Published:Updated:

சைக்கிள்: நிழலாடும் நினைவுகள் #MyVikatan

சைக்கிள் (மாதிரிப்படம்)

சைக்கிள் சாவியினை கொடுத்த நிமிடங்களில் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டேன். உதகை நோக்கிய பயணம் முழுவதுமாக சைக்கிள் பற்றிய நினைவுகளை சுமந்தபடியே சென்றேன்.

சைக்கிள்: நிழலாடும் நினைவுகள் #MyVikatan

சைக்கிள் சாவியினை கொடுத்த நிமிடங்களில் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டேன். உதகை நோக்கிய பயணம் முழுவதுமாக சைக்கிள் பற்றிய நினைவுகளை சுமந்தபடியே சென்றேன்.

Published:Updated:
சைக்கிள் (மாதிரிப்படம்)

அது 2003-ம் வருடம். சென்னை மாநகரின் கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலையத்தில் ஆய்வக நுட்புநர் (Lab Technician) CMLT படித்துக் கொண்டிருந்த காலமது. சுமார் ஆறு மாத காலம் கடந்த நிலையில் மிகுந்த ஆர்வமாக படிப்பதோடு , செய்முறை பயிற்சிகளில் முழுமையான ஈடு பாட்டுடன் செய்வேன். எனது ஈடுபாடான செய்முறை பயிற்சிகளை கண்ட, செய்முறை பயிற்சி ஆசிரியர், 'நீ மிகவும் ஆர்வமாக, நன்றாக செய்முறை தேர்வுகளை செய்கிறாய், நீ விரும்பினால் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பகுதி நேர பணிக்கு சொல்கிறேன், செல்கிறாயா, ஆய்வக உரிமையாளரும் ஒரு ஆய்வக நுட்புநர்தான், ஊதியமாக ஒரு குறிப்பிட்ட தொகையினை தருவார், உன்னுடைய அன்றாட, அத்தியாவசியமான தேவைகளுக்கு மிகுந்த உபோயகமாக இருக்கும் என்று கூறிட , நானும் மிகுந்த உற்சாகமாக சம்மதித்தேன். செய்முறை பயிற்சி ஆசிரியர் கூறியபடியே ,அந்த அவர்கள் கூறிய ஆய்வகம் சென்று பகுதி நேர பணியில் இணைந்தேன். முழு ஈடுபாட்டோடு பணிகளை செய்த எனக்கு, CMLT படிப்பிற்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

வெற்றிகரமாக ஆய்வக நுட்புநர் கல்வியை முடித்த நான், பகுதி நேரம பணியாற்றிய அதே ஆய்வகத்தில் முழு நேர பணியாளராக பணியில் சேர்ந்தேன். அடுத்த கல்வியாண்டுக்கான காலம் வரை முழு நேர பணியாளராக பணியாற்றிய எனக்கு அந்த கல்வி ஆண்டில் சிறு துளிர் விட்டது. புதுவை பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டயக் கல்வி, அடுத்து ஆய்வக நுட்புநர் சான்றிதழ் கல்வி. அடுத்ததாக ஒரு பட்டப்படிப்பில சேர்ந்து ஒரு பட்டம் பெறுவோமே என,பகுதி நேர பணியாளராக பணியாற்றிய நான் ஆய்வக நிறுவன தலைமையிடம் நான் B.SC MICRO BIOLOGY எனும் நுண்ணுயிரியல் பிரிவில் சேர்ந்து படிக்க வேண்டும். மூன்றாண்டு கல்வியை நிறைவு செய்யும் வரை மீண்டும் ஆய்வகத்தில் பகுதி நேர பணியாளராக பணி செய்ய அனுமதிக்க வேண்டுமென பணிவுடன் கேட்க, அவரும் மிகுந்த உற்சாகமாக சம்மதிக்க, குரோம்பேட்டையில் இருந்த கல்லூரிக்கு எதிராக சென்று B.SC MICRO BIOLOGY பிரிவில் சேர்ந்தேன்.

அந்த காலகட்டத்திலே ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தும் இஎம்ஐ முறையில் வாங்கிய அந்த சைக்கிள்மீது தனிப்பட்ட வகையில் அபரிமிதமான அன்பு நிறைந்திருந்தது.

குரோம்பேட்டையில் இருந்து பல்லாவரம் வரை தினசரி சென்று வர பேருந்தினையே நம்பி இருந்த காலமது. ஒரு சைக்கிள் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்த நான் ஆய்வக நிறுவனரிடம் சென்று எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர வேண்டுமென கேட்க, அவரும் மகிழ்ச்சியாக சரி என சம்மதிக்க, என்னை அழைத்துக் கொண்டு ஒரு சைக்கிள் கடைக்கு அழைத்துச் சென்றார். ஒரு ஹெர்க்குலிஸ் சைக்கிளை தேர்ந்தெடுத்து, அந்த சைக்கிள் வேண்டுமென கூற, விலையை விசாரித்த நிலையில் அந்த சைக்கிளின் விலை 5,500 என கூற, பகுதி நேர பணியாளராக பணியாற்றிய எனக்கான ஊதியம் குறைவாக பெற்று வந்த எனக்கு ஐந்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்பது மிகவும் அதிகமான தொகையாக தெரிய, சற்றே சங்கடமான சூழலில் நிற்க, ஆய்வக நிறுவனரோ, ஒன்றும் சங்கடமாக உணர வேண்டாம் ஒவ்வொரு மாதமும் ஐந்நூறு ரூபாய் மட்டும் ஊதியம் பெறுகையில் கொடுத்தால் போதுமென கூறி, புதிய சைக்கிளை வாங்கி எனது கையில் கொடுக்க, மிகுந்த உற்சாகமாக மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்ட நான், அந்த காலகட்டத்திலே ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தும் இஎம்ஐ முறையில் வாங்கிய அந்த சைக்கிள்மீது தனிப்பட்ட வகையில் அபரிமிதமான அன்பு நிறைந்திருந்தது என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.

தினமும் குரோம்பேட்டை முதல் பல்லாவரம் வரையிலான எனது சைக்கிள் பயணம் ஆரம்பித்தது. ஆய்வகத்திற்கும் கல்லூரிக்கும் தங்கியிருந்த அறைக்குமென உற்சாகமான சைக்கிள் பயணம் ஓட, மூன்றாண்டு பட்ட படிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் அதுவரை தினமும் எனது சைக்கிள் பயணம் அலாதியான ஓர் உறவாக இருந்தது. பட்டக் கல்வி நிறைவடைந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி வட்டார அலுவலகத்தில் அரசுப் பணி கிடைக்க, பேருந்தில் நீலகிரி பயணம். சென்னை குரோம்பேட்டையில் தங்கியிருந்த காலத்தில் வழக்கமாக ஒரு முடி திருத்தகம் செல்வது எனது வழக்கம். அந்த முடி திருத்தம் செய்பவரும் நாளடைவில் நெருங்கிய நண்பராகி விட, எனது சைக்கிளை மிகவும் நன்றாக உள்ளதென கூறுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசுப்பணி நீலகிரி தவிர தமிழகத்தில் வேறு எங்கு கிடைத்திருந்தாலும் சைக்கிளை என்னுடனே எடுத்துச் செல்ல வேண்டுமென்ற மன நிலையில் இருந்த எனக்கு, பணி மலை மாவட்டமான நீலகிரியில் கிடைக்க மிகுந்த மேடும் பள்ளமுமாக இருந்த நிலப்பரப்பை கொண்ட உதகையில் சைக்கிள் பயணம் ஏற்றதாக இருக்காது என்ற நிலை. எனவே, சைக்கிளை சென்னையிலேயே விட்டுச் செல்ல வேண்டிய சூழல்.

நெருங்கிய நண்பராகி விட்ட முடி திருத்தக நண்பரிடம் எனது சைக்கிளை வைத்துக் கொள்ளுமாறு கூறி சைக்கிள் சாவியினை கொடுத்த நிமிடங்களில் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டேன். உதகை நோக்கிய பயணம் முழுவதுமாக சைக்கிள் பற்றிய நினைவுகளை சுமந்தபடியே சென்றேன்.

பின்னாளில், ஒரு நாள் ’பை சைக்கிள் தீஃவ்ஸ்’ திரைப்படம் இத்தாலி மொழியில் வெளிவந்த கலைப்படத்தை காணும் வாய்ப்பு அமைந்தது.பிரபல கலைப்பட இயக்குனரான வித்தோரியொ டி சில்காவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமே இந்தியக் கலைப்பட பதேர்பாஞ்சாலி இயக்குனரான சத்யஜித் ராயைத் திரைப்பட இயக்குனராக மாற்றியது என்ற செய்திகளை அறிந்து நினைவுகளில் எனது சைக்கிள் நினைவிலாடியது. இந்த பை சைக்கிள் தீஃவ்ஸ் திரைப்படமே பின்னாளில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' திரைப்படத்திற்கும் அடிப்படையாக இருந்தது என்ற செய்தியை அறிந்த போது, நான் கல்லூரி நாட்களில் இஎம்ஐ மூலமாக வாங்கிய சைக்கிளின் நினைவுகள் நிழலாடியது.

இதோ இப்போது இஎம்ஐ மூலமாக எத்தனையோ பொருட்களை வாங்கும் காலமாக மாறி விட்ட இந்த சூழலில், அன்புடன் வாங்கிய அந்த சைக்கிள், அதனுடன் பயணித்த நினைவுகள் இப்போதும் மறக்க முடியாத அனுபவமாக உள்ளது.