Published:Updated:

இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை - யுனெஸ்கோவின் பாரம்பர்யப் பட்டியலில் தாய்லாந்தின் `நவுத் தாய்' மசாஜ்!

`நவுத் தாய்' மசாஜ் என்பது, கட்டைவிரல், முழங்கைகள், முழங்கால்கள் , கால்கள் ஆகியவற்றின் மூலம் உடல்வலி குறைய தரப்படும் சிகிச்சை.

`நவுத் தாய்' மசாஜ்
`நவுத் தாய்' மசாஜ் ( nuadthaimassage.com )

இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான தாய்லாந்தின் `நவுத் தாய் (Nuad Thai)' மசாஜ், யுனெஸ்கோவின் பாரம்பர்யப் பட்டியலின் கீழ் இந்த மாத இறுதிக்குள் கொண்டுவரப்பட இருக்கிறது. `நவுத் தாய்' மசாஜ் என்பது, கட்டைவிரல், முழங்கைகள், முழங்கால்கள், கால்கள் ஆகியவற்றின் மூலம் உடல்வலி குறைய தரப்படும் சிகிச்சை.

ரிக்ளைனிங் புத்தா
ரிக்ளைனிங் புத்தா

இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்ததுதான் என்ற போதிலும், காலச் சுழற்சியில், இடையில் பல வருடங்களுக்கு நவுத் தாய் மசாஜ் காணாமல் போயிருந்தது. 1962-ம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக் மாகாணத்தில் `ரிக்ளைனிங் புத்தா ஸ்கூல் (Reclining Buddha School)' என்ற ஆலயம் நிறுவப்பட்டபோதுதான் நிகழ்ந்தது... நவுத் தாய்யின் ரீ-என்ட்ரி!

ஆலயத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டின் பாரம்பர்யம் அழிந்துவிடக்கூடாதென, 1962-ல் ஆலயத்தின் உள்ளேயே `நவுத் தாய் மசாஜை முறையாகச் செய்வது எப்படி' எனப் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினர். இப்படி ரீ-என்ட்ரி கொடுத்து வந்த இந்த மசாஜை, `ரிக்ளைனிங் புத்தா ஸ்கூலி'ல் மட்டும், இதுவரையில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளனராம்.

பிரியாணிக்கு ஹைதராபாத், சினிமாவுக்கு மும்பை... இந்திய நகரங்களுக்கு யுனெஸ்கோ விருது!
இப்போது இவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் 145 நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர் என்கிறது, பிரான்ஸின் ஓர் ஆய்வு.

புத்தா ஸ்கூல் ஆலயத்தின் இயக்குநர் ப்ரீதா, பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில், ``உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளின் மீது கவனம் குவித்து நவுத் தாய் மசாஜ் மேற்கொள்ளப்படும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்த இந்த மசாஜ் அதிகளவில் உதவும். இந்த மசாஜ் முறையைக் கற்றுக்கொண்டு, ஜப்பானின் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தியாவில், டெல்லியில் நவுத் தாய் மசாஜ் சர்வீஸ் வழங்கப்படுகிறது!
மசாஜ்
மசாஜ்

விஷயத்தை நன்றாக உள்வாங்கிக்கொண்டு, கைகளை மட்டும் பயன்படுத்திச் செய்தால் போதும் என்பதால், பல மாற்றுத்திறனாளிகளுக்குக்கூட இந்த மசாஜ் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது" எனக்கூறியுள்ளார். இந்தியாவில், டெல்லியில் நவுத் தாய் மசாஜ் சர்வீஸ் வழங்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்!