Published:Updated:

``ஒரு ரூபாய் பணம்; ஒரு பூ ..!’’ - புதுக்கோட்டைப் பகுதியில் தீயாகப் பரவும் புரளி #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு புரளி றெக்கைகட்டி பறக்கும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் அழியப்போகிறது என்றும் அதைத் தவிர்க்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் காமாட்சி விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் புரளி கிளம்பியது. இதை உண்மை என நம்பிய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுவாசலில் காமாட்சி விளக்கை ஏற்றி வழிபாடு நடத்தினர்.

Representational Image
Representational Image

அந்தவகையில் இப்போது புதிதாகச் சேர்ந்திருக்கும் புரளி வீட்டில் ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் இருந்தால், அது அவர்களுக்கு கெடுபலன்களைத் தரும். இதற்குப் பரிகாராமாக அண்டை வீட்டார்கள், தெருவில் உள்ளவர்கள், கிராமத்தார்கள் என ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ரூபாய் பணமும் ஒரு பூவும் அந்தக் குழந்தையின் தாயார் கொடுக்க வேண்டும் என்பதுதான்!

இந்தப் புரளியை உண்மை என நம்பி ஒத்தை ரூபாய் பணத்தையும், ஒரு பூவையும் கையில் எடுத்துக்கொண்டு வீடு வீடாய் அலைகிறார்கள் ஒற்றை ஆண் குழந்தையை மட்டும் வைத்திருக்கும் தாய்மார்கள். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் இச்செய்தி காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. திருமயம் அருகில் உள்ள அரசம்பட்டி கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் வீட்டில் உட்கார்ந்து அமர்ந்து பேச்சிகொண்டிருந்தோம். அப்போதுதான் ஒரு பெண்மணி ஒரு ரூபாய் பணத்தையும் ஒரு பூவையும் நண்பரிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப்போனார். இது ஏன் என்று அவர்களிடம் விசாரித்தேன்.

Representational Image
Representational Image

நான் சந்திக்கச் சென்ற நண்பரோ, ``சார்... நேத்து நைட்டுலே இருந்து ஆள் மாத்தி ஆள் வந்துக்கிட்டு இருக்காங்க. இந்த அம்மா 12 வது ஆள். இன்னும் எத்தனை பேர் வருவாங்கனு தெரியலை...” என்றார்.

ஒரு ரூபாய் பணமும் ஒரு பூவும் கொண்டு வந்த அந்த அம்மாவிடம் இது எதற்காக என்று கேட்டேன். ``சார்... வீட்டிலே ஒரே ஒரு ஆம்பளைப் புள்ளை இருந்தா அவங்களுக்கு கெட்ட நேரம் நடக்குமாம். ஆயுசுலேயும் பிரச்னை வருமாம். அதனாலேதான்... இப்படிக் கொடுத்தா அந்த தோஷம் எல்லாம் நீங்கிடுமாம். அதுக்குத்தான் இப்படிக் கொடுக்கிறோம் சார்...” என்றார்.

“ இப்படி யாரும்மா கொடுக்கச் சொன்னாங்க..?” என்றேன்

Representational Image
Representational Image

``அது தெரியலை சார்... எல்லோரும் கொடுக்கிறாங்க... நானும் கொடுக்கிறேன். காரணம் இல்லாம எதையும் செய்வாங்களா சார்..! எல்லோரும் ஒண்ணு செய்யும்போது நாமளும் அதைச் செஞ்சிடணும் சார்... என்னை ஆளை விடுங்க இன்னும் நிறைய வீடு பாக்கி இருக்கு...” என மஞ்சள் பைக்குள் ஒரு ரூபாய் நாணயங்களையும், பூக்களையும் கையில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினார்.

நண்பர் வீட்டின் சுவரில் மாட்டியிருந்த 2020-ம் ஆண்டு காலண்டர் எங்களையே உற்றுப் பார்த்து கேலியாகச் சிரிப்பதுபோல் இருந்தது.

- பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு