Published:Updated:

மக்கள் மருத்துவர்! - மறையவில்லை

மக்கள் மருத்துவர்
பிரீமியம் ஸ்டோரி
மக்கள் மருத்துவர்

க்ளினிக் என் காலத்துக்குப் பிறகும் உங்களுக்காக இங்க திறந்தே இருக்கும்’ என்றபடி அவர்களைச் சமாதானம் செய்தார்.

மக்கள் மருத்துவர்! - மறையவில்லை

க்ளினிக் என் காலத்துக்குப் பிறகும் உங்களுக்காக இங்க திறந்தே இருக்கும்’ என்றபடி அவர்களைச் சமாதானம் செய்தார்.

Published:Updated:
மக்கள் மருத்துவர்
பிரீமியம் ஸ்டோரி
மக்கள் மருத்துவர்

`அஞ்சு ரூபாய் டாக்டர்’ - ஏழை எளிய மக்களால் வாய்நிறைய அழைக்கப்பட்ட இந்த அடைமொழி, அவருக்கு டாக்டர் பட்டத்தைவிடப் பெரியது. மருத்துவம் வியாபாரம் ஆகிப்போன காலத்தில் மனிதம் கலந்து மருத்துவப்பணி செய்த டாக்டர் திருவேங்கடம் வீரராகவனின் மரணம், சென்னை வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதி மக்களைப் பெருந்துயரில் தள்ளியுள்ளது.

மக்கள் மருத்துவர்! -  மறையவில்லை

திருவேங்கடத்தின் பூர்வீகம் வியாசர்பாடி மெகசீன் நகர். அப்பாவுக்குப் பெரம்பூர் பின்னி மில்லில் வேலை. கூட்டுக்குடும்பம். ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வந்த பெரியப்பா, சித்தப்பாக்கள்தாம் இவரின் ரோல் மாடல்கள்.

மருத்துவத்தை வணிகநோக்கம் இல்லாத சேவையாக நினைக்க வேண்டுமென ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்தபோதே உறுதி எடுத்துக்கொண்ட திருவேங்கடத்தை, படிப்பு முடிந்ததும் பிரபலமான பல தனியார் மருத்துவமனைகள் அழைத்தன. சில மருத்துவமனைகளில் கொஞ்சகாலம் பணிபுரியவும் செய்தார். ஆனாலும் அவருக்குத் தன் பணியில் நிறைவு ஏற்படவில்லை.

ஏற்கெனவே மருத்துவத்தைச் சேவையாகச் செய்ய வேண்டுமென்ற துடிப்பு ஒருபக்கம் உந்தித் தள்ளிக்கொண்டிருந்த சூழலில், மனதுக்கு உகந்ததாக இல்லாத இந்தப் பணிச்சூழலும் சேர்ந்துகொள்ள, வேலையை உதறிவிட்டு, ஏழை எளிய மக்கள் சூழ தான் குடியிருந்த அந்தப் பகுதியிலேயே ஒரு சிறிய அறையை வாடகைக்குப் பிடித்து க்ளினிக் திறந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`ஆரம்பத்துல ஐம்பது காசு, பிறகு ஒரு ரூபாய்னு வாங்கின ஃபீஸ், 40 வருஷம் கழிச்சு, இன்னைக்கு அஞ்சு ரூபாய். ‘எப்படி இது சாத்தியம்’கிற ஆச்சர்யம் பலருக்கும் இருக்கு. ரொம்ப சிம்பிள். அவருக்குக் காசு சேர்க்கணும்கிற ஆசை இல்லை, அவ்ளோதான்’’ என்கிறார் திருவேங்கடத்தின் தங்கை விஜயராணி.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருப்போர் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதியில் கிடைத்த இவரது மருத்துவச்சேவையே ஏழை எளிய மக்களுக்கு அருமருந்து. வியாசர்பாடி தாண்டிப் பல கிலோமீட்டர் தொலைவி லிருந்தெல்லாம் சிகிச்சைக்காக வரத் தொடங்கினர் மக்கள்.

திருவேங்கடம் வீரராகவன்
திருவேங்கடம் வீரராகவன்

``வயசான, ஆதரவில்லாதவங்க யாராச்சும் கையில காசு இல்லாம வந்துட்டாலும் கனிவு மாறாம சிகிச்சை தருவார். கிளம்பறப்ப, ‘டீ சாப்பிட்டுப் போறீங்களா’ன்னு டீ வாங்கித் தந்து அனுப்புவார். அரசு மருத்துவமனைகளின் அலட்சியப் போக்கு, பெரிய தனியார் மருத்துவமனைகளின் கட்டணம்... இந்த ரெண்டுக்கும் பயந்தே இவர்கிட்ட வந்தாங்க மக்கள். ‘எங்க ஏரியாவுலயும் க்ளினிக் திறங்களேன்’னு வடசென்னையின் பல பகுதிகளிலிருந்தும் கோரிக்கை வந்துட்டே இருந்தது. அதனாலேயே எருக்கஞ்சேரியுலயும் க்ளினிக் திறந்தார். இவர் மகளும் மகனுமே டாக்டருக்குப் படிச்சிட்டிருக்காங்க. அவங்களையுமே அப்பப்ப க்ளினிக் கூட்டி வந்திருக்கார். வடசென்னையில இவர் செய்த சேவைகளை இவரின் வாரிசுகளும் செய்யணும்கிறதுதான் எங்க எதிர்பார்ப்பு’’ என்கிறார் திருவேங்கடத்தை நன்கு அறிந்தவரும் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவருமான சண்முகம்.

மக்கள் மருத்துவர்! -  மறையவில்லை

திருவேங்கடத்தின் அஞ்சு ரூபாய்க் கட்டணத்தால், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக நினைத்த சில மருத்துவர்கள், ‘என்ன கால்குலேஷன்ல இந்த அஞ்சு ரூபாய் ஃபீஸ்’ எனக் கடுப்பு ப்ளஸ் கிண்டலுடன் நேரடியாகவே இவரிடம் கேட்டுள்ளார்களாம். அவர்களுக்குத் திருவேங்கடம் அளித்த பதில், ‘ஊசி மூணு ரூபா, மாத்திரை ரெண்டு ரூபா..!’

பிள்ளைகள் வளரத் தொடங்கியதும், சில ஆண்டுகளுக்கு முன் வியாசர்பாடியிலிருந்து கீழ்ப்பாக்கத்திற்குக் குடிபெயர்ந்தது திருவேங்கடத்தின் குடும்பம். அப்போது மெகசீன் நகர்ப்பகுதி மக்கள் அடைந்த கவலை அளவில்லாதது.

‘எங்க போறேன்? இங்கிருந்து நாலே கிலோ மீட்டர். உங்களில் யாருக்காச்சும் உடம்பு சரியில்லைன்னா, எந்த நேரத்துலயும் என்னைக் கூப்பிடுங்க, அஞ்சாவது நிமிஷம் வந்துடப் போறேன். க்ளினிக் என் காலத்துக்குப் பிறகும் உங்களுக்காக இங்க திறந்தே இருக்கும்’ என்றபடி அவர்களைச் சமாதானம் செய்தார்.

அன்றைக்குச் சமாதானம் ஆனவர்கள் இப்போது கண்ணீரில் தங்களைக் கரைத்துக் கொள்கிறார்கள். கொரோனாப் பீதி, முழு ஊரடங்கிற்கிடைடையிலும், கடைசியாக ஒருமுறை தங்கள் பிரியத்துக்குரிய மருத்துவரின் முகத்தைப் பார்க்கத் திரண்டிருந்த அந்த மக்களின் முகங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் தெரிந்தது.

இது அந்த மக்கள் மருத்துவருக்குக் கிடைத்த மகத்தான மரியாதை.