Published:Updated:

"நானும் உங்கள மாதிரி மனுஷன்தானே!"- வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சர்க்கஸ் ஜோக்கர் திருப்பதி

திருப்பதி

‘‘கடைப் பக்கம் போகணும்னாலும் நடக்க முடியல. வீட்டுப் பக்கமா போற வண்டிங்கள்ல லிஃப்ட் கேட்டாலும் நிறுத்த மாட்டேங்குறாங்க. நிஜ வாழ்க்கையிலும் நான் கோமாளியாகிட்டேன்’’ என்று வறுமையின் துயரை விவரிக்கிறார் சர்க்கஸ் ஜோக்கரான திருப்பதி.

"நானும் உங்கள மாதிரி மனுஷன்தானே!"- வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சர்க்கஸ் ஜோக்கர் திருப்பதி

‘‘கடைப் பக்கம் போகணும்னாலும் நடக்க முடியல. வீட்டுப் பக்கமா போற வண்டிங்கள்ல லிஃப்ட் கேட்டாலும் நிறுத்த மாட்டேங்குறாங்க. நிஜ வாழ்க்கையிலும் நான் கோமாளியாகிட்டேன்’’ என்று வறுமையின் துயரை விவரிக்கிறார் சர்க்கஸ் ஜோக்கரான திருப்பதி.

Published:Updated:
திருப்பதி
மக்களை மகிழ்வித்த கலைஞர்கள் பலர் இன்று முகவரியில்லாத கூட்டிற்குள் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள். அப்படி, நகைச்சுவையால் எத்தனையோ முகங்களில் புன்னகையை மலர வைத்த சர்க்கஸ் ஜோக்கர்களின் வாழ்க்கையும் துயரம் சூழ்ந்ததாகவே இருக்கிறது.

பொருந்தாத உடை, சிரிப்பை வரவழைக்கும் ஒப்பனை என ஜோக்கர்களின் திறமையை அதிகம் கொண்டாடியது 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்தான். இப்போது, வறுமையில் வாடும் அவர்களின் நிலை துயரிலும் பெருந்துயரம். அப்படியொரு, துன்பம் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்துவரும் சர்க்கஸ் ஜோக்கர்தான் திருப்பதி.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள சின்ன வேப்பம்பட்டு கே.கே.கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இரண்டரை அடி மட்டுமே உயரமுடைய மாற்றுத்திறனாளியான இவர், சிறு வயதிலிருந்தே தன் உடல் குறைபாடுகளால், துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். வீட்டில் கடைக்குட்டியாகப் பிறந்த திருப்பதிக்கு மட்டும் உடலில் இப்படியான சவால்.

நடிகர் சூர்யாவுடன் திருப்பதி
நடிகர் சூர்யாவுடன் திருப்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளர் பருவத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளானதுடன், 20 வயதை எட்டியப் பின் உடன் பிறந்தவர்களாலும் ஒதுக்கப்பட்டிருக்கிறார். இருந்தபோதும், தன்னம்பிக்கையோடு கடுமையாகப் போராடியிருக்கிறார் திருப்பதி. ஜோக்குகளால் மற்றவர்களைக் கவரும் திறமை தன்னிடமிருப்பதால், சினிமா வாய்ப்புத் தேடியும் அலைந்திருக்கிறார். சினிமாவில் வாய்ப்புக் கிடைக்கும் வரை வயிற்றுப் பிழைப்புக்காக சர்க்கஸில் வேலைக்குச் சேர்ந்த திருப்பதிக்கு ஜோக்கர் வேடம் கிடைத்திருக்கிறது. கடைசியாக, ஜோக்கர் வேடமே நிரந்தரமாகிவிட்டது. ராஜ்கமல் சர்க்கஸ், கிரேட் இந்தியன் சர்க்கஸ், கேரளா சர்க்கஸ் எனப் பல்வேறு சர்க்கஸ் கம்பெனிகளில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். ஆனாலும், தினக்கூலி அடிப்படையில் 100, 200 ரூபாய் மட்டுமே அவருக்குச் சம்பளமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 2015-ம் ஆண்டுக்கு முன் சர்க்கஸ் நடைபெற்றபோது, அங்கு வந்த ரேணுகா என்ற பெண்ணுக்குத் திருப்பதியின் கோமாளித்தனம் பிடித்துப் போனது. சர்க்கஸ் நிகழ்ச்சி சில நாள்கள் அங்கேயே நடந்ததால், தினமும் அந்தப் பெண் திருப்பதியைப் பார்க்க வந்துள்ளார். இருவரும் பேசி பழகியிருக்கிறார்கள். திருப்பதியிடம் அந்தப் பெண் தன் காதலை தெரிவித்துள்ளார். இருவரும், 2015-ல் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றனர். பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது. ஆனால், இப்போது மூன்றரை வயதாகும் குழந்தைக்கும் திருப்பதியைப் போன்றே உயரம் குறைவு.

மனைவி, குழந்தைகளுடன்...
மனைவி, குழந்தைகளுடன்...
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் மீண்டும் ஓர் ஆண் குழந்தைக்கு அப்பாவானார் திருப்பதி. அந்தக் குழந்தையும் உயரக்குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே கடந்த வாரம் உடன் இருந்த தனது தந்தையை இழந்திருக்கிறார் திருப்பதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருப்பதியிடம் பேசினேன். "எனக்கு 39 வயசாகிடுச்சு. வேலையில்ல. நடக்க முடியலை. என்னை நம்பி நாலு உசுரு இருக்குது. தங்குறதுக்கு நல்ல வீடும் இல்ல. பத்து ரூபாய்க்காக மத்தவங்க கிட்ட கையேந்துற சூழ்நிலையில இருக்கேன்.

வெளிநாட்டு ரசிகையுடன் ஜோக்கர் கெட்டப்பில்...
வெளிநாட்டு ரசிகையுடன் ஜோக்கர் கெட்டப்பில்...

கடைப் பக்கம் போகணும்னாலும் நடக்க முடியல. வீட்டுப் பக்கமா போற வண்டிங்கள்ல லிஃப்ட் கேட்டாலும் நிறுத்த மாட்டேங்குறாங்க. நிஜ வாழ்க்கையிலும் நான் கோமாளியாகிட்டேன். ரெண்டு வருஷமா வேலைக்கும் போக முடியலை. என்னை நம்பி வந்தவளும் கஷ்டப்படுறா. எல்லோரையும் மாதிரித்தான் நானும் கல்யாணம் பண்ணிக்கணும், புள்ளக்குட்டி பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இவ்வளவு பெரிய வாழ்க்கையைக் கொடுத்த கடவுள், கூடவே கஷ்டத்தையும் கொடுத்துட்டாரு. என்னால முடியல. சாப்பாட்டுக்குக்கூட சுத்தமா வழியில்ல. வாழ்வாதாரத்துக்கு வழியில்லையாம நிக்குறோம்’’ எனப் பேசமுடியாமல் கலங்குகிறார் திருப்பதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism