Published:Updated:

மரத்தின் கிளைகள்... கிளைகளில் அமர்ந்திருக்கும் கிளிகள்... வித்தியாசமான கார்னரிங் அலங்காரம்!

வீட்டு மூலை அலங்காரம்

அலங்காரப் பொருள்களை வைப்பதற்காகவே ஷோகேஸ் வரவேற்பு அறைகளில் அமைப்பது வழக்கம். ஆனால், இந்த அமைப்பைச் சற்றே மாற்றி வரவேற்பு அறைகளின் மூலைகளில் அமைத்துக்கொள்வது சமீபத்திய டிரண்டாக மாறியிருக்கிறது.  

மரத்தின் கிளைகள்... கிளைகளில் அமர்ந்திருக்கும் கிளிகள்... வித்தியாசமான கார்னரிங் அலங்காரம்!

அலங்காரப் பொருள்களை வைப்பதற்காகவே ஷோகேஸ் வரவேற்பு அறைகளில் அமைப்பது வழக்கம். ஆனால், இந்த அமைப்பைச் சற்றே மாற்றி வரவேற்பு அறைகளின் மூலைகளில் அமைத்துக்கொள்வது சமீபத்திய டிரண்டாக மாறியிருக்கிறது.  

Published:Updated:
வீட்டு மூலை அலங்காரம்

`அந்த மூலையைச் சுத்தம் செய்ய இரண்டு லட்சம், இந்த மூலையைச் சுத்தம் செய்ய நான்கு லட்சம், வீட்டில் இருக்கும் அனைத்து மூலைகளையும் சுத்தம் செய்ய மொத்தம் 20 லட்சம் வாங்குவேன்’ என வேலை செய்யும் பெண்மணி சொல்லுவதைப் போன்ற தொலைக்காட்சி விளம்பரத்தை நாம் பார்த்திருப்போம். இப்போதைய வீடுகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு அசுத்தங்கள் நிறைந்ததாகத்தான் வீட்டு மூலைகள்(கார்னர்கள்) இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே வீட்டுக்கு அழகு சேர்க்கும் இடங்களில் பால்கனிகளைப் போல, வீட்டு மூலைகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்கின்றனர் இன்டீரியர் டிசைனர்கள்.

வீட்டின் எந்த அறைகளாக இருந்தாலும் சுவர்களுக்கு நடுவில்தான் ஜன்னல்கள் இருக்கும். ஆனால் அறையின் மூலையில், இரு சுவர்கள் சேரும் இடத்தில் கண்ணாடி ஜன்னல்கள் அமைப்பதுதான் சமீபத்திய டிரெண்ட்.

விவரம் அறிந்தவர்கள், வீடுகளைக் கட்டும்போதே வீட்டுமூலைகளில் தனிக் கவனம் செலுத்தி, நேர்த்தியான அழகுடன் அமைத்துவிடுகின்றனர். அப்படி கட்டாமல் விட்டவர்களுக்கு பல அலங்காரப் பொருள்கள் ஹோம் டெக்கார் கடைகளில் கிடைக்கின்றன. கோணல் மாணலான மூலையாக இருந்தாலும்கூட அதை அழகுபடுத்துவதற்காக பல்வேறு அலங்காரப் பொருள்கள் இன்று கிடைக்கின்றன. கட்டும்போது அறைகளின் மூலைகளின் மீது கவனம் செலுத்தவில்லை என்றாலும், இதுபோன்ற பொருள்களை வாங்கிப் பொருத்திக் கொள்வதன் மூலம் அறைகளுக்கு அழகு சேர்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீட்டு மூலைகளை அழகாக்குவதில் வால் ஸ்டிக்கர்கள் இப்போது டிரெண்டாகி வருகின்றன. சுவரின் மையப்பகுதியில் இருந்து மட்டுமே இல்லாமல், ஓரத்திலிருந்தும் ஒட்டுகிற மாதிரியான ஸ்டிக்கர்கள்  இன்று அதிகம் கிடைக்கின்றன. மரத்தின் கிளைகள், கிளைகளில் அமர்ந்திருக்கும் கிளிகள், பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள், குதித்தோட காத்திருக்கும் குதிரை என எண்ணற்ற வடிவங்கள் அதில் இருக்கின்றன. அலங்காரச் செடிகள் இருந்துவிட்டால் கார்னர்கள் களைகட்டிவிடும். வந்தவர்கள் பார்த்து வியக்கும் வரவேற்பு அறைகளின் மூலைகளே இதற்குப் பொருத்தமானவை. அதேபோல வளைவான சோஃபாக்களை வரவேற்பு அறைகளின் மூலைகளில் கிடத்துவதும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

வீட்டு மூலை அலங்காரம்
வீட்டு மூலை அலங்காரம்

பெரும்பாலும் வீட்டு மூலைகள் படிப்பதற்கான இடத்தை அமைப்பதற்கும், புத்தக அலமாரிகளைப் பொருத்துவதற்கும் ஏற்றவையாக இருக்கும். வால்மவுன்ட், வுடன் வால் என எண்ணற்ற வகைகளில் கிடைக்கும் ஸ்டேண்டுகளை இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள்கூட, இதை வாங்கி அப்படியே பொருத்திக்கொள்ளலாம். தேவைப்படாதபோது கழற்றி வைத்துவிடலாம்.

வீட்டு மூலை அலங்காரம்
வீட்டு மூலை அலங்காரம்

அலங்காரப் பொருள்களை வைப்பதற்காகவே ஷோகேஸ் வரவேற்பு அறைகளில் அமைப்பது வழக்கம். ஆனால், இந்த அமைப்பைச் சற்றே மாற்றி வரவேற்பு அறைகளின் மூலைகளில் அமைத்துக்கொள்வது சமீபத்திய டிரண்டாக மாறியிருக்கிறது.  மூலைகளுக்கு ஏற்றவாறு, சுவர்களின் வண்ணங்களுக்கு ஏற்றவாறுகூட மரத்தினால் செய்யப்பட்ட ஸ்டேண்டுகளை வாங்கி பொருத்திக்கொள்ளலாம். அதுவே வீட்டு மூலைகளின் அழகியல் பேசும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism