மறுபடியும் போன். மறுமுனையில் அதே உதவி இயக்குநர். ``இன்னும் சார் வந்து சேரலீங்க... உண்மையிலேயே சார் கிளம்பிட்டாரா, இல்லையா?’’

சிறிய விஷயமல்ல நேரம் தவறாமை!
சிறிய விஷயமல்ல நேரம் தவறாமை!

துணுக்குற்றார் சூர்யாவின் அம்மா. ``பொய் சொல்றதுக்கெல்லாம் ஒரு அவசியமும் இல்லை தம்பி...’’

சிறிது நேரம் கழித்து மூன்றாவது அழைப்பு. அலறிய போனை ஓடிப்போய் எடுத்தார் சூர்யா. மறுமுனையில் உதவி இயக்குநர். ``உங்கப்பா கிளம்பிட்டாரா, இல்லையா... செட்ல எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க.’’ அவ்வளவுதான். சுர்ரென்று சூர்யாவுக்குக் கோபம் ஏறியது. அப்பா சிவகுமார் அன்றைக்கு நடிக்கப்போயிருந்த இடம் கற்பகம் ஸ்டூடியோ. பைக்கை எடுத்தார். அன்றைய தினத்தில் கற்பகம் ஸ்டூடியோ எங்கே இருக்கிறது என்றுகூட சூர்யாவுக்குத் தெரியாது. ஆட்டோ ஸ்டாண்டில் வழி விசாரித்துக்கொண்டு வடபழனிக்கு வண்டியை விட்டார்.

அத்தனை டிராஃபிக்கிலும் இருபது நிமிடங்களில் கற்பகம் ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார் சூர்யா. செட்டுக்குள் நுழைந்தார். அதுவரை சிவகுமார் குடும்பத்திலிருந்து யாரும் அவர் அனுமதியில்லாமல், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததில்லை. சூர்யாவைப் பார்த்ததும் பதறிப்போனார் சிவகுமார்.

``என்னப்பா திடீர்னு?’’

சூர்யாவின் குரல் உயர்ந்தது. `` `உங்கப்பா லேட்டு... இன்னும் கிளம்பலையா?’ன்னு எரிச்சலோட ஒருத்தர் மூணு தடவை போன் பண்ணிட்டாருப்பா. அவரைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.’’

சிவகுமார்
சிவகுமார்

சூர்யாவின் குரலைக் கேட்டு ஓடி வந்தார் இயக்குநர். ``யாருடா அவன்... மரியாதை இல்லாம போன் பண்ணிப் பேசினவன்?’’ என்று உதவி இயக்குநர்களைப் பார்த்து சத்தம் போட்டார். அவர் குரலிலிருந்தே அது நாடகத்தனம் என்பது எல்லோருக்கும் தெரிந்துபோனது.

பிரச்னை பெரிதாகும் போன்ற சூழ்நிலை. சிவகுமார் சமாதானப்படுத்தி, வலுக்கட்டாயமாக சூர்யாவை அங்கிருந்து அனுப்பிவைத்தார். அன்று இரவு வீடு திரும்பியதும் சிவகுமார், சூர்யாவை அழைத்து விஷயத்தைச் சொன்னார்... ``என்னை பத்து மணிக்கு வரச் சொன்ன டைரக்டர், ஒன்பது மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்துட்டாரு. அவருதான் அசிஸ்டென்ட் டைரக்டரைவிட்டு வேணும்னே போன் செய்யவெச்சிருக்கார். அவங்க என்ன செய்வாங்க... பாவம் பலியாடுங்க... ஆனா, ஊமை மாதிரி இருந்த உனக்குள்ள எப்படி இத்தனை வயலென்ஸ்... முன்கோபம் ரொம்ப ஆபத்துப்பா... பார்த்துக்கோ.’’ இந்த நிகழ்வை `இப்படிக்கு சூர்யா’ என்கிற தன் நூலில் பதிவு செய்திருக்கிறார் சூர்யா.

அன்றைக்கு இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள்... சரியாக இருப்பவர்களைக்கூட சீண்டிப் பார்ப்பார்கள்... அது அவர்களுடைய சுபாவம் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார் சூர்யா. கூடவே கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பாடத்தையும்!