Published:Updated:

`ரேயான்’ என்னும் மாமியார் பட்டில் இருந்து நைலான் பிறந்த கதை! #Nylon #MyVikatan

``பட்டுத் துணிகளுக்கு உள்ள மினுமினுப்பை பருத்தித் துணியில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டே இருந்தன.''

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மனிதர்கள் ஆடை அணிய ஆரம்பித்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. முதலில் மனிதன் அணிந்த ஆடைகள், இலைகள், மரப்பட்டை மற்றும் விலங்கின் தோல்களால் ஆனவை. அகழ்வாராய்ச்சியில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ஊசி கிடைத்திருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து, தையல் உடைகள் வந்து நாற்பதாயிரம் ஆண்டுகள் ஆவதாக கணித்திருக்கிறார்கள். தையல் ஆடைகளில் பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் பிரபலமாக இருந்தன. பட்டு வசதியானவர்களின் உடை.

ஆதி மனிதனின் ஆடைகள்
ஆதி மனிதனின் ஆடைகள்

பட்டுத் துணிகளுக்கு உள்ள மினுமினுப்பை பருத்தித் துணியில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டே இருந்தன. அதன் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான், ரேயான். நம் வீட்டில் உள்ள முதியவர்களிடம் கேட்டால், 'ரேயாஜ்சீலை' (Rayon Sarees) பற்றிச் சொல்வார்கள். ரேயான், ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்பட்டது. பருத்தியை அமிலத்துடன் கலந்து ரேயான் துணிகள் தயாரித்தார்கள். இந்த முறையில் ரேயான் தயாரிக்கும் போது, பல வெடி விபத்துகள் நடந்தன. வெடிக்கும் தன்மை உடையதாக இருந்ததால், ரேயானை மாமியார் பட்டு (Mother-in-law silk) என்று அழைத்தார்கள். உலகெங்கும் மாமியார்கள் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள்!

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயற்கை முறையில் ஆடைகளுக்கு நூல்கள் தயாரிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தது. இந்த முயற்சிகளின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல படியாக்க வேதிப்பொருள்கள் (Polymers), ஆடை தயாரிப்பில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்த மாற்றங்களில் முக்கியப் பங்கு வகித்தது, அமெரிக்காவின் ட்யூபாண்ட் நிறுவனம்.

மீம்ஸ்
மீம்ஸ்

இந்நிறுவனம், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்த வேலஸ் கரூத்தர்ஸ் (Wallace Carothers) என்ற விஞ்ஞானியைத் தங்கள் நிறுவனத்தில் பணியில் அமர்த்தியது. அவர் கண்டுபிடித்தது, ஒரு பாலிமர் நைலான் ரகத்தைதான். அதை எதற்குப் பயன்படுத்துவது என்று சிந்தித்து, Stockings தயாரிக்கப் பயன்படுத்தினார்கள். அதை அணிந்த அமெரிக்கப் பெண்கள் குஷியாகிவிட்டார்கள். நைலான் சூப்பர் ஹிட் ஆகி விட்டது. மாணவர்களிடம் நைலான் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருள்களை சொல்லச் சொல்லி கேட்டால், பெரும்பாலானவர்கள் சொல்வது கயிறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில் ஒரு மாணவி, குடம் என்று சொன்னார். பெரும்பாலானவர்கள் மறந்துவிடுவது நைலான் உடைகளை. இவையெல்லாவற்றையும்விட முக்கியமானது, நாம் பல் துலக்கும் பிரஸ்ஸில் உள்ள நரம்புகள்! அவை, நைலான் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை. இதைக் கண்டுபிடித்தவர், வேலஸ் கரூத்தர்ஸ் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

`ரேயான்’ என்னும் மாமியார் பட்டில் இருந்து நைலான் பிறந்த கதை! #Nylon #MyVikatan

இந்த நைலான் கண்டுபிடித்து பல ஆண்டுகள் கழித்து, அதே போன்ற ஒரு பாலிமரை ஸ்டெஃபானி க்வலோக் (Stephanie Kwolek) என்ற பெண்மணி கண்டுபிடித்தார். அதன் பெயர் கேவ்லார். இந்த கேவ்லார் தான், குண்டு துளைக்காத ஆடை தயாரிக்கப் பயன்படுகிறது. அது மட்டுமல்ல, எல்லா விமானங்களிலும் கேவ்லார் பயன்படுத்தப்படுகிறது. பயணிகள் விமானத்தில் கேவ்லார் பயன்படுகிறது என்ற தகவல் ஆச்சர்யமாக இருக்கும். இரண்டாயிரமாவது ஆண்டு, ஏர் ஃப்ரான்ஸ் விமானம் ஓடுதளத்திலிருந்து பறக்கக் கிளம்பிய உடனேயே வெடித்துச் சிதறியது. அந்த விபத்திற்குக் காரணம், விமான ஓடுபாதையில் கிடந்த உலோகப் பட்டி (Metal Strip). விமானத்தின் டயரில் பட்ட உலோகப் பட்டி, வேகமாகச் சென்று விமானத்தின் எரிபொருள் கொள்கலனைத் தாக்கியது. அதனால், கொள்கலன் வெடித்து விமானம் தீப்பிடித்து, அதில் பயணித்த அனைவரும் மரணமடைந்தனர்.

இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, விமானங்களின் எரிபொருள் கொள்கலனில் கேவ்லார் பயன்படுத்தப்படுகிறது. "ஒரு உயிரை காப்பாற்றுவதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் இணையானது ஏதுமில்லை" என்று குறிப்பிட்டார் ஸ்டெஃபானி க்வலோக். சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்.

Nylon
Nylon

பின் குறிப்பு 1: வேலஸ் கரூத்தர்ஸின் வாழ்வு சோகமானது. மிக இளம் வயதில், ஆகப்பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். ஆனால், தான் எதையும் சாதிக்கவில்லை என்று புலம்பிக்கொண்டே இருந்திருக்கிறார். இந்த நேரத்தில், அவரின் தங்கை இசோபெல், நிமோனியாவில் இறந்துவிட்டார். இது, வேலஸ் கரூத்தர்ஸின் மன அழுத்தத்தை அதிகமாக்கிவிட்டது.

ஃபிலடெல்ஃபியா நகர ஹோட்டலில் தங்கியிருந்த வேலஸ் கரூத்தர்ஸ், எலுமிச்சம் பழச்சாற்றில் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். துயரத்தின் உச்சம், வேலஸ் கரூத்தர்ஸ் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு, அவர் மகள் ஜேன் பிறந்தார். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரின் மகள். அவர், தந்தையைச் சந்தித்ததேயில்லை என்பது நினைத்துப் பார்க்க இயலா சோகம்.

`ரேயான்’ என்னும் மாமியார் பட்டில் இருந்து நைலான் பிறந்த கதை! #Nylon #MyVikatan

பின் குறிப்பு 2: இந்திய விடுதலைப் போரில் பருத்தி ஆடைகளுக்கு முக்கியப் பங்குண்டு. ராட்டை சுற்றுவது ஒரு இயக்கமாகவே நடந்தது நம்மில் பலருக்குத் தெரியும். காந்தி, நேரு போன்றவர்கள் சிறையில் இருந்த காலத்தில் ராட்டை சுற்றி, நூல் நூற்று அதை வெளியே அனுப்பினார்கள். ஒரு சமயம், சிறையில் இருந்து நேரு நூற்று அனுப்பிய நூலின் நீளம் 31,710 அடிகள். நூல் நூற்ற காலத்தில் நேரு எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல்கள் Letters from a Father to His Daughter, Glimpses of World History மற்றும் The Discovery of India!

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சியாளர், சி.எஸ்.ஐ.ஆர்

நைலான் தயாரிப்பது எளிது. எப்படித் தயாரிப்பது என்பதற்கான வீடியோ இணைப்பு https://youtu.be/y479OXBzCBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு