Published:Updated:

ரொமாண்டிக் மெலோ டிராமா `படகோட்டி’ - தற்கால விமர்சனம்| My Vikatan

Padagotti

நீச்சல் தெரியாதவங்க ஒரு நீர் நிலைல மூழ்கினா அவங்க உள்ளே தான் போவாங்க , இதுல ஒரு ஆளு மூணு தடவை நீர் மட்டத்துக்கு மேலே வந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கனு கையால அபய சைகை எழுப்பறாரு , அதுக்கு வாய்ப்பே இல்லை

Published:Updated:

ரொமாண்டிக் மெலோ டிராமா `படகோட்டி’ - தற்கால விமர்சனம்| My Vikatan

நீச்சல் தெரியாதவங்க ஒரு நீர் நிலைல மூழ்கினா அவங்க உள்ளே தான் போவாங்க , இதுல ஒரு ஆளு மூணு தடவை நீர் மட்டத்துக்கு மேலே வந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கனு கையால அபய சைகை எழுப்பறாரு , அதுக்கு வாய்ப்பே இல்லை

Padagotti

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

நாயகன், நாயகி இருவரும் சுறா , திருக்கை என்று சொல்லப்படும் இரு வெவ்வேறு மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் . நாயகன் அவர்களது சமூக மீனவர்களைத் தூண்டி வில்லனிடம் குறைவான விலைக்கு மீன்கள் விற்பதை தடுக்கிறார். அதிக விலை கொடுக்க வேறு ஒரு ஆள் தயாராக இருக்கிறார். ஆனால் வில்லனிடம் அட்வான்ஸ் வாங்கிய பணத்தை அடைக்க வேண்டும் . அதற்கு நாயகன் போராடுகிறார். இந்த போராட்டங்கள் எல்லாம் சைடு டிராக்கில் ஓட நாயகன் மெயின் ட்ராக்கில் நாயகியை காதலித்து வருகிறார். இறுதியில் என்ன ஆச்சு என்பதுதான் திரைக்கதை

படம் போட்டு ஒரு மணி நேரம் ஆகியும் படத்தின் கதை என்னவாக இருக்கும் ? என யூகிக்க முடியவில்லை . படம் முழுவதும் நாயகன் நாயகியுடன் சுற்றிகொண்டிருக்கிறார். அப்பப்ப டைம் பாஸ்க்கு வில்லன் கிட்டே சவால் விடறார், மீனவர்களிடம் ஏதோ பேசுகிறார் . திடீரென க்ளைமாக்ஸ் வந்துவிடுகிறது,

நாயகனாக எம் ஜி ஆர். இதில் அம்மா செண்ட்டிமெண்ட், தங்கை செண்ட்டிமெண்ட் இல்லாதது ஆச்சரியம்.

Padagotti
Padagotti

நாயகியாக கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி, மீனவப் பெண்மணியாக கொஞ்ச நேரம் , கோடீஸ்வரப்பெண்மணியாக நிறைய நேரம் தோன்றுகிறார்

வில்லனாக நம்பியார். அதிக வாய்ப்பில்லை , எடுபுடி வில்லனாக அசோகன், பாவம், சின்ன ரோல்

காமெடிக்கு நாகேஷ் , மனோரமா இருக்கிறார்கள், ஆனால் காமெடி இல்லை

வாலியின் வரிகளில் எட்டு பாடல்கள் செம ஹிட்டு , பாட்டுக்காகப் பார்க்கலாம்

ஒளிப்பதிவு ஈஸ்ட்மென் கலர்ல கலர்ஃபுல்லா எடுத்திருக்காங்க. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இனிமை , ஆனால் பிஜிஎம் சுமார் ரகம் தான்

சபாஷ் டைரக்டர் ( டி பிரகாஷ் ராவ்)

1 பலம் இல்லாத கதையை சூப்பர் ஹிட் சாங்க்ஸ் எட்டு மட்டும் வைத்து ஹிட்டாக்கிய லாவகம்

2 ஈஸ்ட்மென் கலர் ல படம் முழுவதும் கல்ர்ஃபுல்லா எடுத்த விதம்

செம ஹிட் சாங்க்ஸ்

1 தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் ( எம் ஜி ஆர் படங்களில் ஹீரோ ஓப்பனிங் சாங் சோகப்பாடலாக அமைந்தது இதுவே முதலும் கடைசியும்)

2 என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனானடி ( நாயகி சோக சாங்க் )

3 தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்ந்தேன் ( ஃபர்ஸ்ட் டூயட் சாங்)

Padagotti
Padagotti

4 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் , அவன் யாருக்காகக்கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான் , இல்லை ஊருக்காகக்கொடுத்தான் ( வில்லனுக்கான ஹீரோவின் தத்துவ சாங் )

5 அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் ( வில்லனின் முன் கிளாமர் டான்ஸ் )

6 நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி ( நாயகன் மாறு வேட்டமிட்டு நாயகியை கலாய்க்கும் சாங் )

7 பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதைக்கேட்டாயோ? ஹோய் , துள்ளி வரும் வெள்ளலையே, நீ போய் தூது சொல்ல மாட்டாயோ? ( பிரிவுத்துயர் சாங் )

8 கல்யாணப்பொண்ணு கண்ணானக்கண்ணு கொண்டாடி வரும் வளையல் ( நாயகன் மாறுவேடத்தில் வந்து வில்லனின் இருப்பிடத்தில் நாயகியை சந்திக்கும் சாங் )

ரசித்த வசனங்கள்

1 உதவினு கேட்டா அது எதிரியாக இருந்தாலும் உதவனும், அதுதான் பண்பு

2 யார் கிட்டே என்ன பேசறே?

என் மக்கள் கிட்டே அவங்க உரிமை பற்றி பேசறேன்

3 என்னம்மா குழம்பு ஊற்றச்சொன்னா மோர் ஊத்தறே? ரொம்பகுழம்பி இருக்கே போல

4 என்ன மாணிக்கம் ? சரித்திரத்தை மாற்றி எழுத நினைக்கிறயா? முதலாளிகளுக்குள் எப்பவும் போட்டியே இருக்காது , நாங்க ஒற்றுமையாதான் இருக்கோம்

5 நல்லது செய்யலாம்னுதான் மாணிக்கமா இருந்தேன், ஆனா இந்த உலகத்துல வேஷத்துக்குதான் மதிப்பு

6 நான் நல்லது செய்தாலும் மற்றவர்களுக்கு அது தப்பா தான் படும்

Padagotti
Padagotti

லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்

1 நீச்சல் தெரியாதவங்க ஒரு நீர் நிலைல மூழ்கினா அவங்க உள்ளே தான் போவாங்க , இதுல ஒரு ஆளு மூணு தடவை நீர் மட்டத்துக்கு மேலே வந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கனு கையால அபய சைகை எழுப்பறாரு , அதுக்கு வாய்ப்பே இல்லை

2 மற்ற படகோட்டிங்க எல்லாம் எப்பவும் நார்மலா இருக்காங்க, ஆனா நாயகன் மட்டும் எப்போப்பாரு படகோட்டி யூனிஃபார்ம்லயே இருக்காரு , அது ஏன் ? தொப்பியைக்கழட்றதே இல்லை , அதே போல காமெடியன் நாகேஷ் ஒரு சீன் ல தூங்கி எழும்போது கூட தலையில் மீனவரின் அடையாளமான தொப்பி இருக்கு , எதுக்கு ?

காலம் காலமா சினிமாக்களில் யாராவது சாப்பிட உட்காரும்போது சாப்பிடப் பிடிக்கலைன்னா சாப்பாடு இருக்கும் தட்டத்தில் தண்ணீர் ஊற்றி கை கழுவறாங்க . ஏன் உணவை வீண் ஆக்கனும்? நிஜத்தில் ஒரு மூடி போட்டு மூடி வைத்து பின் சாப்பிடுவதுதானே வழக்கம் ? நாயகன் , நாயகி இருவரும் இப்படி உணவை வீண் பண்றாங்க

Padagotti
Padagotti

5 லாங்க் ஷாட்ல காட்டும்போது அசோகன் மனோரமா படகை தன் படகால் வீழ்த்தி அவரை தண்ணீரில் விழ வைக்கும்போது நீர் நிலையின் மையப்பகுதியைக் காட்றாங்க, க்ளோசப் ஷாட்ல கரைல இருக்கற மாதிரி காட்றாங்க

6 படகோட்டிகளா வரும் அனைத்துத் துணை நடிகர்களும் மங்கலா இருக்காங்க , நாயகன் மட்டும் தங்கம் மாதிரி மின்னுறாரு , க்ரூப்ல டூப் மாதிரி இருக்கு .

நாயகி ஓப்பனிங் ஷாட்ல மீனவப்பெண்ணாக கச்சிதமான காஸ்ட்யூம்ல இருக்கார் , ஆனா நான்காவது ரீலில் இருந்து ஜமீந்தார் பொண்ணு மாதிரி மாறிடறார்.

Padagotti
Padagotti

ஃபைனல் கமெண்ட் - எம் ஜி ஆர் ரசிகர்கள் , பழைய பாடல் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் . ஆவரேஜ் மசாலா படம் தான் .

சுவராஸ்ய தகவல் - வாட்சப் க்ரூப் நண்பர் சொன்ன தகவல் . இந்தப்படத்தில் கம்யூனிச சித்தாந்தத்தில் கலக்கலான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலியை கவிஞர் கண்ணதாசன் நேரில் சந்தித்துப் பாராட்டினாராம், கை வசம் பணம் இல்லாததால் தன் கழுத்தில் இருந்த தங்க செயினை பரிசாக அளித்து வாழ்த்தினாராம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.