Published:Updated:

Morning Motivation: தோல்விகள் கற்றுத்தந்த பாடம்; தன்னம்பிக்கை... - ஸ்டீபன் கிங் வெற்றிக்கதை!

ஸ்டீபன் கிங்

எழுத்தாளராவதற்கு முன்பு பல வேலைகளைப் பார்த்திருக்கிறார் ஸ்டீபன் கிங். கட்டடக் காவலாளி, பெட்ரோல் பங்க் ஊழியர், லாண்டரி நிறுவனத்தில் பணியாளர், ஆங்கிலப் ஆசிரியர் என என்னென்னவோ வேலைகள். முதல் நாவல் வெளியாவதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்

Morning Motivation: தோல்விகள் கற்றுத்தந்த பாடம்; தன்னம்பிக்கை... - ஸ்டீபன் கிங் வெற்றிக்கதை!

எழுத்தாளராவதற்கு முன்பு பல வேலைகளைப் பார்த்திருக்கிறார் ஸ்டீபன் கிங். கட்டடக் காவலாளி, பெட்ரோல் பங்க் ஊழியர், லாண்டரி நிறுவனத்தில் பணியாளர், ஆங்கிலப் ஆசிரியர் என என்னென்னவோ வேலைகள். முதல் நாவல் வெளியாவதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்

Published:Updated:
ஸ்டீபன் கிங்
`வெற்றியைக் கொண்டாடுகிறீர்களா... நல்லது. ஆனால், அதைவிட முக்கியம், தோல்விகள் கற்றுத்தரும் பாடங்களை நினைவில் வைத்திருப்பது!’ - பில் கேட்ஸ்

`அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் புத்தகங்கள் இதுவரை 35 கோடி பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியிருக்கின்றன’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். `ஏ யப்பா... அவ்வளவு சுவாரஸ்யமாக எழுதக்கூடியவரா... அப்படியென்றால் ராயல்டியே கோடிக்கணக்கில் வந்திருக்குமே...’ என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறதா... உண்மை. தன் சுவாரஸ்யமான மர்மக் கதைகளால், எழுத்து நடையால் உலகெங்குமிருக்கும் பல லட்சம் வாசகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஸ்டீபன் கிங்.

Morning Motivation: தோல்விகள் கற்றுத்தந்த பாடம்; தன்னம்பிக்கை... - ஸ்டீபன் கிங் வெற்றிக்கதை!
Michael A. Clifton

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வெற்றிகூட அத்தனை எளிதாக அவருக்குச் சாத்தியமாகிவிடவில்லை. புகழ்பெற்ற எழுத்தாளராவதற்கு முன்பு பல வேலைகளைப் பார்த்திருக்கிறார் ஸ்டீபன் கிங். கட்டடக் காவலாளி, பெட்ரோல் பங்க் ஊழியர், லாண்டரி நிறுவனத்தில் பணியாளர், ஆங்கிலப் பேராசிரியர் என என்னென்னவோ வேலைகள். முதல் நாவல் வெளியாவதற்குள் படாதபாடு பட்டுவிட்டார் கிங். சில சிறுகதைகள், குறுநாவல்களெல்லாம் அவர் எழுதியிருந்தாலும் நாவல்தான் ஆங்கில இலக்கிய உலகில், ஓர் எழுத்தாளருக்கான முக்கியமான அடையாளம். அதுவும் ஏதாவது பதிப்பகத்தில் புத்தகமாக வெளி வந்திருக்க வேண்டும். வெளி வந்திருந்தாலும் மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்க வேண்டும். `கேரி’ (Carrie) என்கிற நாவலை எழுதியிருந்தார் கிங். அதற்கு முன்பாக `ரேஜ்’ (Rage), `தி லாங் வாக்’ (The Long Walk), `பிளேஸ்’ (Blaze) என மூன்று நாவல்களை எழுதியிருந்தாலும், எதுவுமே புத்தகமாக வெளிவந்திருக்கவில்லை. பதிப்பகம் பதிப்பகமாகப் படியேறுவதும், `சாரி... இப்போதைக்கு இதைப் புத்தகமாகப் போடமுடியாது’ எனப் பதிப்பாளர்கள் உதட்டைப் பிதுக்க, படியிறங்குவதுமாகப் போய்க்கொண்டிருந்தது அவர் வாழ்க்கை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனாலும் விடாமல், `கேரி’ நாவலைப் புத்தகமாக வெளியிட ஒரு பதிப்பாளராவது கிடைக்க மாட்டாரா என பதிப்பகங்களுக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தார் ஸ்டீபன் கிங். ஒன்று, இரண்டல்ல... கிட்டத்தட்ட முப்பது பதிப்பகங்கள் அந்த நாவலை வெளியிட முடியாது என்று கழித்துக்கட்டியிருந்தன. வெறுத்துப்போனார் அவர். இனி எழுதவே வேண்டாம் என்கிற முடிவுக்கே வந்துவிட்டார். வீட்டுக்கு வந்தார். வேதனையிலும் ஆத்திரத்திலும் `கேரி’ நாவலின் முதல் மூன்று, நான்கு பக்கங்களைக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார் அவருடைய மனைவி தபிதா ஜேன் கிங் (Tabitha Jane King). கணவர் அங்கிருந்து நகர்ந்ததும், குப்பைத் தொட்டியை எடுத்தார். அதில் ஸ்டீபன் கிங் கிழித்துப் போட்டிருந்த பேப்பர்களை எடுத்தார். நிதானமாகப் படித்துப் பார்த்தார். படித்ததும், தபிதாவுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது... `இது புதிய களம். இதைச் சரியாகக் கொண்டுபோனால் வாசகர்கள் இந்த நாவலைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.’

Morning Motivation: தோல்விகள் கற்றுத்தந்த பாடம்; தன்னம்பிக்கை... - ஸ்டீபன் கிங் வெற்றிக்கதை!
(Airman 1st Class Jordan Castelan)

கொஞ்சம் நேரம் போகட்டும் எனக் காத்திருந்தார் தபிதா. இரண்டு மணி நேரம் கழிந்தது. கணவரிடம் போனார். மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.

``என்ன ஆச்சு... ஏன் டல்லா இருக்கீங்க?’’

``ஒண்ணுமில்லை.’’

``சரி... ஏன் அந்த நாவல் பேப்பரையெல்லாம் கிழிச்சுப் போட்டீங்க?’’

``என்னை என்ன செய்யச் சொல்றே... முப்பது பேரு இந்த நாவல் வொர்த் இல்லை... பிரசுரிக்கிறதே வேஸ்ட்டுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் எதுக்கு எழுதணும்... எப்பவும் தோல்வியையே தர்ற எழுத்து எனக்கு எதுக்கு?’’

தபிதா, அவரைச் சமாதானப்படுத்தினார். அவர் எழுதும் நாவலுக்கு, தான் உதவுவதாகச் சொன்னார். சொன்னபடியே செய்தார். பெண்களுக்கு ஏற்படும் சில உளச் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள், பெண்களின் மனோபாவம்... எனத் தோன்றியதையெல்லாம் ஸ்டீபனுடன் பகிர்ந்துகொண்டார். `கேரி’ நாவலை சில திருத்தங்களோடு மறுபடியும் எழுத ஆரம்பித்தார் ஸ்டீபன். அவருடைய போர்ட்டபிள் டைப்ரைட்டரில் மணிக்கணக்காக உட்கார்ந்து எழுதினார். தன் பள்ளிப் பருவத்தில் அவர் சந்தித்த இரு பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் அது. எழுதி முடித்ததும் அவரும் தபிதாவும் வரிக்கு வரி படித்துப் பார்த்தார்கள். மறுபடியும் திருத்தினார்கள். முழு திருப்தி கிடைத்தவுடன்தான் டபுள்டே (Doubleday) என்ற பதிப்பகத்துக்கு நாவலை அனுப்பினார் ஸ்டீபன் கிங். அனுப்பிவிட்டு, அப்படியே மறந்தும்போனார்.

Morning Motivation: தோல்விகள் கற்றுத்தந்த பாடம்; தன்னம்பிக்கை... - ஸ்டீபன் கிங் வெற்றிக்கதை!

அப்போது அமெரிக்காவின் மெய்னேவிலுள்ள `ஹேம்டெண் அகாடமி’ என்ற உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஸ்டீபன் கிங். வீட்டுச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்த தொலைபேசி இணைப்பையும் துண்டித்திருந்தார். ஒருநாள், அவருடைய `கேரி’ நாவலைப் பதிப்பிக்கப் போகிறோம் என்ற நல்ல தகவலைச் சொல்வதற்காக டபுள்டே பதிப்பகத்திலிருந்து அவருக்கு போன் செய்தார்கள். போன் அவுட் ஆஃப் சர்வீஸ். ஆனாலும், அந்தப் பதிப்பகத்தின் ஆசிரியர் வில்லியம் தாம்ஸன் கொஞ்சம் நல்ல மனசுக்காரர். நிலைமையை ஒருவாறாகப் புரிந்துகொண்டார். கொஞ்சமும் தாமதிக்காமல் ஸ்டீபன் கிங்கின் வீட்டு முகவரிக்கு ஒரு தந்தி அனுப்பினார். அதில் ` உங்களுடைய `கேரி’ நாவலை, எங்கள் பதிப்பகத்தில் புத்தகமாக வெளியிட முடிவு செய்துவிட்டோம். உங்களுடைய ராயல்டி அட்வான்ஸாக 2,500 டாலர் அனுப்புகிறோம். வாழ்த்துகள்’ என்று எழுதியிருந்தது. கிங்கும் தபிதாவும் தந்தியைப் படித்துவிட்டு துள்ளிக் குதித்தார்கள். ஒரு மாதம் கழித்து `கேரி’ நாவலை வெளியிடுவதற்கான உரிமையை `நியூ அமெரிக்கன் லைப்ரரி’ என்ற பதிப்பகம் வாங்கிக்கொண்டது. அதற்காக அது கொடுத்த தொகை 4,00.000 அமெரிக்க டாலர்!

அன்றைக்கு `கேரி’ நாவலின் சில பக்கங்களைக் கிழித்துப் போட்டதோடு எழுத்துக்கு முழுக்குப் போட்டிருந்தால், இன்றைக்கு ஸ்டீபன் கிங் இந்த அளவுக்குப் புகழ் பெற்றிருக்க முடியாது. தோல்விகள் நமக்குத் தருவது வேதனையையல்ல... பாடங்களை!

பின்னாளில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்டீபன் கிங் இப்படிச் சொன்னார்... ``எந்த வேலையை வேண்டுமானாலு பாருங்கள். அதில் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம்.’’