Published:Updated:

Motivation Story: `பதக்கம் மட்டுமா வெற்றி...’ ஒலிம்பிக்கில் மறக்க முடியாத ஒரு சாதனை!

 Nikki Hamblin, Abbey D'Agostino
News
Nikki Hamblin, Abbey D'Agostino

அது 2016, ஆகஸ்ட் 16. ரியோ டி ஜெனிரோவில் 5,000 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம். அரங்கம் நிறைந்திருந்தது. அந்தப் போட்டியில், அபி டி’அகஸ்டினோவும், நிக்கி ஹேம்ப்லினும் இருந்தார்கள். போட்டி தொடங்குவதற்கான துப்பாக்கி முழங்கியது. வீராங்கனைகள் ஓட ஆரம்பித்தார்கள்.

Motivation Story: `பதக்கம் மட்டுமா வெற்றி...’ ஒலிம்பிக்கில் மறக்க முடியாத ஒரு சாதனை!

அது 2016, ஆகஸ்ட் 16. ரியோ டி ஜெனிரோவில் 5,000 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம். அரங்கம் நிறைந்திருந்தது. அந்தப் போட்டியில், அபி டி’அகஸ்டினோவும், நிக்கி ஹேம்ப்லினும் இருந்தார்கள். போட்டி தொடங்குவதற்கான துப்பாக்கி முழங்கியது. வீராங்கனைகள் ஓட ஆரம்பித்தார்கள்.

Published:Updated:
 Nikki Hamblin, Abbey D'Agostino
News
Nikki Hamblin, Abbey D'Agostino
`நாம் எல்லோரும் தோல்வியாளர்களே. என்ன... குறைந்த எண்ணிக்கையில் நம்மில் சிறந்தவர்கள் இருக்கலாம், அவ்வளவுதான்!’ - ஸ்காட்லாந்து நாவலாசிரியர் ஜே.எம்.பேரி.

உலகம் முழுக்க இருக்கும் விளையாட்டு வீரர்களின் பெருங்கனவு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள். அதில் பங்கேற்று வெற்றிபெறும் வீரர்கள் உலக அளவில் கவனம் பெறுவார்கள்; கொண்டாடப்படுவார்கள். போட்டிகளில் பொதுவான விதி ஒன்று உண்டு. `சக போட்டியாளர்களைப் பற்றிக் கவலைப்படாதே. என்ன விலை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும். இலக்கை அடை, வெற்றி பெறு... அது ஒன்றுதான் முக்கியம்.’ எல்லா விளையாட்டு வீரர்களின் மனதிலும் இந்த சிந்தனைதான் ஊறிக்கிடக்கும். அந்த விதியை உடைத்து, `நாங்க வேறப்பா...’ என்று உலகையே வியப்பில் ஆழ்த்தியவர்களும் உண்டு. 2016-ம் ஆண்டு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நிகழ்த்தியவர்கள் அபி டி’அகஸ்டினோ (Abbey D'Agostino), நிக்கி ஹேம்ப்லின் (Nikki Hamblin) என்ற இரு பெண்கள்!

Abbey D'Agostino
Abbey D'Agostino

நிக்கி ஹேம்ப்லின், நியூசிலாந்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை. 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கில்லி. 2010-ம் ஆண்டு, இந்தியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் இரண்டாம் இடம் பிடித்தவர். அபி டி’அகஸ்டினோ, அமெரிக்காவின் மாசாசூசெட்ஸைச் சேர்ந்தவர். இவரும் ஓட்டப்பந்தய வீராங்கனை. 15 வயதிலிருந்தே ஒலிம்பிக்கில் சாதனை படைக்க வேண்டும் என்கிற லட்சியத்தைத் தனக்குள் விதைத்துக்கொண்டவர்.

அது 2016, ஆகஸ்ட் 16. ரியோ டி ஜெனிரோவில் 5,000 மீட்டர் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம். அரங்கம் நிறைந்திருந்தது. அந்தப் போட்டியில், அபி டி’அகஸ்டினோவும், நிக்கி ஹேம்ப்லினும் இருந்தார்கள். போட்டி தொடங்குவதற்கான துப்பாக்கி முழங்கியது. வீராங்கனைகள் ஓட ஆரம்பித்தார்கள்.

பாதி ஓட்டப்பந்தயத்தில் அது நடந்தது. யாருடைய காலோ, எப்படியோ தடுமாறி தடுக்கிவிட, டி’அகஸ்டினோவும் ஹேம்ப்லினும் தடுமாறி ஓட்டப்பந்தய மைதானத்திலேயே விழுந்தார்கள். அதிலும் தலைகுப்புற விழுந்தது ஹேம்ப்லின்தான். விழுந்த கணத்தில் அவர் மனதில் தோன்றியது ஒன்றுதான்... `அவ்வளவுதான்... நம் ஒலிம்பிக் கனவு தளர்ந்தது.’

`இல்லை’ என்று சொல்வதுபோல ஒரு மென்மையான கரம் ஒன்று அவர் தோளைப் பற்றியது. அது, டி’அகஸ்டினோ. தன் இரு கரங்களாலும் அவர், ஹேம்ப்லினைத் தூக்கிவிட்டார். `மனதைத் தளரவிடாதே... இது ஒலிம்பிக். நாம் ஓட்டத்தை முடித்தாக வேண்டும்’ என்றது அவர் பார்வை. `அந்த நேரத்தில் அந்த அமெரிக்கப் பெண், எனக்கு ஒலிம்பிக்கின் ஆன்மாவாகத் தெரிந்தாள். இத்தனைக்கும் அதற்கு முன்பு அந்தப் பெண்ணை நான் பார்த்ததுகூட இல்லை...’ என்று பின்னாளில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஹேம்ப்லின்.

நிக்கி
நிக்கி

ஹேம்ப்லின் எழுந்து நான்கைந்து தப்படி ஓடியிருப்பார். திரும்பிப் பார்த்தார். `அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு என்ன ஆனது?’ என திகைத்துப்போனார். உண்மையில், கீழே விழுந்ததில் டி’அகஸ்டினோதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் முழங்காலில் பலத்த அடி. மூட்டு சவ்வு கிழிந்துபோயிருந்தது. அவரால் ஓடவே முடியாது என்று தோன்றியது. எல்லைக் கோட்டை ஓடித் தொட இன்னும் 2,000 மீட்டர் தூரம் இருந்தது. `ஐயோ பாவம்... இந்தப் பெண் அவ்வளவு தூரம் ஓடி வந்துவிடுவாளா?’ என்று தோன்றியது. ஆனால், டி’அகஸ்டினோ ஓட்டத்தை நிறுத்தவில்லை. அடிபட்ட காலோடு, வலியைப் பல்லைக்கடித்துப் பொறுத்துக்கொண்டு மைதானத்தில் தன் ஓட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார். திரும்பப் பின்னால் வந்து, டி’அகஸ்டினோவுக்கு சில வார்த்தைகளைச் சொல்லி ஊக்கம் கொடுத்தார், பிறகு இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தார் ஹேம்ப்லின்.

தட்டுத் தடுமாறி ஓடி வந்து எல்லைக் கோட்டைத் தொட்ட அடுத்த கணம், ஹேம்ப்லின் ஓடிவந்து, டி’அகஸ்டினோவை இறுக அணைத்துக்கொண்டார். இரு பெண்களின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

ஒலிம்பிக் அமைப்பாளர்கள், இறுதிப்போட்டியில் பங்கேற்க அவர்கள் இருவருக்கும் அனுமதி கொடுத்தார்கள். ஆனால், ட்’அகஸ்டினோவுக்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அவரால் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை. ஹேம்ப்லின் மட்டும் கலந்துகொண்டார்.

மைதானத்தில் கண்ணியத்தைக் கடைப்பிடித்ததற்காகவும், அன்பு என்கிற அறத்தைக் கடைப்பிடித்ததற்காகவும், பரஸ்பரம் உதவிக்கொண்டதற்காகவும் இருவருக்கும் ஒரு விருது கிடைத்தது. அது, `தி இண்டர்நேஷனல் ஃபேர் ப்ளே கமிட்டி’ (The International Fair Play Committee) வழங்கிய `ரியோ 2016 ஃபேர் ப்ளே விருது.’

Motivation Story: `பதக்கம் மட்டுமா வெற்றி...’  ஒலிம்பிக்கில் மறக்க முடியாத ஒரு சாதனை!

`பிகில்’ படத்தில் நடிகர் விஜய் சொல்வதுபோல `கப்பு முக்கியம் பிகிலு...’ என்று ஒரு வசனம் வரும். வெற்றிக்கோப்பையைவிட, சக மனிதன் மீதான பரிவு முக்கியம் என்பதை வெகு அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்கள் இந்த வீராங்கனைகள்!