வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எனக்கு சமையலில் ஓரளவு ஆர்வம் உண்டு. நம் அம்மா பாட்டியிடம் கற்றிருந்தாலும் காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டியதிருக்கிறதே. சமையலில் சிறிது மாற்றம் செய்தால்தான், புதுமையை புகுத்தினால் தான் குழந்தைகள் ஏறிட்டாவது பார்க்கிறார்கள்.
இல்லையென்றால் ஸ்விக்கி , சொமாட்டோவுக்கு ஒரே தாவு தான். அதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் சமையலில் சில மாற்றங்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், அதன் அடிப்படையில் கோவை வேளாண்மை பல்கழகத்தில் நான்கு நாள் பயிற்சிக்கு சென்றிருந்தேன்.

என்ன தான் YouTube இருந்தாலும், இது போன்ற வகுப்பில் சேர்ந்து படிப்பது என்பது தனிச்சிறப்பு தான். பயிற்சியின் (கட்டணம் உண்டு) இறுதியில் சான்றிதழும் வழங்குகிறார்கள் சிறு தானியத்தில் எவ்வாறு மதிப்பூட்டபடலாம். அதனை இக்காலத்திற்கு தகுந்தவாறு (இந்த ஆண்டிற்கு தகுந்தவாறும் சிறுதானிய ஆண்டு..) மாற்றி அமைத்து, மதிப்பூட்டப்பட்ட பொருட்களும் சொல்லித் தருகிறார்கள்.
சிறு தானியத்தை வைத்து கேக், ஐஸ்க்ரீம் , முறுக்கு, இடியாப்பம், பிரியாணி. முருங்கை கீரை பொடி , மு,கீரை குக்கீஸ், முருங்கைக்காய் ஊறுகாய் காளான் ஊறுகாய் பொருட்கள் கெடாமல் இருக்க எப்படி பதப்படுத்த வேண்டும்,இது போக பொடி வகைகள் . மிக்ஸ் வகைகள்) குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த பிரியாணி மிக்ஸ்) கற்றுத்தருகிறார்கள் .

அது மட்டுமல்ல முக்கியமாக எப்படி குடிசைத் தொழிலாக்குவது என்ற நுட்பத்தையும் கற்றுத்தருகிறார்கள். மேலும் எந்த கலப்படமும் இல்லாமல் உயர்தரமாக தயாரிக்கலாம் நல்ல பயனுள்ள வகுப்பு. ஆண் பெண் இரு பாலாரும் கலந்து கொள்ளலாம். வயது . கல்வித்தகுதி எதுவும் கிடையாது , ஒன்றே ஒன்று ஆர்வம் மட்டுமே . இந்த ஆர்வத்தை மதிப்பூட்டினால் ஒரு தொழிலதிபர் கூட ஆகலாம் .
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.