Published:Updated:

`வேலையைவிட வாழ்க்கை முக்கியம் பாஸ்' - நமிதா தாப்பரின் ட்வீட்டும் நெட்டிசன்களின் ரியாக்ஷனும்!

நமிதா தாப்பர்

வேலைக்கும் சுய வாழ்வுக்குமான சமநிலையை Work - Life Balance என்கிறார்கள். இந்தச் சமநிலை குறித்து நமிதா தாப்பர் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

`வேலையைவிட வாழ்க்கை முக்கியம் பாஸ்' - நமிதா தாப்பரின் ட்வீட்டும் நெட்டிசன்களின் ரியாக்ஷனும்!

வேலைக்கும் சுய வாழ்வுக்குமான சமநிலையை Work - Life Balance என்கிறார்கள். இந்தச் சமநிலை குறித்து நமிதா தாப்பர் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Published:Updated:
நமிதா தாப்பர்
வேலை என்பது வாழ்வின் ஒரு பகுதி தான். அதுவே வாழ்க்கை அல்ல. அலுவலக பணிக்கும் சுய வாழ்வுக்குமான சமநிலையை Work - Life Balance என்கிறார்கள். இந்தச் சமநிலை குறித்து நமிதா தாப்பர் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

நமிதா தாப்பர், எம்கியூர் பார்மெட்டிக்கல்ஸ் (Emcure Pharmaceuticals) நிறுவனத்தின் செயல் இயக்குநர். Shark Tank India டிவி நிகழ்ச்சியின் நடுவராகவும் இருக்கிறார். அவர் ட்வீட்டில் பகிர்ந்திருப்பது, " 'வேலைக்காக பல மணிநேரங்கள் ஓடுகிறேன், நிறைய பயணம் செய்கிறேன், குடும்பத்திற்கு ஒதுக்க நேரம் இல்லை' என்பதை நேர்மைக்கான அடையாளமாகத் தூக்கிச் சுமக்காதீர்கள். வாழ்விற்கும் வேலைக்குமான சமநிலை எல்லா நிறுவனத்திலும் சரி செய்யப்பட வேண்டும். பணியாளர்கள் சரியான மனநிலையோடு இருக்க அது உதவும். அடுத்த தலைமுறை ஆக்கபூர்வமாக உருவாக பெற்றோர் இருவரின் நேரமும் ஈடுபாடும் அவசியம்" என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

Work place
Work place

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், "வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் என்கிற முறையை இந்தியா முயற்சித்து பார்ப்பதற்கான நேரம் இது" எனப் பதிவிட்டுள்ளார்.

பெரும்பாலான பணியாளர்கள் விரும்புகிற ஒன்றாக இந்த வாழ்வு-பணி சமநிலை என்பதிருப்பதாக Michael Page என்கிற வேலைவாய்ப்பு தளத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இதன் அறிக்கையின்படி இந்தியாவில் 86 சதவிகித பணியாளர்கள் இன்னும் ஆறு மாதத்தில் தங்கள் வேலைகளைக் கைவிட இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். 61 சதவிகித பணியாளர்கள் குறைந்த சம்பளமாக இருந்தபோதிலும் தாங்கள் பணிபுரியும் குறைந்த பதவி நிலையிலேயே இருக்க விரும்புகின்றனர்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன? கமென்டில் சொல்லுங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism