லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

“கனவுகளை சமரசம் பண்ணாதீங்க; இலக்கை அடையுறவரை போராடுங்க!”

ஜெயஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயஸ்ரீ

கனடாவில் கலக்கும் ஜெயஸ்ரீ

“படிக்கிறோம், வேலைக்குப் போறோம், ஆசைப்பட்ட மாதிரி வாழுறோம்... இதுமட்டும் தான் வாழ்க்கையா? இந்தக் கேள்விதான், என் இலக்கை அடைஞ்சே ஆகணுங்கிற உத்வேகத்தை எனக்குள்ள அதிகரிச்சது. இப்போ முதல்கட்ட வெற்றியுடன், என் கனவு களை நோக்கி உயரப் பறக்கிற சுதந்திரப் பறவை நான்...” தன்னம்பிக்கை சிறகுகளை விரித்துப் பேசுகிறார், கனடாவில் வசிக்கும் ஜெயஸ்ரீ வெங்கடாசலம்.

கனடாவில் ரியல் எஸ்டேட் தொழிலை அரசின் அனுமதியுடன்தான் செய்ய முடியும். அங்கு பெண்கள் அதிகம் கோலோச்சாத இந்தத் துறையில் பணியாற்றும் ஒரே தமிழ்ப் பெண் ஜெயஸ்ரீ. வேலைக்காக வெளிநாடு சென்றவர், 20 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் இளம் தொழில்முனைவோராக கவனம் ஈர்க்கிறார்.

“வளர்ந்ததெல்லாம் சென்னை. என் 15 வயசுல எங்கப்பா தவறினதும் ரொம் பவே சிரமப்பட்டோம். எங்கம்மாவும் ரெண்டு அண்ணன்களும்தான் அப்பா ஸ்தானத்துல இருந்து என்னை வளர்த் தாங்க. பி.டெக் முடிச்சுட்டு, ஐ.டி துறையில ரெண்டு வருஷங்கள் வேலை செஞ்சேன். அடுத்து அமெரிக்கா போனேன். ஆறே வருஷங்கள்ல அங்கி ருக்கிற முன்னணி ஐ.டி நிறுவனத்துல பெரிய பொறுப்புக்கு உயர்ந்தேன். மாசம் பல லட்சம் சம்பளத்துடன், எல்லாத் தேவைகளும் நிறைவா பூர்த்தி யாச்சு. ஆனா, அந்த வேலைச்சூழல் எனக்கு மகிழ்ச்சி தரலை. ‘இதுதான் எனக்கான அடையாளமா?’னு தினமும் தனிமையில உட்கார்ந்து கலங்குவேன். சுயமா ஜெயிக்கிறது மட்டும்தான் என் இலக்கா இருந்துச்சு. நிரந்தரக் குடியுரிமை வாங்கின பிறகுதான் அமெ ரிக்கால சுயத்தொழில் செய்ய முடியும். அதுக்கு, அந்த நாட்டுல குடியேறினது லேருந்து 15 வருஷங்களுக்கும் மேலாகும். இதுவே, கனடாவுல சில வருஷங்கள்லயே நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும்னு தெரிஞ்சது” என்பவர், தன் ஐ.டி வேலையை விட்டுட்டு, 2019-ல் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குக் குடியேறியுள்ளார். அந்த நாட்டில் நிலவும் முக்கியமான சிக்கலிலிருந்தே தன் தொழில் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளார் இவர்.

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

“கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில ரியல் எஸ்டேட் துறையின் பங்கு 20 சதவிகிதம். ஒவ்வொரு வருஷ மும் உலகம் முழுக்கவிருந்து பல லட்சம் பேர் கனடாவுக்கு வேலைக்காக வர்றாங்க. தேவைக்கு மிகக் குறைவான அளவுலயே இருப்பிடங்கள் இருக்கிற தால, வாடகைக்கு வீடு கிடைக்கிறதுலயும், சொந்தமா வீடு வாங்கிறதுலயும் இங்கே கடுமையான போட்டிகள் ஏற்பட்டு, பலரும் ஏமாற்றப்படுறாங்க; கடனாளி ஆகிறாங்க. இந்த விஷயத்துல மக்களுக்குச் சரியான வழிகாட்டுதல் களைக் கொடுக்கவும், வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யவும் ‘ரியல் எஸ்டேட் புரொஃபஷனல்’ங்கிற துறையினரின் சப்போர்ட் பெரும்பாலா னோருக்கும் தேவைப்படுது.

கனடா வந்தப்போ சரியான வசிப் பிடம் கிடைக்காம என் குடும்பத்தினரும் அலைக்கழிக்கப்பட்டோம். இந்தப் பிரச்னையிலேருந்து மக்களுக்குத் தீர்வு கொடுக்கணும் நினைச்சேன்” - தனக்கான தொழிலை உறுதிசெய்த ஜெயஸ்ரீ, ‘இன்டர்நேஷனல் பிசினஸ் அண்டு மேனேஜ்மென்ட்’ படிப்புடன், ரியல் எஸ்டேட் தொழிலுக்கான படிப்பையும் முடித்து, அந்நாட்டு அரசின் தொழில் உரிமமும் பெற்றுள் ளார். பின்னர், ‘வேல்யூ மேக்ஸ் ரியாலிட்டி’ எனும் நிறுவனத்தைத் தொடங்கியவர், டொரொன்டோ நகரில் வசித்துவருகிறார்.

“நாட்டின் சட்டத்திட்டத்தை எடுத்துச் சொல்லி, லோன் உதவிகள் செய்துகொடுக்கிறதுடன், சொத்துக் கான வில்லங்கம் இல்லாததை உறுதி செஞ்சு, பத்திரப்பதிவுக்கான ஏற்பாடுகள் உட்பட வாடிக்கையாளருக் கான எல்லாத் தேவைகளையும் முழுமையா பூர்த்தி செய்துகொடுக்கிறது தான் ‘ரியல் எஸ்டேட் புரொஃபஷனல்’ துறையினரின் வேலை. பொருளாதார அனுபவமும் தேவைப்படக் கூடிய இந்த வேலைக்குப் பெரிய டிமாண்டு இருக்கிறதால, கனடால 60,000-க்கும் மேற்பட்டோர் இந்தத் தொழிலைச் செய்யறாங்க. அதுல சில ஆயிரம் பேர் தான் சரியான முறையில இந்தத் தொழி லைச் செய்யறதா சொல்லப்படுது.

விதிகளை மீறி செயல்படுற ‘ரியல் எஸ்டேட் புரொஃபஷனல்’ நபர்களுக்கு எச்சரிக்கையுடன் அபராதம் விதிக்கப் படும். மூணு முறை இந்த மாதிரி புகார்களுக்கு உள்ளாகிறவங்களோட உரிமம் ரத்து செய்யப் படும். ஆனாலும், லைசென்ஸ் இருக்கிறவரை எவ்ளோ சம்பாதிக்க முடியுமோ சம்பாதிச்சுக் கணும்னு நினைக்கிறவங்கதான் அதிகம். விதிகளைச் சரியா கடைப்பிடிச்சாலே, இந்தத் தொழில்ல நல்ல வளர்ச்சி கிடைக்கும்” என்று கள நிலவரத்தைச் சொல்பவர், நூற்றுக்கும் அதிகமானோருக்குச் சொந்த வீடு வாங்கிக் கொடுத்திருப்பதுடன், ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறார்.

கனடாவில் வசிக்கும் தமிழர்கள் அனை வரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை, ஐ.டி துறையில் பணியாற்றும் தன் கணவர் சிவராமுடன் இணைந்து செய்துவருகிறார் ஜெயஸ்ரீ. அதுகுறித்துப் பேசுபவர், “இந்த நாட்டுல தமிழர்கள் அதிகம் வசிச்சாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க, இலங்கைத் தமிழர்கள், மலேசிய தமிழர்கள்னு பல குழுக்களா வசிக்கிறோம். இவங்க எல்லோ ரையும் ‘தமிழர்கள்’ங்கிற நட்புணர்வுடன் இணைஞ்சு செயல்பட வைக்கணும்னு ‘டொரொன்டோ தமிழர்கள்’ங்கிற கூட்டமைப்பை 2020-ல் உருவாக்கினோம்.

20,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எங்கக் குழுவுல இணைஞ்சிருக்காங்க. இதன் மூலம் ஒருத்தருக்குத் தெரிஞ்ச நல்ல விஷயங் களை இன்னொருத்தருக்கு வழிகாட்டுறது, உதவிகள் செய்யறது, பண்டிகைகளைக் கொண்டாடுறது, நம் அடையாளங்களை இந்த நாட்டினருக்குத் தெரியப்படுத்துறதுனு பல விஷயங்களைப் பண்றோம். தமிழர்கள் உட்பட பல மொழி சார்ந்தவங்களையும் தொழில்முனைவோர்களாகவும், அவங்க துறைக்கான வளர்ச்சிக்கு ஊக்கப்படுத்தவும் ‘டொரொன்டோ டாக்ஸ்’ (Toronto Talks) என் கிற திட்டத்தைச் செயல்படுத்துறோம். தமிழர் களின் ஒற்றுமையை இளைய தலைமுறைக்குப் பொறுப்புடன் கத்துக் கொடுக்கிறோம்” - உற்சாகம் ததும்புகிறது ஜெயஸ்ரீயின் பேச்சில்.