Published:Updated:

என் குட்டி(க்கு) விருதுகள்! - வாசகியின் க்யூட் பகிர்வு #MyVikatan

இது டிசம்பர் மாதம். விருதுகளுக்கான சீஸன். பிரபலங்களுக்கு மட்டும்தான் விருது கொடுக்க வேண்டுமா என்ன?

 சாய் வர்ஷினி
சாய் வர்ஷினி

குழந்தைகள் இருக்கும் வீடு குதூகலம் குறையாத வீடாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகம். அவர்கள் செய்கைகளை உற்று நோக்கினால் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பாடங்கள் கொட்டிக் கிடக்கும். என் மூன்று வயது மகள் சாய் வர்ஷினி செய்யும் சேட்டைகளை வைத்து கற்பனையாகச் சில விருதுகளை இங்கே அவளுக்காகப் பட்டியலிட்டுள்ளேன்.

 சாய் வர்ஷினி
சாய் வர்ஷினி

ஆள் மயக்கி விருது - சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, புதிதாக சந்தித்தாலும் எப்படியோ அனைவரையும் attractட்டி விடுவாள்.

சிறந்த கதை சொல்லி விருது - வெறும் பறவைகள்/ மிருகங்கள் உள்ள புத்தகத்தை வைத்தே கதையை இட்டுக்கட்டி சொல்லிவிடுவாள்.

'தல' விருது - என் மகளும் `தல' ரசிகைபோல. எப்போதும் நடந்துகொண்டே இருப்பாள்.

இருட்டுக் கடை அல்வா விருது - இரவு 11 மணி ஆனாலும் விளக்கெல்லாம் அனைத்துவிட்டிருந்தாலும் ஏதோ விளையாடிக் கொண்டே இருப்பாள்.

எது உன்னுதோ அது என்னுது, எது என்னுதோ அதுவும் என்னுது விருது - இந்த விருது 'Self explanatory'.

என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான் விருது - ஒருநாள் நானும் அவளும் ஒரே கலரில் உடை உடுத்தி இருந்ததால், அவ பாடின பாட்டு. அடுத்த நாளே பள்ளியிலிருந்து வந்தவுடன், அதைக் கொஞ்சம் மாற்றி 'என் friend நிரஞ்சன் போல யாரு மச்சான்'ன்னு பாடினாளே பார்க்கணும்.

பேபி இன்ஜினீயர் - மொபைல், ரிமோட் எதுவா இருந்தாலும் பேட்டரியைக் கழட்டி, மறுபடி பொருத்தத் தெரியும்.

Talent Inducer - எனக்குள் இருந்த சமையல் திறமையை வெளிக்கொணர்ந்தவள்.

 சாய் வர்ஷினி
சாய் வர்ஷினி

Home Food Eater (?!) - ஹோட்டலுக்குப் போனால் நாங்கள் நன்கு சாப்பிட, அவ வெறும் அந்த சாலட்ல இருக்குற வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு, டம்ப்ளர் நிறைய தண்ணி குடித்து, வீட்டுக்கு வந்தபின் யூடியூப் பார்த்துக்கொண்டே இட்லியைச் சாப்பிடுவதால்.

புகார் பெட்டகம் - சதா எதை/யாரைப் பற்றியாவது புகார் சொல்லிக் கொண்டே இருப்பதால்.

Best Adviser - மற்ற குழந்தைகளுக்கு அட்வைஸ் மழை பொழிவதால். (துப்ப கூடாது, ஒழுங்கா சாப்பிடணும்; குட் கேர்ள்ளா இருக்கணும் etc.)

Best Entertainer - அடுத்தாத்து அம்புஜத்தை பாட்டை முழுதாக, ஓரளவு ஆக்க்ஷனுடன் பாடுவாள். யூடியூப் புண்ணியத்தில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் தலா ரெண்டு ரைம்ஸ்சாவது சொல்லுவாள்.

Best Nose Cutter - அவளுடன் பழகும் எல்லாருக்கும், ஒரு மூக்குடைப்பாவது உறுதி. ஒருமுறை நான் ஏரோப்ளேன் வரைந்தால், அதை மீன் என்று சொன்னாள்.

Selective Appetite - முறுக்கு, சிப்ஸ் தவிர மற்ற எல்லாமே, அவ மூட் பொறுத்துதான். அவள் சாப்பிடுவது அந்நாளில் என் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. பெரும்பாலும் எனக்கு துரதிர்ஷ்டம்தான்.

Representational Image
Representational Image

பேசும்போது நல்லா வக்கணையா பேசும் விருது - 'அம்மா, நல்லா சாப்பிட்டாத்தான் பலசாலியா இருக்கலாம். நான் இனிமே நல்லா சாப்பிடுவேன்மா'னு சொல்லிட்டு, செயல்னு வரும்போது என் பொறுமையை சோதிப்பாள்.

ஜென் விருது - அவள் பிறந்த நாளுக்காக 5, 6 உடைகளை அவளுக்குக் கொடுத்தபோது 'என் கிட்டதான் நிறைய டிரெஸ் இருக்கேம்மா, எதுக்கு இவ்வளவு வாங்கினே'ன்னு சொன்னதற்காக.

செல்லம் - மொத்தத்தில் எங்கள் அனைவருக்கும் செல்லம் அவள்.

என்ன, உங்களுக்கும் அவளைப் பிடித்துப் போயிற்றுதானே! உங்கள் வீட்டு சுட்டியின் தனி திறன்களை (சேட்டைகளை) ஆராய்ந்து என்ன விருது கொடுக்கலாம் என்று இங்கெ கமென்ட் செய்யுங்களேன்..

- சுதா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/