Published:Updated:

வெள்ளை அடிக்கலாம் வாரீயளா?! #MyVikatan

தொட்டியில் பேஸ்ட்டாகி இருக்கும் சுண்ணாம்பை சிறிய வாளிகளில் எடுத்து, வேண்டிய அளவுக்கு நீரையும், அரிசிச்சோறு வெந்து வடித்த கஞ்சியையும் சேர்த்துக்கொண்டு, தேவையெனில் வண்ணப் பொடியையும் கலந்து கொண்டு, சுவர்களை வெண்மையாக்க வேண்டியதுதான்!

வெள்ளை அடிக்கலாம் வாரீயளா?! #MyVikatan

தொட்டியில் பேஸ்ட்டாகி இருக்கும் சுண்ணாம்பை சிறிய வாளிகளில் எடுத்து, வேண்டிய அளவுக்கு நீரையும், அரிசிச்சோறு வெந்து வடித்த கஞ்சியையும் சேர்த்துக்கொண்டு, தேவையெனில் வண்ணப் பொடியையும் கலந்து கொண்டு, சுவர்களை வெண்மையாக்க வேண்டியதுதான்!

Published:Updated:

ஏழு வருடங்களுக்கு முன்னர் சென்னையை மூழ்கடித்த வெள்ளமும், அதனைத் தொடர்ந்து வந்த ‘வர்தா’ புயலும், வீடு, வாசல்களைக் களையிழக்கச் செய்தது மட்டுமல்லாமல், எத்தனை தடவை சுவர்களுக்கு வண்ணம் பூசினாலும் அதனை உரியச்செய்து உபத்திரவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில்இந்த வருடமும், புதிதாக வீட்டுக்கு வண்ணம் பூச உத்தேசித்து, முத்து மேஸ்திரியை அணுகினால், அவர் பெயிண்டர் செல்வத்தை அனுப்பி வைத்தார். செல்வம் வேலை செய்ய, மேற்பார்வைப் பணி நம்முடையது.

தஞ்சாவூர் மிராசுதாரர்கள், தங்கள் வயல்களில் விவசாய வேலை நடைபெறுகையில், வரப்பிலோ, களத்திலோ இருக்கும் மரத்தடியில் அமர்ந்து கொள்வார்கள். சுருட்டு அல்லது பீடி ஒரு பக்கம். வெற்றிலைச் செல்லம் மறுபக்கம். அன்றைய தினசரி பேப்பர், வார இதழ்கள், மடியில். நடுவில் பாட்டு, நியூஸ் கேட்க சிறிய டிரான்சிஸ்டர். காபி, சாப்பாடு என்று நேரத்திற்கு எடுத்து வர, பண்ணையார் என்றால் எடுபிடி ஆட்கள், மற்றவர்கள் என்றால், மனைவி, மகன் என்று வீட்டு உறுப்பினர்கள். அவர் மேற்பார்வை பார்க்க, வீட்டுக்கும் வயலுக்கும் இரண்டு, மூன்று பேர் அலைய வேண்டும்.

நானும் தஞ்சாவூர்க்காரன் என்பதால் இந்தப் பழக்கமெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், சின்ன வயதிலிருந்தே அந்தப் பழக்கத்தின் மீது ஒரு வெறுப்பு. உழைப்பவர்களுடன் சேர்ந்து உழைப்பதுதானே உற்சாகம். ஓரத்தில் உட்கார்ந்து குறை சொல்வது நன்றாக இருக்காது என்பது எனது கணிப்பு. அதனை நான் நடைமுறைப்படுத்தவும் செய்தேன்.

கொத்தும் நேரத்தில் வயலுக்குச் சென்றால், நானும் ஒரு மண்வெட்டியுடன் சேற்றில் இறங்கிக் கொத்துவேன். நடவு நேரத்தில் போனால், நாற்று முடிகளை வீசுவேன். சற்று விபரமான நடவுப்பெண்கள் நான் வீசுகின்ற நாற்று முடிகளைச் சேற்றில் விழாமல் கைகளால் பிடித்தபடி, ’ஐயா எனக்குப் புள்ள கொடுத்துட்டாரு!’ என்று கூப்பாடு போட்டுக் காசு கேட்பார்கள். எல்லாம் ஒரு விளையாட்டாகத்தான்! பிறகு நான் உஷாராகி அதனைத் தவிர்க்கும் உபாயம் அறிந்தேன். அறுவடை நேரம் என்றால் கதிர்க் கட்டைத் தூக்கி விடுவதிலும், நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றுவதிலும் கூலியாட்களுக்கு உதவுவேன். அப்புறமென்ன? நான் வயலுக்கு வரவேண்டுமென்று எங்கள் ஆட்களே விருப்பப்பட ஆரம்பித்து விட்டார்கள்.

எனக்கும் அவர்கள் மூலமாக விவசாய வேலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிகுதியாகவே இருந்தது. நான் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்ததாக எனது அம்மா சொல்வார்கள். அதனால்தானோ என்னவோ, எனக்கு எப்பொழுதுமே புதிய வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்திலும், உற்சாகத்திலும் குறைவு வந்ததில்லை. சுவர்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு, பெயிண்டர் வேலையை ஆரம்பித்தார். பட்டி பார்த்தார். பிரைமரை அடித்தார். மேலே இரண்டு கோட்டு (தடவை)வண்ணம் அடிப்பதாக அவர் சொன்னபோது, சின்ன வயதில் வீட்டுக்கு வெள்ளையடித்தது ஞாபகத்திற்கு வந்தது.

அப்பொழுதெல்லாம், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகச் சில வீடுகளில் வெள்ளை அடிப்பார்கள். பெரும்பாலான வீடுகளில் கோடையில் வெள்ளை அடிப்பார்கள். சுண்ணாம்புக் கிளிஞ்சல்களை வாங்கி, வீட்டின் ஓரமாக வைத்திருக்கும் பெரிய தொட்டிகளில் ஊற வைத்து விடுவார்கள். கிளிஞ்சல்கள் மீது தண்ணீர் பட்டதுமே அவை கொதிக்க ஆரம்பித்து விடும். நன்கு கொதித்து அடங்கியதும் பசையாகப் படிந்து விடும். அது கொதித்து அடங்குவதற்குள்ளாக வெள்ளை அடிப்பதற்கான பிரஷ்கள் தயார் செய்வார்கள். தென்னை மரத்தில் தேங்காய்கள் தொங்கும் அடித்தண்டுதான் பிரஷ். சுமார் ஒரு முழ நீளத்திற்கு உள்ள அதன் முனையைப் பிசிறு இல்லாமல் வெட்டி விட்டு, அந்த முனையை ஒரு கருங்கல்லிலோ, சிமெண்ட் தரையிலோ, மரப்பலகையிலோ வைத்து நன்கு கசக்கியடிக்க,

அதிலுள்ள வேண்டாத நார்கள் விலக, நூல் நூலாக அது பிரஷாய் விரியும். அந்தத் தூரிகை, பிரஷைத்தான் சொல்கிறேன், பல நாட்களுக்கு வரும். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்த பிறகு நீரில் ஊற வைத்து விட வேண்டும். தூரிகையை மென்மைப்படுத்த அதன் முன் நுனியைச் சற்றே நைச்சியம் செய்து கொள்ள வேண்டும். அப்புறமென்ன? தொட்டியில் பேஸ்ட்டாகி இருக்கும் சுண்ணாம்பை சிறிய வாளிகளில் எடுத்து, வேண்டிய அளவுக்கு நீரையும், அரிசிச்சோறு வெந்து வடித்த கஞ்சியையும் சேர்த்துக்கொண்டு, தேவையெனில் வண்ணப் பொடியையும் கலந்து கொண்டு, சுவர்களை வெண்மையாக்க வேண்டியதுதான்.

வீடு
வீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில், நான் பார்த்த அளவில், ஒரே வண்ணமே பூசப்படுகிறது. அதுவே ஒரு தனிஅழகையும் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகிறது.

பெரும்பாலும் ‘ராபின் ப்ளூ’வைத்தான் கலந்து அடிப்பது வழக்கம். குறைந்தது நான்கைந்து நாட்களுக்காவது வெள்ளை அடிக்கும் பணி தொடரும். இப்பொழுது, ப்ரஷ், ஸ்பான்ச் உருட்டு, ஸ்ப்ரே என்று பல முறைகள், வண்ணம் பூச, வழக்கத்திற்கு வந்து விட்டன. ஸ்பான்ச் உருட்டு, ஸ்ப்ரே ஆகியவை உபயோகிக்கும்போது, பெயிண்டின் அளவு அதிகமாகி விடும் என்று கூறப்படுகிறது. மேலும், பங்களாக்கள், மால்கள், பெரிய அலுவலகங்கள் என்று மிகப்பெரிய பரப்புக்கு வண்ணம் பூசும்போது மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது நலம் என்றும் சொல்லப்படுகிறது. வீடுகளுக்கு வண்ணம் பூச, ப்ரஷே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. முழு வீட்டிற்கும் ஒரே வண்ணம் பூசும் நிலைமை மாறி, வெளிப்புறத்திற்கு ஒரு வண்ணம், உட்புற அறைகளில் கூட, மூன்று பக்கங்களுக்கு ஒரு வண்ணமும், பார்வை படும் பக்கத்திற்கு வேறு வண்ணமும் என்று நடைமுறை மாறிக்கொண்டே போகிறது. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில், நான் பார்த்த அளவில், ஒரே வண்ணமே பூசப்படுகிறது. அதுவே ஒரு தனிஅழகையும் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகிறது.

நம்மூரைப்போல், கண்ணைக் கவரும் வண்ணங்களை வீடுகளுக்குப் பூசுவதை அவர்கள் தவிர்த்து விடுவதாகவே தெரிகிறது. பெரும்பாலும் வெண்மை வண்ணமே பூசப்படுவதையும், சில இடங்களில் சற்றே வண்ணம் மாறினாலும் அவையும் ‘லைட்’ கலர்களாக இருப்பதையுமே நான் கண்டேன். செல்வம், சுவரின் சில இடங்களில் சொர சொரப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டி, அங்கு பட்டியைச் சற்று அதிகமாக யஅப்ளை செய்வதாகக் கூறினார். சுவர் என்றதும் எனக்கு இரண்டு நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்து விட்டன. ஒன்று, எனது மூத்த சகோதரரின் வீட்டுக்கு, நானும் சித்தப்பாவும் சேர்ந்து மண்சுவர் வைத்தது. வீட்டுக் கொல்லையில் இருந்த மண்ணை வெட்டி, வாசலின் ஓரத்தில் வட்ட வடிவமாகப் பரப்பினார் சித்தப்பா. அதன் நடுவில் குழி பறித்து, எதிரே இருந்த திருக்குளத்திலிருந்து, பசுமையாகப் படிந்திருந்த பாசியை விலக்கி விட்டு, குடம் குடமாகத் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றினோம். கல், குப்பைகளைக் களைந்து விட்டு, சாணி மிதிப்பதைப்போல் மிதிக்க ஆரம்பித்தார் சித்தப்பா. நானும் துணை சேர்ந்து கொண்டேன். நன்கு மிதித்ததும் தண்ணீரை ஊற்றிக் கட்டி விட்டோம். இரண்டு, மூன்று நாட்களானதும், சித்தப்பா விரல்களால் மண்ணை நசுக்கிப் பார்த்து விட்டுப் பக்குவம் வந்து விட்டதாகக் கூறி, சுவர் வைக்க ஆரம்பித்தார். நான் இரும்புச் சட்டியில் அள்ளி வந்து கொடுக்க, அதனை அவர் அறைந்து, அறைந்து சுவராக்கினார். மரத்தாலான நீண்ட வாளைப் பயன்படுத்தி ஒழுங்கு படுத்தியபடி வேலையைத் தொடர்ந்தார்.

நாட்டு ஓடுகள் வேயப்பட்ட வீடுகள் எந்தப் புயலையும், எவ்வளவு மழையையும் தாங்கும் என்பார்கள். போகின்ற போக்கைப் பார்த்தால், இனி வரும் காலங்களில் அந்த ஓடுகளைப் பழம்பொருள் கண்காட்சிகளில் மட்டுமே காண முடியும் என்று தோன்றுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

’புளித்த மண், சரியாகப் பயன்படுத்தப்பட்டால் சிமெண்டை விடக் கடினமாகி விடும்’ என்ற சித்தப்பாவின் போதனை, இன்றைக்கும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. அவர் சொல்லில் உள்ள உண்மையை இரண்டாவது நிகழ்வில் நான் கண்கூடாகக் கண்டேன். எங்கள் பழைய வீடு கொஞ்சங் கொஞ்சமாகச் சிதிலமடைய, ஒரு கட்டத்தில் ஓடுகளை இறக்கி விட்டு, மரங்களையெல்லாம் பிரித்தெடுத்தபிறகு உயரமாக இருந்த மண்சுவரை நானும் எனது சகோதரரும் இடிக்க முயன்றோம். கடப்பாரை உள்ளே இறங்காமல் தெறித்தோடியது. அப்படி இறுகி இருந்தது அந்த மண்சுவர். தண்ணீரை ஊற்றி ஊற வைத்து, மிகுந்த பிரயாசைக்குப் பிறகே அசைந்து கொடுத்தது அந்த மண்சுவர். நம் முன்னோர்கள் எவ்வளவோ சிறந்த நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.

நாட்டு ஓடுகள் வேயப்பட்ட வீடுகள் எந்தப் புயலையும், எவ்வளவு மழையையும் தாங்கும் என்பார்கள். போகின்ற போக்கைப் பார்த்தால், இனி வரும் காலங்களில் அந்த ஓடுகளைப் பழம்பொருள் கண்காட்சிகளில் மட்டுமே காண முடியும் என்று தோன்றுகிறது. அதுபோலவே, கீற்றுகள் வேயப்பட்ட வீடுகளுக்கு, வைக்கோலைச் சிறு பிடிகளாகக்கட்டி ’பன்னல்’ போடுவார்கள். பின்னல் என்பதே பின்னாளில் பன்னல் என்றாகி விட்டது போலும். ஒரே சீராகப் பன்னலைப் பரப்பி, வைக்கோல் பிரிகளால் கட்டி விடுவார்கள். 40 டிகிரி வெயில் அடித்தாலும், உள்ளே வெப்பம் இறங்காது. அதுவும் கோடையில், தெற்கு பார்த்த வீடாக இருந்து, அடைப்புகள் ஏதுமின்றிக் காற்று வந்தால், ஏ. சி.,யில் இருப்பது போலவே இருக்கும்- எந்தச் செலவுமின்றி. ம்…அவையெல்லாம் எம் போன்றோருக்கு இனி கனவில்தான்.

Painting
Painting
ஏ.சி.யும் ஃபேனும் கண்டுபிடிக்கப்படாதிருந்தால் நம் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணும்போதே பயம் கவ்விக் கொள்கிறது. அவற்றைக் கண்டு பிடித்த மகான்களுக்கு மனதால் நன்றி சொல்வோம்.

இக்கால இளைஞர்களுக்கோ அவற்றைப் பற்றி எதுவுமே தெரியாது. பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதிலும் ஓர் ஆனந்தம் இருக்கவே செய்யும்! கோடை வந்ததனால், மனம் பழசை அசை போட ஆரம்பித்து விட்டது. ஏ.சி.யும், ஃபேனும் கண்டு பிடிக்கப்படாதிருந்தால் நம் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணும்போதே பயம் கவ்விக் கொள்கிறது. அவற்றைக் கண்டு பிடித்த மகான்களுக்கு மனதால் நன்றி சொல்வோம்.

இரண்டு அறைகளுக்கு வண்ணம் பூசி முடித்து விட்டதாக செல்வம் சொன்னார். மூன்று பக்கச் சுவர்களுக்கு லைட்டான கலரும், பார்வை படும் சுவருக்கு ஸ்ட்ராங்கான கலரும் என்பதுதான் தற்போதைய நடைமுறையாம். வண்ணங்களின் தேர்ந்தெடுப்பை மங்களத்திடம், என் மனைவியிடம்தாங்க, விட்டுவிட்டு நான் ஹாயாக மனதிற்குள் வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறேன்.

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism