Published:Updated:

``போராட்டத்தை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கு!''- கீர்த்தன்யா #Motivation

கீர்த்தன்யா
News
கீர்த்தன்யா ( படங்கள்: ஸ்ம்ரித்தி பாஸ்கர் )

``எல்லோருடைய வாழ்க்கை மாதிரியே என்னுடைய வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைஞ்சதுதான். படிச்சவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் யாராக இருந்தாலும் ஒரு போராட்டமான வாழ்க்கையை, இந்தப் பூமியில் சந்திச்சுதான் ஆகணும்."

``பூமியில் நாம பிறக்கும்போதே போராடிட்டேதான் பிறக்கிறோம். போராட்டம்ங்கிறது எல்லோருடைய வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒண்ணு. ஆனால், அதை நாம எப்படி எடுத்துக்கிறோம்ங்கிறதுலதான் நம்முடைய வெற்றியே அடங்கியிருக்கு'' என்கிறார், தன்னம்பிக்கை பயிற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கீர்த்தன்யா. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி, பெற்றோர்கள் வரை 3 லட்சம் பேருக்கும் மேல் தன்முனைப்புப் பயிற்சி அளித்திருக்கிறார். உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணித்துவருகிறார். `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காக அவரை சந்தித்தோம்.

Keerthanya
Keerthanya

``எல்லோருடைய வாழ்க்கை மாதிரியே என்னுடைய வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைஞ்சதுதான். படிச்சவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் யாராக இருந்தாலும் ஒரு போராட்டமான வாழ்க்கையை இந்த பூமியில் சந்திச்சுதான் ஆகணும்.

பணக்காரர்களுக்கு பணத்தை நோக்கிய போராட்டம், ஏழைக்கு அன்றாட வாழ்க்கையுடனான போராட்டம், குழந்தைக்கு அது விரும்புகிற பொருள்களுக்கான போராட்டம், வயோதிகர்களுக்கு வயோதிகத் தன்மையுடனான போராட்டம்... இப்படிப் பல போராட்டங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தப் போராட்டங்கள் என் வாழ்க்கையிலும் நிறைய இருந்திருக்கு. ஆனால், எதற்காகப் போராடுறோம், ஏன் போராடுறோம்னு தெரிஞ்சு போராடினா நாம வெற்றியடையலாம்.

கிரேக்க தத்துவ ஞானி எபிக்டீடஸின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.

ஓர் அடிமையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார் எபிக்டீடஸ். பழங்கால கிரேக்கத்தில் இருந்த ஒரு சமூகக் கட்டமைப்பு அது. எபிக்டீடஸுக்கு அவரின் எஜமானன் ஏராளமான வேலைகளைக் கொடுத்து செய்யச்சொல்வார். எபிக்டீடஸ் கூடவே இருக்கணும்கிறதுக்காக அவரின் கால்களைக் கீறியிருக்கிறார்.

Epictetus
Epictetus
Impulse Nine Media

எபிக்டீடஸும் தன் எஜமான் என்னென்ன விரும்புகிறாரோ அவற்றையெல்லாம் ரொம்பவும் சிறப்பான முறையில சின்சியரா செஞ்சு கொடுத்துக்கிட்டே இருந்தார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அடுத்த மனிதனுடைய விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு மனிதனாக அவர் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதர், கிரேக்க தத்துவங்கள் எல்லாவற்றையும் வாசிச்சு, அதுல மிகத் தேர்ச்சி பெற்றவராக மாறினார்.

வாழ்க்கையை எப்படி வாழணும்ங்கிறதுக்காக ஞானத்தின்மீது ஈடுபாடு கொண்டு, பிலாஸஃபி ஸ்கூலுக்குப் போய் நிறைய படிச்சிருக்கார்.

ஒரு கட்டத்தில் அந்த எஜமானனுக்கு இவரின் பணிவு, செயல்பாடு இவையெல்லாம் ரொம்ப பிடிச்சுப்போச்சு. அவருக்கு சுதந்திரத்தைத் தந்தார். அடிமையாயிருந்து சுதந்திரமான ஒரு வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வாழ்ந்து, தன் வாழ்க்கையின் தத்துவம் பற்றி ஒரு முறை இப்படிக் கூறியிருந்தார் எபிக்டீடஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இந்த உலகில் சில விஷயங்கள் மட்டுமே உன் கையில். மற்றவை உன்னுடையது அல்ல. உன் சக்திக்குள் எப்போதும் உள்ள விஷயங்கள்: உன் மனம், அதில் போகும் யோசனைகள், உன் பண்பு, உன்னுடைய மதிப்பீடுகள், மனஉந்துதல், ஆசை, அருவருப்புகள் மட்டுமே. ஒரு வரியில் சொன்னால், உன் சுயஇச்சை மற்றும் இயக்கத்தினால் உருவாகுபவை.

உன் கைக்குள் இல்லாதவை: உன் உடல், உன் சொத்து, உன் புகழ், உன் அலுவலகப் பொறுப்புகள். ஒரு வரியில் சொன்னால் மற்றவர் இச்சைக்கும் செயலுக்கும் உட்பட்டவை.

Keerthanya
Keerthanya

உன் ஆளுமையில் உள்ளது எல்லாமே இயற்கையில் யாருமே அபகரிக்க முடியாதவை... யாருமே குறுக்கே வந்து தட்டிப் பறிக்க முடியாதவை, எப்போதுமே சுதந்திரமாக இருக்கக்கூடியவை.

மற்றவர் ஆதிக்கத்தில் உள்ளவை அடிமைப்படுத்தக்கூடியவை, நிரந்தரமில்லாதவை, நம்மை செயலிழக்கச் செய்பவை. ஆகவே, எப்போதும் நினைவில்கொள், உன் முழு சக்திக்குள் இல்லாத பொருள்கள்மீது நாட்டம் கொண்டு, அவை உனது என்ற மாயைக்குள் சிக்கிவிட்டாய் என்றால், பல வேதனைகளில் சிக்கி சின்னாபின்னமாகி, கடவுளையும் சக மனிதர்களையும் தூற்றுவாய்.

ஆகவே, எப்போதும் உன் ஆளுமைக்குள் உள்ளவை மட்டுமே உனக்கு சொந்தம் என்பதை மனதில் நிறுத்தி, அதன் பின்னே மட்டும் உன் மனதை செலுத்தினால், இவ்வுலகிலே சொர்க்கத்தைக் காண்பாய்.

ஏன் என்றால், யாராலும் உன்னை நசுக்க முடியாது, உன் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது, உன்னை வற்புறுத்த முடியாது, நீ யாரையும் குறைசொல்ல மாட்டாய். எந்த ஒரு சிறு விஷயத்தையும் உன் விருப்பமில்லாமல் செய்ய மாட்டாய். எந்த ஒரு தீங்கும் உனக்கு விளையாது."

சுதந்திரத்தைப் பற்றி ஒரு அடிமை எவ்வளவு அழகா சொல்லியிருக்கார் பாருங்க. என்னுடைய போராட்டங்களை நான் பரிசீலனை பண்ணிப்பார்த்தா, அனுக்ஷனமும் அடுத்தவங்க தட்டிப் பறிக்கக்கூடிய ஒரு சில விஷயங்கள் மேல நான் மனசு வைப்பதால்தான் நான் கஷ்டப்படுகிறேன். நாம் யார்மீது அன்பு வைக்கிறோமோ அவங்க நமக்கு அன்பைத் திருப்பித் தராதபோது, நமக்கு அது வேதனையாக மாறுது. பொருளுக்காக ஆசைப்படுகிறோம். அந்தப் பொருள் உடைந்துபோனா வேதனை. ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம். அந்தக் குழந்தை நாம சொல்றதைக் கேட்கலைன்னா வேதனை.

நான் ஒரு நல்ல தாயாக இருக்கணும், நல்ல காதலியாக இருக்கணும், என்னுடைய நிர்வாகத்தை நல்லபடியா நடத்தணும்னு நான் நினைக்கிறது சரி. அதுக்கு மேல நடக்கிறதெல்லாம் விதி. விதி பற்றி நான் என் மனசுல வெச்சுக்கக் கூடாது.

இப்படி என் மனதையும் என் போராட்டங்களையும் பிரித்துப் பார்க்கக்கூடிய சக்தி எனக்கு வந்த பிறகு, உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

நான் ஒரு ஒர்க் ஷாப்புக்கு போகலாம். அங்க போய் என்னோட பயிற்சியை நான் சிறப்பாக நடத்தலாம். ஆனா, அவங்க என்னை பாராட்டணும், எனக்கு கைதட்டணும்னு நினைக்க ஆரம்பிச்சா, அந்தக் கணத்தில் அந்த நிகழ்ச்சியிலிருந்து வேறுபட்டுப் போயிடுவேன். அந்த நிமிஷத்துல, மனசுல பயம் வந்து ஆட்கொண்டுவிடும். அவங்க கைதட்டல்களுக்காகப் பேச ஆரம்பிப்பேனே தவிர, என் மனத்தின் உண்மைகளைப் பேசத் தவறிடுவேன்.

என்னுடைய வேலை முதல் நண்பர்கள் வரை நான் இந்தப் பண்பை வசப்படுத்தும்போது, எனக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கு.

இதன் பலனாய், என்னுடைய பயிற்சிக்கு வர்றவங்க இதைக் கேட்கும்போது, அவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையுது. எனக்கும் அது திருப்தியா இருக்கு.

என்னுடைய வாழ்வை மாற்றிய வாக்கியம்னா, கிரேக்க ஞானி எபிக்டீடஸின் வாக்கியத்தைத்தான் சொல்வேன்'' என்கிறார் கீர்த்தன்யா.