Published:Updated:

'வொர்க் ஃப்ரம் ஹோம்' பாசிட்டிவ் Vs நெகட்டிவ் - நிம்மதியா, தலைவலியா?

வீட்டில் தனித்து இருப்பதால், குழுவாகச் சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

'வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கலாம்' என்பது, கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இதிலும் சில சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. அவை என்னென்ன, அவற்றுக்குத் தீர்வு காண்பது எப்படி?

சென்னையில் ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் மனிதவள மேலாளர் பிரவீன், 'வொர்க் ஃப்ரம் ஹோம் (WFH)' பணியின் இயல்பு பற்றி விளக்கினார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2MnHtM6

பாசிட்டிவ்:

தனிப்பட்ட வேலைகளையும் செய்து கொண்டு, அலுவலக வேலையையும் செய்வதால், ஊழியர்கள் நிச்சயம் சந்தோஷமாக இருப்பார்கள். அதனால், சரியான அவுட்புட் கிடைக்கும். இப்படியொரு வாய்ப்பு கிடைத்தால், பணியாளர்கள் நிறுவனத்துடன் நீண்ட காலம் இணைந்திருப்பார்கள். நல்ல ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வது தானே நிறுவனங்களின் நோக்கமும். அதனால், இது நிறுவனங்களுக்கும் நல்ல சந்தர்ப்பம். இதன்மூலம் ஊழியர்களுக்கு நிறுவனத்துடன் நல்ல விசுவாசம் உருவாகும். அதேபோல், இது நிறுவனங்களுக்கான பிராண்டிங்காகவும் அமையும். பொது மக்களுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றிய தாக்கம் பாசிட்டிவ்வாக இருக்கும். இதனால், ஊழியர்கள் மட்டுமல்ல நிறுவனமும் சேர்ந்தே வளர்ச்சியடையும்.

வீட்டிலிருந்து வேலை செய்வதால், ஏனோ தானோ என்று இருக்காமல், ஒரு டேபிள் - சேர் போட்டு வேலை செய்யத் தொடங்கினாலே பெரிய மாற்றத்தைக் காணலாம்.

நெகட்டிவ்:

மற்றவர்களோடு சேர்ந்து வேலை செய்யும்போதுதான் ஆரோக்கியமான போட்டி இருக்கும். ஏராளமான பொது விஷயங்களோடு அலுவலக நன்னெறிகளையும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், வீட்டில் தனித்து இருப்பதால், குழுவாகச் சேர்ந்து வேலைசெய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும். கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்தாலும் ஜூனியர்களை வளர்த்துவிடுவது, புதிய வேலையைக் கற்றுக்கொள்வது, பதவி உயர்வு போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

சிக்கலைத் தீர்க்கும் டிப்ஸ்கள்

வீட்டிலிருந்து வேலை செய்வதால், ஏனோ தானோ என்று இருக்காமல், ஒரு டேபிள் - சேர் போட்டு வேலை செய்யத் தொடங்கினாலே பெரிய மாற்றத்தைக் காணலாம். 'To Do' லிஸ்ட் ஒன்றைத் தயார் செய்து அவற்றைப் பின்பற்றும்போது நிச்சயம் மனதளவில் வித்தியாசம் ஏற்படும். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். கொடுத்திருக்கும் வேலையைச் சரியாக, குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்துமுடித்தாலே போதும், உயர் அதிகாரிக்கு நம்பிக்கை வந்துவிடும். அடுத்தமுறை வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பை வழங்கத் தயங்கமாட்டார்கள். ஊழியரைப் பற்றி மேலாண்மை பக்கத்திலிருந்து குறை சொன்னாலும்கூட, அவரைப் பற்றி அவர் டீம் கொடுக்கும் நல்லவிதமான ஃபீட்பேக் அவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிடும். எனவே, கடமையைச் சிறப்பாகச் செய்தாலே போதும்" என்றார்.

'வொர்க் ஃப்ரம் ஹோம்' பாசிட்டிவ் Vs நெகட்டிவ் - நிம்மதியா, தலைவலியா?

> யாருக்கெல்லாம் வீட்டிலிருந்து வேலைசெய்யும் வாய்ப்பு? ஐ.டி. துறையில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறை எப்படி செயல்படுத்தப்படுகிறது? அதிகபட்ச கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களை முழுமையாகச் சொல்லும் நாணயம் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க > வொர்க் ஃப்ரம் ஹோம்... சிக்கல் இல்லாமல் அமைத்துக்கொள்ள சிறப்பான ஆலோசனைகள்! https://www.vikatan.com/news/general-news/how-to-organize-your-work-from-home-schedule-without-any-hiccups

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |