Published:Updated:

மூன்று கோடி ரூபாய்க்கு ஏலம்போன நைகீ `மூன் ஷூ'! - அப்படி என்ன ஸ்பெஷல்?

Nike Moon Shoe

2017-ம் ஆண்டு, கலிபோர்னியாவில் நடைபெற்ற பொது ஏலத்தில், ஜோர்டானின் கையொப்பமிட்ட ஸ்னீக்கர்ஸ், 190,373 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. இந்தப் பதிவை தற்போது முறியடித்திருக்கிறது நைகீயின் மூன் ஷூ.

மூன்று கோடி ரூபாய்க்கு ஏலம்போன நைகீ `மூன் ஷூ'! - அப்படி என்ன ஸ்பெஷல்?

2017-ம் ஆண்டு, கலிபோர்னியாவில் நடைபெற்ற பொது ஏலத்தில், ஜோர்டானின் கையொப்பமிட்ட ஸ்னீக்கர்ஸ், 190,373 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. இந்தப் பதிவை தற்போது முறியடித்திருக்கிறது நைகீயின் மூன் ஷூ.

Published:Updated:
Nike Moon Shoe

1972-ம் ஆண்டு, நைகீ நிறுவனம் தயாரித்த முதல் ஜோடிகளில் ஒன்றான ரன்னிங் ஸ்னீக்கர்ஸ், கடந்த மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற பொது ஏலம் ஒன்றில் 4,37,500 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதாவது, மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த நைகீ 'Moon ஷூ' ஜோடி, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஓட்டப்பந்தய வீரர்களுக்காக, நைகீ இணை நிறுவனரும் டிராக் பயிற்சியாளருமான பில் பவர்மேன், தன் கைகளாலேயே வடிவமைத்த 12 ஜோடி ஷூக்களில் ஒன்று.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1984 ஒலிம்பிக் இறுதிப் போட்டியில், கூடைப்பந்து நட்சத்திர வீரரான மைக்கேல் ஜோர்டன் அணிந்த ஷூக்கள்தான், இதற்கு முன் அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட ஷூவாக இருந்தது. 2017-ம் ஆண்டு, கலிபோர்னியாவில் நடைபெற்ற பொது ஏலத்தில், ஜோர்டானின் கையொப்பமிட்ட ஸ்னீக்கர்ஸ், 1,90,373 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. இதைத் தற்போது முறியடித்திருக்கிறது, நைகீயின் மூன் ஷூ.

Moon Shoe
Moon Shoe

நியூயார்க்கிலுள்ள பிரபல Sotheby’s ஏல அலுவலகத்தில், நைகீ மூன் ஏலம் நடைபெற்றது. கனடாவைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளரும் கார் சேகரிப்பாளருமான மைல்ஸ் நடால் (Miles Nadal) இந்த மூன் ஷூக்களை வாங்கினார். விற்கப்பட்ட ஜோடி ஷூக்கள் மட்டுமே உபயோகிக்காத நிலையிலிருந்ததாக Sotheby’s ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்நிறுவனம் விற்க இருந்த 99 அரிய ஸ்னீக்கர்களையும் வாங்க முடிவு செய்தார் நடால். இதற்காக, 8,50,000 அமெரிக்க டாலர்களை அன்றே செலுத்தி முன்பதிவுசெய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பத்து மில்லியன் டாலர்கள் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள கலைப் படைப்புகளை விற்பனை செய்வதில் Sotheby’s மிகவும் பிரபலமானது. இதுவரை தயாரிக்கப்பட்ட அரிய ஸ்னீக்கர்களில், 100 ஜோடிகளை ஏலத்தில் விட, streetwear சந்தைப் பொருள்களுடன் இணைந்து செயல்பட்டுவந்தது. இவர்களின் அனைத்து ஷூக்களையும் பெற்ற நடால், "விளையாட்டு வரலாறு மற்றும் பாப் கலாசாரத்தில் உண்மையான வரலாற்றுக் கலைப்பொருள்" என்று அவற்றை வர்ணித்தார்.

At Sothebys Auction House
At Sothebys Auction House

மேலும், டொரான்டோவிலுள்ள தன் தனியார் ஆட்டோமொபைல் மையத்தில், தற்போது புதிதாக வாங்கிய 99 காலணிகளுடன் பிரத்யேக மூன் ஸ்னீக்கர்ஸையும் காட்சிப்படுத்தப்போவதாக நடால் கூறினார். Sotheby’s நிறுவனத்தின் சர்வதேச இணையவழித் தலைவர் Noah Wunsch, "இந்த ஸ்னீக்கர்ஸ் ஏலம், கலை, கலாசாரம் மற்றும் ஃபேஷன் ஆகியவற்றை ஒன்றாக இணைத்திருக்கிறது" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism