Published:Updated:

Morning Motivation: டிஸ்லெக்ஸியா, ஏழ்மை... தடைகளை உடைத்து சாதித்த ஜிம் கேரியின் கதை!

ஜிம் கேரி

ஜிம்மின் நகைச்சுவையும், நடிப்புத்திறனும் அவரைக் கைவிட்டுவிடவில்லை. `யுக் யுக்’ என்கிற காமெடி கிளப்பில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்ய ஒரு வாய்ப்பு. சிக்கெனப் பிடித்துக்கொண்டார்

Morning Motivation: டிஸ்லெக்ஸியா, ஏழ்மை... தடைகளை உடைத்து சாதித்த ஜிம் கேரியின் கதை!

ஜிம்மின் நகைச்சுவையும், நடிப்புத்திறனும் அவரைக் கைவிட்டுவிடவில்லை. `யுக் யுக்’ என்கிற காமெடி கிளப்பில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்ய ஒரு வாய்ப்பு. சிக்கெனப் பிடித்துக்கொண்டார்

Published:Updated:
ஜிம் கேரி
``எவ்வளவு திறமையிருந்தாலும், கடினமான உழைப்பு இல்லாவிட்டால் ஒன்றும் கிடைக்காது.’’ - கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

கலைஞர்கள் ஓய்வை விரும்ப மாட்டார்கள். முக்கியமாக, திரைப்பட நடிகர்கள் விரும்ப மாட்டார்கள். கடந்த ஏப்ரல் மாதம், ``என்னிடம் போதுமான அளவுக்கு எல்லாம் இருக்கின்றன. போதுமான அளவுக்கு நடித்தும்விட்டேன். இனி ஓய்வு பெறப்போகிறேன்’’ என்று அறிவித்தார் ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஜிம் கேரி. அதைக் கேட்டு அதிர்ந்துபோனார்கள் அவருடைய ரசிகர்கள். அவரின் `சோனிக் தி ஹெட்ஜ்காக் 2’ படத்துக்கான புரொமோஷனின்போது இப்படிச் சொல்லியிருந்தார் ஜிம். போதும் என்கிற அளவுக்குப் புகழும் பொருளும் அவருக்கு அத்தனை எளிதாகவா கிடைத்துவிட்டன?!

ஜிம் கேரி
ஜிம் கேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`டம்ப் அண்ட் டம்ப்பர்’, `மாஸ்க்’, `லையர் லையர்’, `தி ட்ரூமேன் ஷோ’... என ஹாலிவுட்டில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஜிம் கேரி. `இவ்வளவு திறமைசாலியா... அப்படியானால் அவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தரமான பள்ளியில், உயர்ந்த கல்வி படித்திருக்க வேண்டும்...’ இப்படியெல்லாம் தோன்றுகிறது அல்லவா... அதுதான் இல்லை. கனடாவிலிருக்கும் டொரொன்டோவில், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஜிம். இது போதாதென்று, சிறுவயதிலேயே அவருக்கு `டிஸ்லெக்ஸியா’ (Dyslexia) எனப்படும் கற்றல் குறைபாடு. ஆசிரியர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள், என்ன பாடம் நடத்துகிறார்கள் என்றே அவருக்குப் புரியாது. அவருடைய அமைதியான சுபாவத்தால் பள்ளியில் நண்பர்களும் கிடையாது.

ஒன்று மட்டும் ஜிம் கேரிக்குப் புரிந்தது... சக மாணவர்களை சிரிக்கவைத்தால் அவர்களுடன் நெருக்கமாகிவிடலாம் என்கிற உண்மை. `சிறந்த காமெடியனாக உருவாக வேண்டும்... அதுதான் லட்சியம்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்வார். வீட்டில் கண்ணாடி முன்பு நின்று, முகத்தை அஷ்டகோணலாக்கிக்கொண்டு விதவிதமாகப் பேசிப் பார்ப்பார். மிமிக்ரி செய்வார். அப்பா அவரை ஊக்கப்படுத்தினார். அம்மாவுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ``இது என்ன கோமாளித்தனம்... படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா?’’ என அவரிடமிருந்து திட்டு விழும். ரூமுக்குள் அடைந்துகொள்வார் ஜிம். அங்கேயும் ஒரு கண்ணாடி இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜிம்முக்கு இருந்த குறைபாட்டையும் புரிந்துகொள்ள ஒரு ஜீவன் இருந்தது. ஓர் ஆசிரியை. பெயர் லூசி டெர்வைய்ட்டிஸ் (Lucy Dervaitis). அவருக்கும் ஒரு லட்சியம் இருந்தது. பெரிய நகரம், சிறந்த பள்ளியில் பணியாற்றுவதில் அவருக்கு விருப்பமில்லை. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட, `ஒன்றுக்கும் உதவாது’ என்று கைவிடப்பட்ட மாணவர்களை வளர்த்தெடுப்பது என்கிற உன்னத லட்சியம். லூசிக்கு ஜிம்மைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. துறுதுறுவென இருக்கும் சுபாவம், முகத்தில் மிளிரும் குறும்புத்தனம், எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் சுபாவம்... யாருக்குத்தான் ஜிம்மைப் பிடிக்காது?

ஜிம் கேரி
ஜிம் கேரி

ஒருநாள் லூசி, ஜிம்மை அழைத்தார். ``இங்கே பாரு. நீ நல்லா நடிப்பே, காமெடி பண்ணுவேன்னு கேள்விப்பட்டேன். நான் உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன் செய்வியா?’’

``என்ன?’’

``நம்ம கிளாஸ் பசங்ககிட்ட உன் திறமையைக் காட்டு. நல்லா நடி, அவங்களை சிரிக்க வை... சரியா?’’

ஜிம் கேரியின் கண்கள் விரிந்தன. ``உண்மையாவா மிஸ்?’’

``நிஜமாத்தான் சொல்றேன். ஆனா ஒரு கண்டிஷன். ஸ்கூல் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் நீ இதையெல்லாம் செய்யணும்; அதுக்கு முன்னாடி உன் பாடத்தையெல்லாம் முடிச்சிடணும்.’

``அப்ப சரி.”

லூசி போட்ட நிபந்தனைக்காகவே பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஜிம். அவர் கவனம் பாடத்தில் குவிந்தது. அவருடைய கற்றல் குறைபாடு அவரிடமிருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், சீக்கிரமே தன் பாடங்களை முடிக்கப் பழகிக்கொண்டார் ஜிம். பள்ளி முடிந்ததும், மாணவர்களுக்கு முன்னால் தனக்குத் தோன்றிய வசனங்களைப் பேசுவார். அங்கேயும் இங்கேயும் குதித்து ஓடி, ஆடி எல்லோரையும் சிரிக்கவைப்பார்.

ஒருநாள் லூசியிடம் தயங்கித் தயங்கி கேட்டார்... ``மிஸ்... நான் பண்றதெல்லாம் போரடிக்குதா?’’

``யார் சொன்னா... பிரமாதமா போய்க்கிட்டிருக்கு. எல்லா ஸ்டூடன்ட்ஸும் எப்படா ஸ்கூல் முடியும்னு காத்துக்கிட்டிருக்காங்க... இப்பிடி கேட்கிறியே?’’

ஜிம் கேரி
ஜிம் கேரி

ஆனாலும், வாழ்க்கைச்சூழல் அவரை பள்ளியிலிருந்து வெளியேற வைத்தது. பணம் பெரிய பிரச்னையாக இருந்தது. மிகக் குறைந்த வாடகைக்கு வீடு எங்கே கிடைக்கும் என்று தேடித் தேடி வாழ்ந்தது ஜிம்மின் குடும்பம். அவர் பத்தாவது கிரேடு படிக்கும்போது வேலைக்குச் சென்றேயாக வேண்டும் என்கிற சூழ்நிலை. பள்ளிக்கூடம் விட்டு வந்து ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப் போனார் ஜிம். எட்டு மணி நேர செக்யூரிட்டி கார்டு வேலை. எட்டு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, கொஞ்சம் தூங்கிவிட்டு, மறுபடியும் பள்ளிக்கு ஓட வேண்டும். 16 வயதில் பள்ளிப் படிப்பை விட்டார் ஜிம். ஆனால், கூடவே ஒட்டிக்கொண்டிருந்த நகைச்சுவை உணர்வையும், நடிப்பையும் விடவில்லை. தொடர் பயிற்சி, பார்க்கிறவர்களையெல்லாம் எப்படியாவது சிரிக்கவைத்துவிடுவது என்பதில் குறியாக இருந்தார்.

ஒரு கட்டத்தில் வீட்டு வாடகைகூட கொடுக்கப் பணமில்லாமல் அல்லாடியது ஜிம்மின் குடும்பம். கிடைக்கிற மைதானங்களில், காலியாக இருக்கும் தெருக்களில் அந்தக் குடும்பத்தின் மஞ்சள் நிற வோல்க்ஸ் வேகன் வேன் நிற்கும். அதற்குள்தான் ஜிம், அவருடைய பெற்றோர், சகோதரன், இரு சகோதரிகள் எல்லோரும் படுத்துக்கிடந்தார்கள். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் இப்படி வேனுக்குள்ளேயே வாழ்ந்தார்கள். பிறகு ஜிம்மின் அப்பாவுக்கு ஒரு கணக்கு வேலை கிடைக்க குடும்பம் மூச்சுவிட ஆரம்பித்தது.

ஜிம்மின் நகைச்சுவையும், நடிப்புத்திறனும் அவரைக் கைவிட்டுவிடவில்லை. `யுக் யுக்’ என்கிற காமெடி கிளப்பில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்ய ஒரு வாய்ப்பு. சிக்கெனப் பிடித்துக்கொண்டார் ஜிம். கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. எல்லாவற்றிலும் தன் தனி முத்திரையைப் பதித்து, பட்டையைக் கிளப்பினார் ஜிம். அவர் திறமை அவரை ஹாலிவுட்டில் கால்பதிக்கவைத்தது. பல வெற்றிகளை வாரித் தந்தது.

எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது ஜிம் கேரியின் இயல்பிலேயே இருந்தது. கடந்த மாதம்கூட `அவர் இறந்துவிட்டார்’ என்று ஓர் ஊடகத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டு, உலகெங்கும் பரவியது. இது குறித்து அவரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டபோது, ஒற்றைச் சிரிப்பை பதிலாகத் தந்துவிட்டுக் கடந்து போய்விட்டார்.

ஜிம் கேரி இந்த உலகத்துக்கு அழுத்தமாகச் சொல்வது ஒன்றைத்தான்... ``உங்களிடம் ஏதாவது ஒரு திறமை இருக்கிறதா... அதை பத்திரமாக வைத்திருங்கள்!’’jim