Published:Updated:

`தலைமை நீதிபதியாக விரும்புகிறேன்’ - 15 வயது மாணவிக்கு பிரதமர் மோடியின் அறிவுரை

தனிஷ்கா சுஜித் பிரதமர் மோடியுடன்

மாணவி தனிஷ்கா சுஜித், 15 வயதில் பி.ஏ படித்து வருகிறார். சட்டம் படித்து நாட்டின் தலைமை நீதிபதியாக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார். கோவிட் 19-க்கு தன் தந்தை மற்றும் தாத்தாவை இழந்த தனிஷ்கா, தன் அம்மா தரும் ஊக்கத்தால் கல்விச் சாதனைகளைத் தொடர்ந்து வருகிறார்.

Published:Updated:

`தலைமை நீதிபதியாக விரும்புகிறேன்’ - 15 வயது மாணவிக்கு பிரதமர் மோடியின் அறிவுரை

மாணவி தனிஷ்கா சுஜித், 15 வயதில் பி.ஏ படித்து வருகிறார். சட்டம் படித்து நாட்டின் தலைமை நீதிபதியாக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார். கோவிட் 19-க்கு தன் தந்தை மற்றும் தாத்தாவை இழந்த தனிஷ்கா, தன் அம்மா தரும் ஊக்கத்தால் கல்விச் சாதனைகளைத் தொடர்ந்து வருகிறார்.

தனிஷ்கா சுஜித் பிரதமர் மோடியுடன்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த திறமையான மாணவியான தனிஷ்கா சுஜித், 15 வயதில் இளங்கலை (BA) இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது ஏப்ரல் 19 முதல் 28 வரை நடைபெறும் பி.ஏ (உளவியல்) இறுதியாண்டு தேர்வு எழுத உள்ளார். சட்டம் படித்து நாட்டின் தலைமை நீதிபதியாக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.

தனிஷ்கா குழந்தையாக இருந்தபோது பெற்றோர்கள் அவரை மழலையர் வகுப்பில் சேர்த்தனர். அப்போது அவரிடம் அபார திறமைகள் இருப்பதை அறிந்த ஆசிரியர்கள், மற்ற குழந்தைகளைவிட இவருக்குத் திறமைகள் அதிகம் உள்ளது என்று அவரின் பெற்றோரிடம் கூறினார்கள்.

தனிஷ்கா சுஜித்
தனிஷ்கா சுஜித்

அதனால் தனிஷ்காவின் திறமைக்கு ஏற்ப வீட்டிலேயே அவர் கல்வி கற்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். 3 வயதில் முதல் வகுப்பு பாடங்களைப் படித்து முடித்து தேர்வில் வெற்றி பெற்றார்.

மேலும் தொடர்ந்து படித்த அவர் 11-வது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். அதில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்தார். அத்துடன் அடுத்த ஆண்டு 12-வது வயதில் ப்ளஸ் டூ பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

தனிஷ்கா தனது 13 வயதில் பி.ஏ (உளவியல்) படிக்க விரும்பினார். அதற்காக மத்தியப் பிரதேச கல்வித் துறையின் சிறப்பு அனுமதி பெற்றார். அதற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்று  சிறப்பாக தேர்ச்சி பெற்றார்.

தேவி அகில்யா விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில் பி.ஏ (உளவியல்) படிப்பை மேற்கொண்டார். தற்போது பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வரும் அவர் சில நாள்களில் இறுதியாண்டுத் தேர்வு எழுதவிருக்கிறார்.

தனிஷ்கா சுஜித் பிரதமர் மோடியுடன்
தனிஷ்கா சுஜித் பிரதமர் மோடியுடன்

2020-ம் ஆண்டில் கோவிட் 19-க்கு தன் தந்தை மற்றும் தாத்தாவை இழந்த டீனேஜ் பெண் தனிஷ்கா, தன் அம்மா அனுபா தரும் ஊக்கத்தால் கல்வி சாதனைகளைத் தொடர்ந்து வருகிறார்.  

இந்தச் சூழலில்தான் சில நாள்களுக்கு முன்பு போபாலில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் தனிஷ்கா. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, சிறுமி தனது முயற்சியைத் தொடர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர்  ஊக்கப்படுத்தியுள்ளார்.

அப்போது எதிர்கால லட்சியம் குறித்து பிரதமர் கேட்டபோது, பி.ஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அமெரிக்காவில் சட்டம் படிக்க விரும்புவதாகவும், ஒருநாள் இந்தியாவின் தலைமை நீதிபதியாக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.

தனிஷ்கா சுஜித் பிரதமர் மோடியுடன்
தனிஷ்கா சுஜித் பிரதமர் மோடியுடன்

சிறுமி தனிஷ்காவின் லட்சியத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, ``உன்னுடைய கனவு நிச்சயம் நனவாகும். உச்ச நீதிமன்றத்துக்கு சென்று அங்கு வழக்கறிஞர்கள் எவ்வாறு வாதிடுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். முதலில் வழக்கறிஞர், பின்னர் நீதிபதி, அதற்குப் பிறகு தலைமை நீதிபதி என லட்சியத்தை அடைய நீ தொடர்ந்து அயராது பாடுபட வேண்டும்" என்று பாராட்டி வழிமுறைகளைக் கூறினார்.

இந்தச் சந்திப்பு குறித்து தனிஷ்கா சுஜித் கூறுகையில், ``என் லட்சியத்தை அறிந்த பிரதமர், அதற்கான வழிமுறைகளைக் கூறி அறிவுறுத்தினார். அது எனது இலக்கை அடைய என்னை ஊக்குவிக்கும். பிரதமரைச் சந்தித்ததில் என்னுடைய கனவு நனவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.