Published:Updated:

வாட்ஸ் அப்? - வாசகி பகிர்வு #MyVikatan

மெசேஜ் ஏதும் வரவில்லை என்றாலும் அடிக்கடி வாட்ஸ்அப் பார்ப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளனர்.  

Representational Image
Representational Image ( Pixabay )

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வாட்ஸ்அப் இன்று அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது. பலர், மெசேஜ் ஏதும் வரவில்லை என்றாலும் அடிக்கடி வாட்ஸ்அப் பார்ப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளனர். சில வருடங்கள் முன்பு வாட்ஸ்அப்'பில் நான் சேர்ந்த புதிதில் ஒரு சின்ன ரைட் அப் எழுதினேன், அதை இங்கே MyVikatan-இல் பகிர்கிறேன்.

Representational Image
Representational Image

நான் அந்த (வாட்ஸ் அப்) களத்தில் இறங்கியதும், சில நிமிடங்களில் பலராலும் கண்டுகொள்ளப்பட்டேன். சில நாள்களில் கடவுளைப்போல ஒரே நேரத்தில் எங்கும் நிறைந்துவிட்டேன். எனக்கு அந்தக் களம் பழகியவுடன், என்னுடைய நெருங்கியவர்களைத் தனியாக இழுத்துக் கொண்டேன்.

யாரோ எதையோ சொல்கிறார்கள். வேறு யாரோ அதைக் கேட்டு, அதை அப்படியே மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். எல்லோரும் ஏதோ ஒன்று சுவாரஸ்யமாக நடக்க காத்துக்கொண்டு இருப்பார்கள்போல. அப்படி ஏதோ ஒன்று நடந்தால், எல்லோரும் அதைப் பற்றியே வேறுவேறு மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் கலாசாரம்.

எல்லோரும் அவர்களின் முகங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய நிலை'யையும் மாற்றிக் கொள்கிறார்கள்.

என்ன ஆனாலும் சிலர் தினமும் மற்றவர்களை வாழ்த்தத் தவறுவதில்லை.

Representational Image
Representational Image

இதில் சில வித்தியாச மனிதர்களைப் பார்க்கலாம். நம்மிடம் தனியாக பேசுவார்கள், அதுவே நாம் கூட்டத்தில் இருந்தால், நம்மைப் புறக்கணிப்பார்கள். சிலர் அப்படியே இதற்கு நேர்மார்.                    

எல்லோரும் பேசுவார்கள்... பேசிக்கொண்டே இருப்பார்கள்... அப்படியே மௌனத்துக்குப் போய் விடுவார்கள். பல நாள்கள் அல்லது வாரங்கள் மௌனமாக இருப்பார்கள்.

Representational Image
Representational Image

ஆனால், இதில் சில குழுமங்களில் எப்போதும் (அல்லது எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம்) அரட்டை அடித்துக்கொண்டும், வேடிக்கையாய் உரையாடிக்கொண்டும், மனதார புலம்பிக்கொண்டும், ஆறுதல் அளித்துக்கொண்டும் இருப்பார்கள். சில பேர்களுக்கு இந்தக் களம், ஒரு சிறந்த பொழுதுபோக்குத் தளம் மற்றும்  மனஅழுத்ததைப் போக்கும் தளம். நான் இந்த வகையைச் சேர்ந்தவள் என்பதிலும், எனக்கும் இப்படிச் சில குழுமங்கள் இருக்கின்றன என்பதிலும் எனக்குப் பெருமை.

So WhatsApp நண்பர்களே! கிர்ர்... Whats up? நண்பர்களே!

-சுதா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/