
எங்க ரெண்டு பேர்கிட்டயுமே இருக்கிற குணம்... ஒரு விஷயத்தைப் பத்தி ஆழமா தெரிஞ்சுட்டுதான் அதைப் பத்தி கன்டன்ட் ரெடி பண்ணுவோம். அதுக்காக நிறைய வொர்க் பண்ணுவோம்.
``நாங்க கன்டன்ட் ரைட்டர்ஸ். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்ஸ். ஆர்.ஜேயா கலக்குவோம். கிராஃப்ட் வேலைப்பாடுகளும் செய்வோம்’’ - இருவரும் தங்களின் நான்கு அடையாளங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வாய்ஸ் ஓவரில் கலக்கிக்கொண்டிருக்கும் இரட்டையர்கள் உமா, மகியுடன் ஒரு சாட்!
``நாங்க சென்னை பொண்ணுங்க. பார்ட் டைம், ஃப்ரீலேன்ஸர்னு காலேஜ் படிக்கும் போதுல இருந்து இப்போ வரை 15 வருஷமா ரேடியோவுல ஆர்ஜெவா வேலை பார்த்துட்டு இருக்கோம். எங்க முகம் தெரியாத எத்தனையோ பேருக்கு எங்க குரலைத் தெரியும். இந்த நிலை யில, எங்களுக்கு ஒரு மாஸ் அடையாளம் கிடைச்சது... ‘ரெட்டைவாலு’ என்ற பாட் காஸ்ட் (Podcast) நிகழ்ச்சி மூலமாதான். லாக் டௌன்ல ஏதாச்சும் பண்ணலாம்னு ஆரம்பிச் சதுதான் அந்த பாட்காஸ்ட். சென்னை பத்தின தகவல்களை அதுல கொடுக்கிறதுதான் ஐடியா. அதுக்காக கன்டன்ட் ரெடி பண்ணி னோம். அதை நாங்க ரெண்டு பேரும் சுவாரஸ் யமா பேசினதால... ஹிட்டு’’ என்று சொல்லும் உமாவின் குரல், ‘பேடிஎம்’ (Paytm) மூலம் நமக்கெல்லாம் மிகப் பரிச்சயம்.
‘`பேடிஎம்-ல டீம் லீடரா வேலை பார்த் தப்போ, ஒரு வாய்ஸ் ஓவர் பண்ணனும்னு கேட்டாங்க. சரின்னு ரெக்கார்டிங் போயிட்டு வாய்ஸ் ஓவர் கொடுத்துட்டு வந்துட்டேன். ஆனா, அது எப்ப வரும்னு தெரியல. ஒரு நாள் என்னோட வாய்ஸை பேடிஎம் சவுண்ட் பாக்ஸ்ல கேட்டேன். செம்ம சர்ப்ரைஸ். இப்போ உலகத்துக்கே என் குரல் தெரியும்’’ என்கிறார் சிலிர்ப்புடன்.
``அவ பேடிஎம்-னா நான் ஃபோன்பே (PhonePe)’’ என்கிறார் மகி. ’’ரேடியோ நிறுவனத் தில் காப்பி ரைட்டரா வேலை பார்க்கிற நான், பல விளம்பரங்களுக்கும் ஸ்கிரிப்ட்ஸ் கொடுப் பேன். அந்த நிறுவனத்துக்கு என் ஸ்கிரிப்ட் பிடிச்சிடுச்சுனா, எல்லா ரேடியோலயும் அதைத்தான் யூஸ் பண்ணுவாங்க. போன்பே சவுண்ட் பாக்ஸ்ல வர்ற வாய்ஸ் என்னோடது’’ என்கிறார் தங்கையைப் பார்த்து சிரித்தபடி.
``கொரோனா டைம்ல லே ஆஃப் பண்ணி னப்போ எங்க ரெண்டு பேருக்கும் வேலை போயிடுச்சு. அப்போதான் வாய்ஸ்ஓவர்ல அதிகமா கவனம் செலுத்த ஆரம்பிச்சோம். ஒரு கம்பெனி விளம்பரத்துக்கு வாய்ஸ் ஓவருக் கான ஸ்கிரிப்ட் எழுதி, வாய்ஸ் ஓவரும் பண்ணிக் கொடுத்தோம். அவங்களுக்கு அது பிடிச்சுப் போக, அது மூலமா எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. எல்லாத் தையும் நல்லா பயன்படுத்திக்கிட்டதால, இப்போ வாய்ஸ் ஓவர்ல எங்களுக்குனு ஒரு இடத்தைப் பிடிச்சிருக்கோம். அடுத்து டப்பிங்லயும் கலக்கணும்’’ என்பவர்களிடம், நிராகரிப்பு கதைகளும் நிறைய உள்ளன.
``இன்னிக்கு நாங்க இன்டர்வியூ கொடுக்கிற அளவுக்கு வளர்ந்திருந்தாலும், நிறைய நிரா கரிப்புகளைப் பார்த்திருக்கோம். குறிப்பா, வாய்ஸ் ஓவர்ல க்ளையன்ட்ஸ் நேருக்கு நேராவே எங்க வாய்ஸ் ரொம்ப கேவலமா இருக்குனு சொல்லியிருக்காங்க. துரோகங் களையும் கடந்திருக்கோம். எங்க கான்சப்ட்டை ரிஜெக்டட்னு எங்ககிட்ட சொல்லிட்டு, அப்புறம் அதை அவங்களோடதுனு பயன் படுத்தியிருக்காங்க. எதிர்த்துலாம் கேள்வி கேட்க முடியாது. ஆனா, அதையெல்லாம் மீறி வந்து ஜெயிச்சுக் காட்டலாம்’’ என் கிறார்கள் கெத்தாக.
``கிராஃப்ட் வொர்க்ல ரெண்டு பேருக்குமே ஆர்வம் என்பதால, கஸ்டர்மஸ் கேட்கிற மாதிரி வேலைப்பாடுகளை செஞ்சு கொடுக்கி றோம். பிடிச்சு செய்றதால எல்லாத்துக்கும் டைம் இருக்குதுபோல.”
பீமா ஜூவல்லர்ஸ், பான்டீன் ஷாம்பூ, ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் ஷாம்பூ, டாபர் ரெட் பேஸ்ட், ஜாய் ஆலுக்காஸ், ஸொமாட்டோ, ஆம்வே உள்ளிட்ட விளம் பரங்களில் நாம் கேட்பது இவர்களின் வசீகரக் குரல்களைத்தான்.
“இப்படி என்னதான் எங்க வாய்ஸ் ஊரு முழுக்க ஒலிச்சாலும், அது எங்களோடதுனு பலருக்கும் தெரியாது. அதனால இன்ஸ்டால, அதையெல்லாம் வாய்ஸ் ரெக்கார்டிங் பண்ணின வீடியோஸ் போஸ்ட் பண்ணி, ‘மக்களே... இந்தக் குரல்களுக்கு எல்லாம் ஓனர்ஸ் நாங்கதான்’னு சொன்னோம். அப்போதான் ஒரு சேனல்ல இருந்து, ‘அட... இதெல்லாம் நீங்களா? ரெண்டு பேரும் சிஸ்டர்ஸா?’னு எங்களை பேட்டி எடுத்தாங்க. அதுக்கு அப்புறம் ’சூர்யவம்சம்’ சரத்குமார் மாதிரி ஒரே நைட்ல ஓஹோனு ஆகிட்டோம்’’ என்கிறார்கள் அடக்கமுடியாத சிரிப்புடன்.
``எங்க ரெண்டு பேர்கிட்டயுமே இருக்கிற குணம்... ஒரு விஷயத்தைப் பத்தி ஆழமா தெரிஞ்சுட்டுதான் அதைப் பத்தி கன்டன்ட் ரெடி பண்ணுவோம். அதுக்காக நிறைய வொர்க் பண்ணுவோம். அதை தோல்விகள் லயும் தொடர்ந்து செஞ்சுட்டே இருந்ததால தான், கொஞ்சம் லேட்டானாலும் அதுக்கான அங்கீகாரம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு. உங்களுக்கெல்லாம் நாங்க சொல்ல நினைக் கிற ஒரு விஷயம்... முட்டாள்னு இங்க யாருமே இல்ல. எத்தனை புறக்கணிப்புகளைப் பார்த் தாலும் உங்களை நீங்க நம்புங்க. முயற்சியை தொடருங்க. ஒருநாள் விடியும். இந்தத் தத்துவத்தை உங்களுக்கு வழங்குவது... உங்க ‘ரெட்டைவாலு’ உமா, மகி” - சமர்த்தாக முடிக்கிறார்கள் சகோதரிகள்.