Published:Updated:

Morning Motivation: ஆல் இஸ் வெல் சொன்னால் எல்லாம் சரியாகிவிடுமா?! எல்லோரும் இன்புற்றிருக்க!

Morning Motivation
Morning Motivation

உண்மையிலேயே நம் மனதின் குரலை (குரல்களை) நம் தேவைக்கு ஏற்றார் போலக் குறைக்கவும் கூட்டவும் ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறதா, அப்படி இருந்தால் அது எப்படி இருக்கும், என்னவெல்லாம் செய்யும்?

'மனதின் குரலை ம்யூட் செய்ய வேண்டுமா?' என்ற தலைப்பைப் பார்த்த நண்பரொருவர் ''மனதின் குரலை ம்யூட் செய்ய முடியுமா'' என்று கேட்டார்.

மனம் என்பது நம் குழந்தையா என்ன? அதைக் கட்டுப்படுத்தி “இஷ் பேசாதே!” என்று சொல்வதற்கு... அல்லது அது என்ன டிவி, ஏசி போன்றதொரு சாதனமா... அதனைக் கட்டுப்படுத்த பிரத்தியேகமாக ரிமோட் கன்ட்ரோல் இருப்பதற்கு?

உண்மையிலேயே நம் மனதின் குரலை (குரல்களை) நம் தேவைக்கு ஏற்றார் போலக் குறைக்கவும் கூட்டவும் ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறதா, அப்படி இருந்தால் அது எப்படி இருக்கும், என்னவெல்லாம் செய்யும்?

மனதில் எழும் குரல்கள் அனைத்தையும் நம் தேவைக்கு ஏற்ப ம்யூட்டுவது சாத்தியமோ இல்லையோ, ஆனால் எதிர்மறை எண்ணங்கள் எழும் போதெல்லாம் அதை மௌனமாக்க பல வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் பாசிட்டிவ் அஃபர்மேஷன்.( Positive affirmation)

அதென்ன பாசிட்டிவ் அஃபர்மேஷன்?

எதிர்மறை எண்ணங்கள் எழும் போதெல்லாம் அதன் சத்தத்தை குறைக்கும் ரிமோட் கன்ட்ரோலான நேர்மறை எண்ணங்களை உங்களுக்கு நீங்களே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருப்பது தான் பாசிட்டிவ் அஃபர்மேஷன்!

ஆல் இஸ் வெல்
ஆல் இஸ் வெல்

இன்னும் சிம்பிளாகப் புரியும்படி சொல்ல வேண்டுமெனில் நண்பன் படத்தில் தன் நெஞ்சில் கை வைத்து விஜய் அடிக்கடி சொல்லுவாரே “ஆல் இஸ் வெல்” என்று, அது கூட ஒரு வகையான பாசிட்டிவ் அஃபர்மேஷன்தான்!

ஆல் இஸ் ஹெல் எனச் சொல்லும் படியான சூழலிலும் மனம் தளராமல் உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக் கொண்டிருக்க செய்ய வல்லது இந்த PA.

“நான் ஏற்கனவே பாசிட்டிவாகத்தானே இருக்கேன் அப்புறம் எதற்கு இந்த உறுதிப்படுத்துதல் எல்லாம் தேவையா?” என்ற கேள்வி எழலாம். “திரும்பத் திரும்ப சொல்றதால நீ சொல்ற பொய் உண்மையாகிடாது” என்ற வசனத்தை பல பழைய திரைப்படங்களில் கேட்டிருப்போம். சொல்லப்போனால் PA வேலை செய்வது என்னவோ மேற்சொன்ன விதத்தில்தான்.

உங்களுக்கு நீங்களே நேர்மறையான எண்ணங்களை சொல்லிக் கொண்டே இருக்கும் போது ஒருகட்டத்தில் அது உண்மையாகும் அல்லது அது உண்மை என உங்கள் ஆழ்மனது நம்பத் தொடங்கும். அப்படி ஆழ்மனது நம்பத் தொடங்கும் விஷயங்கள் உங்களின் சொற்களாகவும் செயல்களாகவும் வெளிப்படும்.

உங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களை சரியான முறையில் நீங்கள் கையாள்வதால் அச்சுறுத்தல்கள் நிரம்பிய சூழ்நிலைகளை நாம் அணுகும் முறையிலும், வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் முறையிலும் மாற்றங்களை கொண்டு வர முடியும்.

நம் மூளை இயல்பிலேயே 'நியூரோபிளாஸ்டிசிட்டி' உடையது... அதாவது மீண்டும் மீண்டும் அதில் பதிவு செய்யப்படும் எண்ணங்களுக்கேற்ப தனது சிந்திக்கும் திறனை மாற்றிக் கொள்ள வல்லது என்கிறது நரம்பியல் தொடர்பான ஆய்வொன்று.

அதனால் நம் மூளைக்குள் ஆல் இஸ் வெல் என்பதைத் திரும்பத் திரும்ப பதியவைப்பது நம் மனநலனுக்கு நல்லது.

இப்போது மட்டும் அல்ல, எப்போதும் சொல்லுவோம் ஆல் இஸ் வெல்!

அடுத்த கட்டுரைக்கு