Published:Updated:

``லைஃப்ல ஏனோதானோனு எதையும் செய்யக்கூடாது; கோல் முக்கியம்!’’-பத்மஸ்ரீ அருணாசாய்ராம் #MondayMotivation

`நாமும் லைஃப்ல ஏதாச்சும் சாதிக்கணும்னு தோணுச்சு. டீச்சராகலாம்னு நினைச்சு, ரெகுலர் காலேஜ்ல பி.எட் க்ளாஸ்ல சேர்ந்தேன்.’

Aruna Sairam
Aruna Sairam

கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராமுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இசைக் கச்சேரிகளிலெல்லாம் தமிழிசையை உயர்த்திப் பிடிப்பவர். இவருடைய கர்நாடக சங்கீத இசைக்கு மயங்காதார் எவரும் இல்லை. `பத்மஶ்ரீ' விருது உட்பட பல இசைத்துறை விருதுகளைப் பெற்றவர். அவரிடம், `உங்களின் வாழ்வை மாற்றிய வாக்கியம் பற்றிச் சொல்லுங்கள்' என்று கேட்டோம்.

Aruna Sairam
Aruna Sairam

``நான் பிறந்தது வளர்ந்தது படிச்சதெல்லாம் மும்பையிலதான். ஆங்கிலம், இந்தி, குஜாராத்தி மட்டுமே பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடத்தில் படிச்சாலும் எனக்கிருந்த தனித்த ஆர்வத்தால தமிழுக்கும் தனியா டியூஷன் போனேன். மும்பை தமிழ்ச் சங்கத்துல ஜான் லூயிஸ்ங்கிற ஆசிரியர்தான் எனக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்தார்.

காலேஜ்ல பி.எஸ்ஸி, எம்.ஏ., மியூசிக் படிச்சு முடிச்சிருந்த சமயத்துல சாய்ராமுக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சு. எங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க. அப்போ ரெண்டாவது குழந்தைக்கு ஒரு வயசுதான் ஆகியிருந்துச்சு. கூட்டுக்குடும்பமா இருந்ததால குழந்தையைப் பார்த்துக்கிறதுல அப்படி ஒண்ணும் சிரமமில்ல. அந்த நேரத்துல, நாமும் லைஃப்ல ஏதாச்சும் சாதிக்கணும்னு தோணுச்சு. டீச்சராகலாம்னு நினைச்சு, ரெகுலர் காலேஜ்ல பி.எட் க்ளாஸ்ல சேர்ந்தேன். ஆனா, பி.எட் க்ளாஸ் நான் நினைச்ச அளவு அவ்வளவு ஈஸியா இல்ல.

Arun Sairam
Arun Sairam

நிறைய பாடங்கள், ஹோம் ஒர்க்ஸ், பிராக்டிக்கல்ஸ், டிராயிங்ஸ்னு இருந்துச்சு. ஆனாலும் எப்படியும் பாஸ் பண்ணிடணும்னு நினைச்சேன். கையில ரெண்டு குழந்தை, தினமும் காலேஜ் போயிட்டு சாயங்காலம் வந்து, அவங்களைக் கவனிச்சிட்டு, அதுக்கப்புறம் உட்கார்ந்து பி.எட் பாடங்களை செய்வேன். இரவு ஒரு மணி, ரெண்டு மணிகூட ஆயிடும்.

எப்படிடா இதை சமாளிக்கிறதுனு நினைச்சப்போ, நான் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்டு படிச்சப்போ இருந்த தாருவாலாங்கிற ஆசிரியை ஞாபகம் வந்துச்சு. அவங்க தொடக்கப் பள்ளி ஆசிரியையா இருந்து, பி.எட் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி, எனக்குப் பத்தாம் வகுப்பிலும் ஆசிரியையா வந்தவங்க. அவங்களைப் போய் பார்த்து பாடங்களைச் சொல்லித்தரும்படிக் கேட்டேன். அப்போ அவங்க ஒண்ணு கேட்டாங்க. அந்த வரிகள் என் மனசுலேயே தைச்சிடுச்சு.

Aruna Sairam
Aruna Sairam

``பாரு அருணா... உனக்கு என்ன வேணும்னு முதல்ல முடிவெடு. பாஸ் பண்ணினா போதும்னு நினைக்கிறியா? 70% மார்க்ஸ் வாங்கணும்னு நினைக்கிறியா? இல்ல ரேங்க் ஹோல்டர் ஆகணும்னு விரும்புறியா?'னு கேட்டாங்க. எனக்குச் சாட்டையால் அடிச்ச மாதிரி சுளீர்னு இருந்துச்சு.

நான் ஏதோ ஜஸ்ட் பாஸ் பண்ணினா போதும்னு நினைச்சேன். ஆனா, அவங்க ரேங்க் வாங்கணுமானு கேட்டாங்க. ஏன்னா, நான் ஸ்கூல் படிக்கிறப்போ நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அந்த ஞாபகத்துல அவங்க அப்படிக் கேட்டாங்க. `எதையும் லைஃப்ல ஏனோதானோனு செய்யக் கூடாது, கோல் செட் பண்ணிக்கிட்டு செய்'னு அவங்க சொல்லாம சொல்லிட்டாங்க. என் கணவர் சாய்ராம்கிட்ட இதைச் சொன்னப்போ, அவரும், `அவங்க கரெக்டாதான் சொல்லியிருக்காங்க. நீ படிக்கிறதுல யாருக்கும் எந்த ஆட்சேபமும் கிடையாது. நல்லா படி'னு சொன்னார்.

Aruna Sairam
Aruna Sairam

அந்த டீச்சர் ரொம்ப ஆர்வமா அவங்களே சார்ட், பேப்பர், பென்சில், ஸ்கேல் எல்லாம் வாங்கிக்கொடுத்து, எப்படி எப்படி வரையணும்னு டிரெயினிங் கொடுத்தாங்க. நானும் நல்லபடியா படிச்சு பாம்பே யுனிவர்சிட்டியில செகண்ட் ரேங்க்ல பாஸ் பண்ணினேன். அன்னையிலிருந்து எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யணும், பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாதுனு செய்ய ஆரம்பிச்சேன். அதுவே எனக்குப் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்துச்சு'' என்று சொல்லிச் சிரிக்கிறார் அருணாசாய்ராம்.

`` `பொங்கிப் போட்டுட்டு வீட்ல கிட'ன்னாங்க. ஆனா, அந்த ஒத்த மனுஷி..!'' ஒரு பெண்ணின் வெற்றிக் கதை