தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“அக்கா மகனுக்காகக் கத்துக்கிட்டது, இப்போ மாசம் ஒன்றரை லட்சம் தர்ற தொழிலாகியிருக்கு!”

கயல்விழி
பிரீமியம் ஸ்டோரி
News
கயல்விழி

‘காஸ்டிங்’ கயல்விழியின் வெற்றிக்கதை

“அக்காவுக்கு மகன் பிறந்தப்போ, அவனோட வளர்ச்சியை வித்தியாசமா பதிவு பண்ணலாம்னு கூகுள்ல தேடி னேன். ஐரோப்பிய நாடுகள்ல குழந்தை களின் கை கால்களை பிரதியெடுத்து உருவாக்கும் `காஸ்டிங் (Casting)’ பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். அக்கா பையனுக் காகக் கத்துக்கிட்டது, இப்போ மாசம் ஒன்றரை லட்சம் ரூபாய் வருமானம் தரும் தொழிலாகியிருக்கு” என்று மகிழ்ச்சியோடு பேசுகிறார் கயல்விழி. கரூர் மாவட்டம், வடக்குப் பாளையத்தைச் சேர்ந்த இவர், பி.இ பட்டதாரி. குழந்தைகளிடம் பிரதி யெடுத்திருந்த குட்டி குட்டி காஸ்டிங் கை கால்களுக்கு எல்லாம் வண்ணம் தீட்டுவது, காயவைப்பது, ஃப்ரேம் தயாரிப்பது என பிஸியாக இருந்தவரை, பிரேக்கில் சந்தித்துப் பேசினோம்.

“அப்பா போலீஸ் ஏட்டாக இருந் தார். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார். அம்மா கிருஷ்ண வேணி, ஊரக வளர்ச்சித் துறையில உதவிப் பொறியாளரா இருக்காங்க. அக்கா காயத்ரி, நான், தம்பி ஹரிஹரன்னு வீட்டுல மூணு பிள்ளைங்க. பி.இ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சதும், 2019-ல் கிண்டி அண்ணா யுனிவர் சிட்டியில எம்.இ சீட் கிடைச்சது. ஆனா, கரூரை விட்டு பக்கத்து மாவட்டத்துக்குக்கூட அதிகம் போகாத எனக்கு ஹோம்சிக் பிரச்னை வர, ஒரே வாரத்துல கோர்ஸை டிஸ்கன்டின்யூ பண் ணிட்டு கரூருக்கு வந்துட்டேன். ‘அண்ணா யுனிவர்சிட்டியில சீட் கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம், இப்படி பாதியில வந் துட்டியே’னு எல்லாரும் சொன் னாங்க. நான் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சேன்.

 காஸ்டிங் தயாரிப்பில்...
காஸ்டிங் தயாரிப்பில்...

எங்கக்காவுக்கு பையன் கிருஷ் ஆதவ் பிறந்தப்போ, கோவிட் காலம். அவனோட வளர்ச்சி நிலைகளை பதிவு பண்ண சில நாள்களுக்கு ஒருமுறை அவனை போட்டோ எடுப்பேன். அதுக் காக வேற என்னலாம் பண்ண லாம்னு கூகுள்ல தேடினப்போ தான், ஐரோப்பிய நாடுகள்ல குழந்தைகளின் கை கால்களை ஒருவகை பவுடர் மூலமா தத் ரூபமா பிரதியெடுக்கும் `காஸ்டிங்’ முறை பிரபலமா இருப்பதை தெரிஞ்சுக்கிட்டேன். இந்தியாவுல அதை யாராச்சும் பண்றாங்களானு தேடினப்போ, ஹைதரா பாத்ல ஒருத்தர் இருப்பது தெரிஞ்சது. `கரூருக்கு வந்து என் அக்கா பையனுக்கும் கை கால் களை காஸ்டிங் பண்ண முடி யுமா?’னு கேட்டேன். தமிழ்நாடு வரையெல்லாம் வர முடியாதுனு சொல்லிட்டார். அந்த ஆசையை விட முடியாம, சரி நாமளே பண்ணலாம்னு தேடினப்போ, லண்டன்ல ஒருத்தர் ’ஜூம்’ மூலமா மூணு நாள் காஸ்டிங் வொர்க்‌ஷாப் நடத்துறது தெரியவந்தது. ரூ.33,000 கட்டணம் செலுத்தி அதுல கலந்துக்கிட்டு கத்துக்கிட்டேன்’’ - இந்தச் சித்தியின் பாசமும் ஆர்வமும் வியக்கவைத்தது.

``கலையைக் கத்துக்கிட்டாச்சு. ஆனா காஸ்டிங் மெட் டீரியல்ஸ் தமிழ்நாட்டுல எங்கும் கிடைக்கல. அதுக்கும் கூகுள்கிட்டயே வழி கேட்டப்போ, ஜார்கண்ட் மாநிலத்தை கை காட்டுச்சு. குறைஞ்சது அஞ்சு கிலோவாச்சும் வாங் கினாதான் அனுப்புவோம்னு சொன்னாங்க. சரினு வாங்கி னேன். அப்போ ரெண்டு மாசக் குழந்தையா இருந்த அக்கா பையனுக்கு, அதை வெச்சு ஆசை ஆசையா காஸ்டிங் பண்ணினேன். சரியா வரலை. சில மாசங்கள் கழிச்சு மறு படியும் செய்து பார்த்தேன் வரலை.

கயல்விழி
கயல்விழி

இப்படியே கிட்டத்தட்ட ஒன்பது மாசமா முயற்சி செய்தும் காற்றுக் குமிழ்கள் வந்து ரிசல்ட் சொதப்பிடும் அல்லது குழந்தை கையை ஆட்டிடுவான். மூணு கிலோ மெட்டீரியல்ஸ் வேஸ்ட் ஆயிட்டு. ஒருநாள் அவன் தூங்கினப்போ ட்ரை பண்ணினேன். இந்த முறை சக்சஸ். அவ்ளோ அழகா, தத்ரூபமா வந்திருந்தது. அதை 15 நாள் களுக்கு மேல காயவெச்சு, வண்ணம் அடிச்சப்போ, குடும்பமே ஆனந்தமாகிட்டோம்.

கிருஷ் ஆதவ் முதல் பிறந்தநாள் அப்போ, கேக்குக்குப் பக்கத்துல அவனோட குட்டி கைகள், கால்களோட காஸ் டிங்கையும் வெச்சிருந்தோம். பலரும் பார்த்து வியந்து விசாரிச்சாங்க. குடும்ப நண்பர் சரவணன், தன் னோட ஒன்றரை வயசு பையனுக்கும் அப்படி காஸ்டிங் பண்ண முடியுமானு கேட்டார். நானும் மீதம் இருந்த காஸ்டிங் மெட்டீரியல்ஸை வெச்சு அவருக்குப் பண்ணிக் கொடுத்தேன். அவர் கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு மெல்ட் ஆகிட்டார். நான் வேண்டாம்னு சொல்லியும் 7,000 ரூபாய் கொடுத்தார். அந்த நொடியிலதான், ‘இதை ஏன் நாம் பிஸினஸாக கன்வர்ட் பண்ணக் கூடாது?’னு யோசிச்சேன். 2021-ல், நான் செய்த ரெண்டு காஸ்டிங்ஸையும் போட்டோ எடுத்து என்னோட இன்ஸ்டாவில் பதிவிட் டேன். ரெண்டே நாள்ல சென்னையில இருந்து மூணு ஆர்டர் வந்தது. படிப்பை விட்டுட்டு வந்த ஊருல இருந்து ஆர்டர் வந்தது ஆறுதலாவும், தெம்பாவும் இருந்தது. சரவணன் கொடுத்த பணத்தோடு சேர்த்துப் போட்டு, ரூ.15,000க்கு 10 கிலோ காஸ்டிங் மெட்டீரியல்ஸை ஆர்டர் பண்ணினேன். அதுக்குள்ள இன்னும் 11 ஆர்டர்கள் சென்னை யிலேயே கிடைச்சது. என் தம்பியை உதவிக்கு அழைச்சுட்டு சென்னைக்குக் கிளம்பினேன்’’ - தலைநகரத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறது கயல்விழியின் திருப்புமுனை.

 காஸ்டிங் தயாரிப்பில்...
காஸ்டிங் தயாரிப்பில்...

``கேப் புக் பண்ணி எல்லா இடங்களுக்கும் போய் காஸ்டிங் பண்ணினேன். வீட்டுக்குத் திரும்பினதும் காயவைத்து, பெயின்ட் அடிச்சு, மரத்தில் ஃபிரேம் பண்ணி டெலிவரி பண்ணி னேன். 40,000 ரூபாய் கிடைச்சது இன்ப அதிர்ச்சியா இருந்தது. என் இன்ஸ்டா பக்கத்தை ‘ஹாப்பி காஸ்டிங் ஸ்டூடியோ’னு பெயர் மாத்தி போட்டோக்களை தொடர்ந்து போட, நாமக்கல், ஈரோடு, திருச்சினு பல ஊர்களில் இருந்து ஆர்டர்கள் வர, 100 கிலோ காஸ்டிங் மெட்டீரியல்ஸை ஆர்டர் கொடுக் கிற அளவுக்கு பிசினஸ் பிக் அப் ஆச்சு. தென்காசியில ஒரு ஆர்டர் வந் தப்போ, எங்க பக்கத்து வீட்டு நண்பர் கிருஷ்ணாவோட அவ ரோட டூவீலர்ல ஒரே நாள்ல 650 கிமீ பயணிச்சு வேலையை முடிச் சேன். பிறகு காரைக்குடி, நெல்லை, மதுரை, தேவகோட்டை, தூத்துக் குடி, வேளாங்கண்ணி, நாகர் கோயில், திருச்செந்தூர்னு பல ஊர் கள்ல இருந்தும் தொடர்ச்சியா ஆர்டர்கள் குவிஞ்சது. ஆர்டர்களுக் காக டிராவல் பண்ணுறதுக்காக, காரை வாங்குற அளவுக்கு தொழில் எனக்கு வெற்றியைக் கொடுத்தது. கேரளா, கர்நாடகா, புதுச்சேரினு மற்ற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்க, நானும் தம்பியும் போயிட்டு வந்தோம்.

காஸ்டிங் பண்ணின கை கால்களை மர ஃபிரேம்களில் செட் செய்து கொடுக்க, கார்பென்டர் ஒருத்தர் வேலைக்கு இருக்கார். கூடவே அந்த ஃபிரேம்ல, குழந்தையோட பிறந்த தேதி, உயரம், எடை உள்ளிட்ட தகவல் களையும் செட் செய்து தரச்சொல்லி பல பெற்றோர்கள் கேட்பாங்க. இன்னும் சிலர் குழந்தைக்குப் பயன்படுத்தின முதல் வசம்பு, முதல் வளையல், காப்பு, தொப்புள் கொடி க்ளிப், முதல் சட்டை, புகைப்படம்னு பல வற்றையும் அந்த மர ஃபிரேம்குள்ள வெச்சு தரச் சொல்வாங்க. சில பெற்றோர், குழந்தை கை கால்களை தங்களோட கைகள் தொட் டுட்டு இருக்குற மாதிரி காஸ்டிங் கேட்பாங்க. அதேபோல் 60, 80-வது கல்யாணம் பண்ணிக் கிற சீனியர் ஜோடிகளோட கை கால்களை காஸ்டிங் பண்ணச் சொல்லி அவங்க பசங்க கேட்பாங்க. இப்படி வேலை வெரைட்டியா, சுவாரஸ்யமா போகுது’’ என்றவர்,

``இதுவரை 450 காஸ்டிங் ஃபிரேம்கள் பண்ணிக் கொடுத்திருப்பேன். இப்போ மாசம் 25-க்கும் குறையாம காஸ்டிங் ஆர்டர்கள் கிடைக்குது. எல்லா செலவுகளும் போக மாசம் ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. இன்னொரு பக்கம் என் சிவில் சர்வீஸ் தேர்வுத் தயாரிப்புகளையும் தொடர்ந் துட்டு இருக்கேன். முயற்சிதானே எல்லா விஷயங்களுக்கும் முதல் மூலதனம்!’’ - வெற்றிப் புன்னகையுடன் சொல்கிறார் கயல்விழி.