Published:Updated:

மனதை நிறைவாக்கிய மந்த்ராலய தரிசனம்! - இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan

Representational Image

வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிருந்தாவனம். அதன் நடுவில் ராகவேந்திரரின் தங்க உருவம் ,, முன் புறம் அழகான இரண்டு யானைகள், எதிரில் ஆஞ்சநேயரின் சிலை என அந்த இடத்திலேயே நீண்ட நேரம் நின்று ஜபம் செய்தது மறக்கமுடியாத நாளாக மாறியது.

Published:Updated:

மனதை நிறைவாக்கிய மந்த்ராலய தரிசனம்! - இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan

வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிருந்தாவனம். அதன் நடுவில் ராகவேந்திரரின் தங்க உருவம் ,, முன் புறம் அழகான இரண்டு யானைகள், எதிரில் ஆஞ்சநேயரின் சிலை என அந்த இடத்திலேயே நீண்ட நேரம் நின்று ஜபம் செய்தது மறக்கமுடியாத நாளாக மாறியது.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, மந்தராலயம் சென்று குரு ராகவேந்திரரை வழிபட்டு. போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோமே ஒழிய , செல்வதற்கான நேரம் அமையவில்லை. திடீரென்று, அடுத்த இரண்டு நாட்களுக்கு குடும்பத்தினர் அனைவருக்கும் முக்கியமான வேலை எதுவும் இல்லையே எனத் தோன்ற, மந்த்ராலயம் போகலாம் என முடிவெடுத்தோம்.

ரயில் டிக்கெட்டுகளும் கிடைக்கவே பயணம் உறுதியானது. மந்தராலயம் ரோட் என அழைக்கப்படும் சந்திப்பில் இறங்கி, மந்த்ராலயம் செல்ல ஆட்டோவில் பயணம். மாலை நான்கு மணி என்பதால் இனிமையான வானிலை, வழி நெடுகிலும் பருத்திச் செடிகள் மற்றும் மிளகாய் செடிகள் என அழகான சூழல். மந்த்ராலயம் சென்று சேர்ந்து, வரிசையில் நின்று, மகான் ராகவேந்திரரைப் பார்த்தது அவ்வளவு நிறைவாக இருந்தது மனதிற்கு.

Mantralaya
Mantralaya

வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிருந்தாவனம். அதன் நடுவில் ராகவேந்திரரின் தங்க உருவம் ,, முன் புறம் அழகான இரண்டு யானைகள், எதிரில் ஆஞ்சநேயரின் சிலை என அந்த இடத்திலேயே நீண்ட நேரம் நின்று ஜபம் செய்தது மறக்கமுடியாத நாளாக மாறியது. பிருந்தாவனத்தின் சற்று அருகிலேயே வெள்ளியினால் ஆன ராகவேந்திரரின் முழு உருவம் வைக்கப்பட்டிருந்தது. அவ்வளவு அழகான சிலை, அவர் மார்பில் இராமரின் உருவமும் அவ்வளவு அழகு. தாமரை மலர் மாலையால் முழு உருவத்தையும் அலங்கிரத்திருந்தார்கள்.

அதற்கு பக்கத்தில் ஸ்ரீ வதீந்தர தீர்த்தரின் பிருந்தாவனம் உள்ளது. அனைவரையும் வழிபட்டு பிரகாரம் சுற்றுகையில், ஏகப்பட்ட கூட்டம். ஒவ்வொருவரின் பிரார்த்தனைகள் ஒவ்வொரு விதம். அடிப்பிரதக்ஷனம் செய்யும் சிலர், அங்கப் பிரதக்ஷனம் செய்யும் சிலர், ஒவ்வொரு பாதம் எடுத்து வைக்கும் போதும் விழுந்து நமஸ்கரித்து என சிலர், பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கும் சிலர் என அந்தப் புண்ணியஸ்தலமே பக்தர்களின் பக்தியால் நிறைந்திருந்தது.

Mantralaya
Mantralaya

இரவு ஏழு மணிக்கு மேல், பிரகலாதரின் சிலை, முறையே வெள்ளி யானை, மரத்தேர், வெள்ளித்தேர், குதிரைகள் மற்றும் அன்னப்பறவைகளுடன் இருக்கும் தங்கத்தேர்களில் வைத்து ஆர்த்தி எடுத்து , மேளதாளங்களுடன், பிருந்தாவனத்தை வலம் வருவதைப் பார்ப்பது அருமையாக இருந்தது. கோவில் கூரையின் மேல் ஒரே ஒரு குரங்கு இருந்தது. அது சில சமயம், மேளத்தின் ஓசைக்கேற்ப கம்பிகளில் நின்று குதித்து குதித்து ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஊர்வலம் முடிந்தபின், பிரகலாதருக்கு ஊஞ்சல் வைபவம் . பிறகு இரவு நேர ஆரத்தி என அன்றைய பூஜைகள் முடிந்து விடுகின்றன. இரவு அனைவருக்கும் கோவில் வளாகத்திலேயே உணவும் வழங்கப்பட்டது.

எங்கெங்கோ சென்றாலும் கோவில்களுக்கு சென்று மனம் லயிப்பது போல் வருவதில்லை. கோவிலின் வெளிப்புறம் விளக்குகளால் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. உள்ளேயும் வெளியேயும் கூட்டம். நிறைய மாற்றங்கள் வெளியில்.. இன்னமும் கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். வெளிப் பிரகாரத்திலேயே மஞ்சாலம்மன் சந்நிதி இருக்கிறது.இவர் தான் ராகவேந்திரருக்கு இந்த மந்த்ராலயம் எனும் இடத்தைத் தந்தவர். துங்கபத்ரா நதிக்கரையில் இருக்கிறது மந்த்ராலயம். தற்போது நதியில் அவ்வளவாக நீர் இல்லை. இருந்தாலும் அங்கங்கு இருக்கும் நீரில் பக்தர்கள் குளித்து விட்டு சுவாமி தரிசனத்திற்காக வருகிறார்கள்.

Mantralaya
Mantralaya

இரவும் , மறுநாள் காலையும் பிருந்தாவன.தரிசனம் நிறைவானதாக இருந்தது. மீண்டும் தரிசனம் என்பது அவரின் அழைப்பில் தான் இருக்கிறது. மீண்டும் அழைப்பார் என்ற நம்பிக்கையுடன் இந்த பயணம் முடிந்தது.

கோவில்கள் , மடங்கள் இவையெல்லாம் ஏன் பராமரிக்கப்பட வேண்டும்,? எதற்காக புணரமைப்புப் பணிகளுக்கு இவ்வளவு பணத்தை செலவழிக்க வேண்டும் ?! என சிலர் கேள்விகள் எழுப்பவதுண்டு. ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் அனைவரும்,, தர்மம் என்ற ஒன்று தழைக்க கோவில்கள் அவசியம். அதன்.அவசியத்தை ஆழமாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

-Mrs. J. Vinu

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.