Published:Updated:

பேரன்பு எனும் ஆச்சர்யம்...! #MyVikatan

Representational Image
Representational Image ( pixabay )

`மனிதம் மருண்ட அத்தனை போர்களும் வன்முறைகளும் அன்பை அணிய தெரியாதவர்களாலும் அன்பின் வலிமை புரியாதவர்களாலும் சுயம் விரும்பிகளாலும் நிகழ்த்தப்பட்டன'

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பேரன்பின் பிரவாகம் நனைத்துச் செல்லட்டும் மானிடர் தமை! காற்றில் இழையோடட்டும்! வானம் அளக்கட்டும்! அழகியல் வடிகட்டும்! ஆனந்த நர்த்தனம் புரியட்டும்! மனிதம் தழைக்கட்டும்! சகோதரம் நீட்டடும்!! மொழி, மதம், இனம் கடந்து உணர்ந்திடும் அணுக்கருவாய்ப் பிளக்கட்டும் !வேறுபாடுகள் களையட்டும்! புரிதல் பரவட்டும்! புத்தன் வியக்கட்டும், சிரிக்கட்டும் ! புதுவுலகம் படைக்கட்டும்! உலகின் வேற்றுமைகள் களைந்து மனிதர்களை இணைக்கும் ஒற்றைப் புள்ளியாக அன்பைக் கருதுகிறேன்.

Representational Image
Representational Image

பேரன்பு மனிதர்களின் மனக்கதவை தனது மென் கரங்களால் தட்டித் திறந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். அன்பின் மொழிக்கு வார்த்தைகள் தடையாய் இருந்திருக்காது. உணர்வுகள் அன்பின் மொழியாக அடையாளம் கொள்ளப்பட்டிருக்கும். இன்றைய உலகம் எத்தனை பிரிவுகளை உள்ளடக்கி இருக்கிறது. இனம், மொழி, மதம், அரசியல் கோட்பாடுகள், பொருளாதாரக் கோட்பாடுகள் எனப் பட்டியல் நீள்கிறது. இவையாவும் மனிதனின் ஆதி நாள்களில் படைக்கப்பட்டதா? இல்லை! காலச் சக்கரச் சூழலில் மனிதனால் உருவாக்கப்பட்டு மாற்றங்கள் பல கண்டு இன்று இப்போது இருக்கும் நிலையை அடைந்து இருக்கின்றன. அம்மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் ஏற்றத் தாழ்வுகள், வன்மங்கள் இவை தேவை தானா என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

உலகின் மாந்தரை பேரன்பு என்னும் ஆச்சர்யம் அணைத்துக் கொண்டால் இத்தனை பிரிவுகள் தேவைதானா என்ற எண்ணம் மேலோங்கும். யார் கண்டது ? அத்தனை கோட்பாடுகளும் தகர்த்து எறியப்படலாம். உலகின் மதங்கள் அனைத்தும் "அன்பு" என்னும் ஒற்றைச் சொல்லில் இழைந்து செல்வதை என்னவென்று சொல்வது? ஆக அனைத்து மதங்களும் சங்கமிக்கும் ஒற்றைக் கடலாக அன்பு இருக்கிறது. அது மனிதனின் அதிகாரம் மற்றும் தன் நிலை உயர்வு என்னும் பேராசையால், வேர் ஊன்ற வேண்டிய அன்பு என்னும் விருட்சம் வீழ்ந்து கிடக்கிறது.

Representational Image
Representational Image

மனிதம் மருண்ட அத்தனை போர்களும் வன்முறைகளும் அன்பை அணியத் தெரியாதவர்களாலும் அன்பின் வலிமை புரியாதவர்களாலும் சுயம் விரும்பிகளாலும் நிகழ்த்தப்பட்டது என்றும் கூறுவேன். இந்திய அரசியலமைப்பு சகோதரத்துவத்தை ஒவ்வொரு குடிமகனும் பேண வேண்டும் என்பதை சமுதாய கடமையாக அறிவுத்துகிறது. அதே அரசியலமைப்புதான் ஒரு குடிமகன் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதையும் பாதுகாப்பதையும் பரப்புரை செய்வதையும் அடிப்படை உரிமையாக ஆவன செய்கிறது. ஆனால், அவற்றை சகோதரத்துவம் வழுவாமல் அல்லவா செய்ய வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பதே நிதர்சனம் .

பெருங்காதலின் தூது, அன்பின் மன்றாட்டு - இரு கடிதங்களின் கதை! #ValentineDay

மதத்தின் பெயரிலும், இனத்தின் பெயரிலும் அல்லவா இங்கு அரசியல் விதைக்கப்படுகிறது. அன்பின் குரல் ஒலிக்குமாயின் உரிமைகளுக்கான குரல் தேவையற்ற ஒன்றாகிவிடும் என்பது என் கருத்து. எந்த மதமும் கடவுளின் பெயரில் வன்முறை நிகழ்த்த ஆவன செய்கிறது என்ற கேள்வி தானாக எழுகிறது. சமூக வலைதளங்களில் ஆதிக்கம் நிறைந்த 21-ம் நூற்றாண்டில் அன்பின் பாதையில் இருந்து பிறழ்ந்து பதிவிடப்படும் கருத்துகள் நிகழ் மற்றும் எதிர் காலத்தின் மீதான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Representational Image
Representational Image

இன்றைய சந்ததியினர் (எல்லாரையும் குறிப்பிடவில்லை) பதிவிடும் கருத்துகளின் உண்மைத்தன்மையை எந்த அளவுக்கு ஆராய்ந்து பார்க்கின்றனர் என்பது கேள்விக்கு உள்ளாகிறது. காரணம் இன்றைய இணைய வளர்ச்சி கட்டற்ற தகவல்களை அவர்களுக்கு அளிப்பது. மேலும் அந்தத் தகவல்களை எவ்வாறு எந்த முறையில் அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதது எனவும் கூறலாம் . இதற்கான தேடல் நம்முடைய கல்வி முறையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது .

இங்கு அறிவியல் சார்ந்த கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சமூகம் மற்றும் மானுடவியல் தொடர்பான கல்விக்கு அளிக்கப்படவில்லை என்று உணருகிறேன். அரசியல் அறிவியல், மற்றும் சமூகவியல் மாணவர்களிடத்தில் தற்போதைய பாடத்திட்டம் அளிப்பதை விட, அதாவது அடிப்படை தகவல்கள் தவிர்த்து அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாய் இருத்தல் வேண்டும். தற்போதய கல்விமுறையில் உயர் கல்வி வரை மட்டுமே சமூகவியல் தொடர்பான பாடம் இருக்கிறது. அதுவும் அடிப்படை நிலையில் இருப்பது, சமூகத்தின் ஒரு அங்கமாக்க பற்றாது என்பது நிதர்சனம்.

Representational Image
Representational Image

சமூகத்தின் தவிர்க்க முடியாத அரண்கள் அவர்கள். அவ்வாறான சிந்தைனைத் தூண்டல்கள் மதம், மொழி, இனம் தொடர்பான சிந்தனைகளுக்குத் தெளிவான தீர்வுகளை எடுக்கத் தூண்டும். அப்போது அவை அவர்களின் அறிவின் முன்னிலையில் சமரசமின்றி விவாதிக்கப்படும். அதே சமயம் அவர்களை மற்ற மதம், மொழி, இனம் சார்ந்தவரை வேற்றுமைகள் கடந்து அரவணைத்துக்கொள்ள வழிவகுக்கும். அவ்வறிவு அவர்களையும் அவர்கள் சார்ந்து இருக்கிற சமூகத்தையும் மென்மையின் பாதையில் இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. உலகம் அன்பின் பால் சரணடையட்டும். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

- மோகனா ஷ்யாம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு