Published:Updated:

தளபதிக்கும் தலைவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்! | பர்வீன் சுல்தானா | சொல் புதிது

தலைமைப் பண்பு என்றால் என்ன, அது ஏன் தேவை என்பதைச் ‘சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எல்லோருக்கும் தலைவனாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான தகுதி எல்லோரிடமும் உண்டா, என்ன? ஆசை இருப்பது வேறு; தகுதியோடு இருப்பது வேறு. தலைவர் ஒருவர் இருக்கிறார், தளபதி ஒருவர் இருக்கிறார். இருவருக்கும் என்ன வித்தியாசம். போர் முனையில் நின்று போர் செய்பவன் தளபதி; போருக்கு எப்போது செல்ல வேண்டும் என்று முடிவெடுப்பவன் தலைவன். நிதானம் தான் தலைமைப் பண்பு. நல்ல தலைவன் என்பவன், எல்லோரையும்விட சிறப்பானவன், சிறப்பானவள் இல்லை. தன்னைவிடச் சிறப்பானவர்களை உருவாக்குபவர்களே தலைவர்கள். சமூக சேவை செய்வதன் மூலம், தன் ஆளுமையை வளர்த்துக் கொண்டு, அடுத்தவர்களுக்காக யோசிக்கக் கூடியவர்கள், செயல்படக் கூடியவர்களே தலைவர்களாக இருக்கிறார்கள்.

தலைமைப்பண்பு என்பது ஒரு உயர்ந்த பண்பு. இன்றைய சமூகத்தில் பல நேரங்களில் நமக்கு இருக்கக் கூடிய வெற்றிடம் என தெரியுமா? தலைமை குணம் படைத்தவர்கள் இல்லை, தலைமைப் பதவியில் இருக்கின்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த குணம் படைத்தவர்களால் தான் இந்த உலகம் தன்னைச் செதுக்கிக் கொள்ளும், அந்தத் தலைமை இல்லாத சமுதாயம் தன்னைத் தானே தின்றுவிடும்

தலைமைப் பண்பு என்றால் என்ன, அது ஏன் தேவை என்பதைச் ‘சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு