Published:Updated:

`15 வருஷமாக இருண்டு கிடந்த வாழ்க்கையில் வெளிச்சம்!' - இளைஞர்கள் உதவியால் நெகிழும் பூங்கோதை பாட்டி

சூரிய ஒளி மினசாரம்

பல வருஷமாக இருட்டுக்குள்ளே வாழ்ந்துக்கிட்டு வந்த நாங்க இன்னைக்கு புதுசா பல்பு வெளிச்சத்தைப் பார்க்கிறோம். வீட்டில்தான் இருக்கிறோம். ஆனா, வானத்தில பறக்குற மாதிரி இருக்குது.

`15 வருஷமாக இருண்டு கிடந்த வாழ்க்கையில் வெளிச்சம்!' - இளைஞர்கள் உதவியால் நெகிழும் பூங்கோதை பாட்டி

பல வருஷமாக இருட்டுக்குள்ளே வாழ்ந்துக்கிட்டு வந்த நாங்க இன்னைக்கு புதுசா பல்பு வெளிச்சத்தைப் பார்க்கிறோம். வீட்டில்தான் இருக்கிறோம். ஆனா, வானத்தில பறக்குற மாதிரி இருக்குது.

Published:Updated:
சூரிய ஒளி மினசாரம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காயக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மனைவி பூங்கோதை (83). பழனிசாமி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிடவே, அதன்பின்பு பூங்கோதை, சற்றே உடல்நலம் குன்றிய தன் மகனுடன் இருந்த வீட்டையும் இழந்து நிர்கதியாக நின்றுள்ளார். அப்போது, பழனிசாமியின் உறவினர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளனர். அதில் குடிசை போட்டு வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.

சூரியஒளி மினசாரம்
சூரியஒளி மினசாரம்

உடல் நலம் குன்றிய பூங்கோதை, உடல்நிலை சரியில்லாத மகனுடன் தினமும் சாப்பாட்டுக்கே திண்டாடி வருகிறார். இதுபற்றி தெரிந்தவர்கள் சிலர் அவ்வப்போது பூங்கோதைக்கு உதவுகின்றனர். ஆனால், நிரந்தரத் தீர்வு அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான் பூங்கோதை கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி உதவி கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு வந்த பொதுமக்கள் சிலரிடம் நாங்கள் இருட்டில்தான் வாழ்கிறோம் இப்போதைக்கு விளக்கு வெளிச்சமும் சாப்பாட்டுக்கு அரிசியும் கிடைத்தால் போதும் என்று தங்களுடைய கதையைச் சொல்லிப் புலம்பி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு, இதைக் கேட்டுக்கொண்டிருந்த, பக்கத்து ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் ஒரு சில தினங்களிலேயே இளைஞர்கள் சிலருடன் பூங்கோதையின் வீட்டுக்குச் சென்று, வீட்டின் வாசலில் சூரியசக்தி மின்சார அமைப்பை ஏற்படுத்தி வீட்டில் மின்விளக்குகளை எறிய விட்டு பூங்கோதைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். மேலும், அவர்கள் அரிசி உள்ளிட்ட சாப்பிடுவதற்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களையும் அவர்களுக்குக் கொடுத்து உதவினர்.

சூரியஒளி மினசாரம்
சூரியஒளி மினசாரம்

இதுபற்றி உதவிசெய்தவரிடம் கேட்டபோது, "இருட்டுக்குள்ளதான் வாழ்க்கை நடத்துறோம். நல்லா வாழ்ந்த ஒரு குடும்பம், நடுத்தெருவுக்கு வந்திருச்சுன்னு, அந்த அம்மா சொன்னது என்னை ரொம்பவே பாதிச்சிருச்சு. அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அவங்களுக்கு புடிச்ச மாதிரியும் இருக்கணும். மின்சார இணைப்பு வாங்கிக்கொடுத்தாலும், ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் கட்டணும். அதனால, சோலார் அமைப்பை ஏற்படுத்தி சூரியசக்தி மூலம் மின்சாரம் கொடுத்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5 வருஷத்துக்கு அவங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. நான் செஞ்சது ரொம்ப சின்ன விஷயம்தான். தொடர்ந்து, அவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்" என்கிறார். இதுபற்றி பூங்கோதை பாட்டி, "இந்த ஊர்ல பாதி சொத்து எங்க வீட்டுக்காரருக்கு இருந்துச்சு. இன்னைக்கு ஒரு சென்ட் இடம்கூட எங்களுக்கு இல்லை. உறவினர் ஒருவரோட வீட்டுல நானும், உடம்பு சரியில்லாத என்னோட மூத்த மகனும் இருக்கோம். என்னால சொல்லி புலம்பத்தானே முடியும். எப்பவும் போல புலம்பினேன்.

சூரியஒளி மினசாரம்
சூரியஒளி மினசாரம்

அன்னைக்கு அந்தக் கருணை உள்ளம் கொண்ட தம்பி என் புலம்பல் கேட்டு இன்னைக்கு எனக்கு உதவி செஞ்சிருக்கு. வாழ்நாள் இருக்க வரைக்கும் கண்டிப்பாக அந்தத் தம்பியை மறக்க மாட்டோம். பல வருஷமாக இருட்டுக்குள்ளே வாழ்ந்துக்கிட்டு வந்த நாங்க இன்னைக்கு புதுசா பல்பு வெளிச்சத்தைப் பார்க்கிறோம். வீட்டில்தான் இருக்கிறோம். ஆனா, வானத்தில பறக்குற மாதிரி இருக்குது" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism