வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
வகுப்பறைக்கு பெரும்பாலும் கடைசியாக வரும் நான் அன்று மட்டும் முதல் ஆளாய் வந்திருந்தேன் மாணவனாக அல்லாமல் முன்னாள் மாணவனாக....தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள்(2002-04) சந்திப்பு நிகழ்ச்சிக்கு பலதடவை முயற்சித்தும் பல தடைகள் வந்தது அதனால் சில நாட்கள் முயற்சித்து சிறப்பாக நடத்தினோம் சந்திப்பை...
வரவேற்பு வாசலில் 90s கிட்ஸ் மிட்டாய்களான சுத்து மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், கமர்கட்டு, கடலை உருண்டை வாசம் வேண்டும் என்ற என் ஆசையை கூற மறுக்காமல் மறுகணமே வாங்கி வந்து அசத்தினார்கள் நண்பர்கள்....

வகுப்பெடுத்த விரிவுரையாளர்கள் வம்பிழுத்த முன்னாள் சீனியர் மாணவர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள் ....
இனிதே தொடங்கிய விழாவில் நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்திருந்து நாள்பட்ட நினைவுகளை நகைச்சுவையாக பகிர்ந்தார்கள்....

மரத்தடியில் அமர்ந்து மதிய உணவு உண்ட போது சுவைத்தது உணவு மட்டும் அல்ல நாங்கள் நட்டு வளர்த்த மரத்தின் காற்றையும் தான்...
இருபது ஆண்டு முன்பு இருந்த அதே இடம் அன்று எங்களுக்கு சொர்க்கமாக மாறியது.... வகுப்பறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்த இரண்டு நிமிடத்தில் Time travel Machine ல் இருபது ஆண்டு பின் சென்ற உணர்வு ஏற்பட்டது..

நீண்ட நாட்களுக்கு பிறகு அலைபேசி தொடாமல் அனைவரும அரைப்பொழுதை களிப்புடன் கடந்தோம்.... நேரமின்மை காரணமாக நண்பர்களுக்காக யோசித்து வைத்த விளையாட்டுகளை விளையாடமல்போனது மட்டும் தான் அன்று ஒரே ஒரு வருத்தம்...
மீண்டும் ஒரு முறை நட்புக் காற்றை சுவாசிக்க காத்திருக்கிறோம் நானும் எனது நண்பர்களும்...
நன்றி!
மோ.குருமூர்த்தி, ஆசிரியர்
முன்னாள் மாணவர்
டயட்- உத்தமபாளையம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.